சரி ஏன் விமானத்தில் இவ்வளவு உணவுகள் இருக்க சிவிங்கம் பிரதானமாக கொடுக்க வேண்டும் என்று எப்போதாவது நீங்க சிந்தித்தது உண்டா?
அதற்கு ஒரு அறிவியல் காரணம் உண்டு என்று உங்களுக்கு தெரியுமா?
விமான பயணம்

இதற்கான காரணம் பூமியை அண்மித்து காணப்படும் வளிப்படையில் வாயு மூலக்கூறுகள் செறிவாக காணப்படும். மேல்நோக்கி வாயு மூலக்கூறுகளின் செறிவு குறைவடைந்து காணப்படும். இதனால் அமுக்கம் குறைவாக காணப்படும்.
சிவிங்கம் தொழிற்பாடு
எமது உடலின் சமநிலையை பேணுவதில் உட்காதின் தொழிற்பாடு அளப்பரியது. அவ்வகையில் உடலின் உள்ளக வெளியக அமுக்க சமநிலையை பேணுவதிலும் காது பங்கெடுக்கும்.
அதாவது காதில் உள்புறம் காணப்படும் வளி அமுக்கமும் காதின் வெளிப்புறம் காணப்படும் வளி அமுக்கமும் சமநிலையில் இருந்தால் மட்டுமே எமது கேட்டல் உணர்வு சீராக்கப்படும். இல்லையேல் காதில் அடைப்பு ஏற்பட்டது போன்ற உணர்வை உணர்வீர்கள்.

சிவிங்கம் மெல்வதன் மூலமாக வாயை திறந்து மூடுவீர்கள். இதனால் வெளிச்சூழல் வளிமண்ட அமுக்கத்திற்கு சமனாக உடல் உள்புற அமுக்கம் சமன் செய்யப்படும். இதற்காவே வான் பயணங்களின் போது சிவிங்கம் சாப்பிட தரப்படுகின்றது....
அதிகளவான வளிமண்ட அமுக்க வேறுபாடுகள் எமது காதில் தொழிற்படுமாயின் கேட்டல் வாங்கும் பகுதியான செவிப்பறை மென்சவ்வு வெடிக்கும் நிகழ்வுகள் கூட ஏற்படலாம்.
ஆனாலும் அண்மைய ஆகாயவிமானங்களில் உட்புற அமுக்க அமைப்பு சற்று வித்தியாசமாக பூமியின் மேற்பரப்பு அமுக்கம் போன்று செயற்படுத்த நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகின்றது. உதாரணமாக விண்வெளி ஓடங்கள்.
தேடல் வலைதளங்கள்
https://www.quora.com/How-does-chewing-gum-help-people-who-suffer-from-airplane-headache
https://traveltips.usatoday.com/stop-ears-popping-airplane-12522.html
No comments:
Post a Comment