
================ க.பொ.த (சா/த) பரீட்சையில்
இதோ நீங்களும் க.பொ.த (உ/த) கற்கை தொடர்ந்து பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புகளை அளிக்கின்றது கல்வி அமைச்சின் புதிய கற்கை நெறி பிரிவு....
13 வருட சான்றுப்படுத்தப்பட்ட கல்வி என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் கீழ்வரும் பாடங்களை நீங்களும் தேர்வு செய்து தொடர்ந்து பல்கலைக்கழகம் மற்றும் தொழில்சார் பட்டதாரியாக மாற முடியும்.
#பாடங்கள்
👉 சுகாதார மற்றும் சமூக சேவை
☑️குழந்தை உளவியல் மற்றும் பாதுகாப்பு
☑️ சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு
☑️ உடற்கல்வி மற்றும் விளையாட்டு
👉 வடிவமைப்பு தொழிநுட்பம்
☑️ உள்ளக வடிவமைப்பு
☑️ அலங்கார வடிவமைப்பு
☑️ கிரபிக் வடிவமைப்பு
☑️ கலை வடிவமைப்பு
☑️ இணையத்தள வடிவமைப்பு
☑️ தரை அழகு வடிவமைப்பு
👉 தொழிநுட்ப கல்வி
☑️ நிர்மாணத்துறை தொழில்நுட்பம்
☑️ மோட்டார் இயந்திர தொழில்நுட்பம்
☑️ மின் மற்றும் மின்னனு தொழில்நுட்பம்
☑️ ஆடை தொழில்நுட்பம்
☑️ அலுமினியத் தயாரிப்பு தொழில்நுட்பம்
☑️ உலோக தயாரிப்பு தொழில்நுட்பம்
☑️ மென்பொருள் அபிவிருத்தி
👉 சமூக கலாசார கல்வி
☑️ கலை நிகழ்ச்சி
☑️ நிகழ்ச்சி தொகுப்பு முகாமைத்துவம்
☑️கலை மற்றும் கைவினை
👉 விவசாய மற்றும் உணவு தொழிநுட்பம்
☑️ தோட்ட கலை தொழில்நுட்பம்
☑️ கால்நடை வள உற்பத்தி தொழில்நுட்பம்
☑️ உணவு பதப்படுத்தல் கல்வி
☑️ நீரியல் வள தொழிநுட்பம்
☑️ பெருந்தோட்ட பயிற்செய்கை உற்பத்தி தொழில்நுட்பம்
👉 சுற்றாடல் துறை கல்வி
👉 சுற்றுலா மற்றும் விருந்தினர் உபசரிப்பு
#மேலதிக_தகவல்
மேற்படி கற்கை நிறைவை தொடர்ந்து நீங்கள் உங்களின் கற்றல் சான்றிதழ் கொண்டு கீழ்வரும் அரச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் உங்களின் Diploma, Higher National Diploma (HND), Digree பட்டப்படிப்பை தொடர முடியும்.
இவை அனைத்தும் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை (Vocational Training Authority - VTA) அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
#பல்கலைக்கழகம்_University
👉 UNIVERSITY OF VOCATIONAL TECHNOLOGY (UNIVOTEC)
கொழும்பு இரத்மலானையில் அமையப்பெற்றுள்ள இக்கல்லூரியில் Diploma, HND, Digree, Master Digree கற்கை கூட முழுநேரம், பகுதி நேரமாக உங்களால் தொடர்பு கொள்ள முடியும்.
web - univotec.ac.lk/
👉 UNIVERSITY COLLEGE
UNIVOTEC கல்லூரியின் உப பிரிவாக இலங்கையில் இரத்மலானை, குளியாப்பிட்டி, அனுராதபுரம், யாழ்பாணம், மாத்தறை போன்ற 5 இடங்களில் உண்டு. இவற்றில் HND மற்றும் NAITA Training உடன் உங்களிற்கு பட்டம் அளிக்கப்படும்.
சில வருடங்களில் கிண்ணியா மண்ணிலும் இது நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தகது.
👉 SLIATE - Advanced Technological Institute
இலங்கையின் lபல்வேறு பாகங்களிலும் இக்கல்லூரிகள் உண்டு. இதில் மாணவர்களுக்கான மகாபொல, பேசரி கொடுப்பணவுகள் கூட வழங்கப்படுகின்றது.
web - www.sliate.ac.lk/
👉 Technical College
இலங்கையில் பல்வேறு இடங்களில் இதுவும் அமையப்பெற்றுள்ளது.
👉 German Training Institute | SLGTI
வெளிநாட்டு அங்கீகாரம், மற்றும் உள்நாட்டு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் இது. இங்கு கற்கை நிறைவுறும் மாணவர்களுக்கு என்று ஜெர்மன் நாட்டில் விசேட சலுகை கூட வழங்கப்படுகின்றது மேற்படிப்பை தொடர.
web - slgti.com
👉 Hardy Advanced Technological Institute
விசேட கற்கைநெறிகள் NVQ 4,5 வரை வழங்கப்படுகிறது. இங்கே மாணவர்களுக்கான சிறிய கொடுப்பனவு திட்டம் மற்றும் விசேட சலுகைகள் கூட தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
web - hardyati.edu.lk
No comments:
Post a Comment