Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 31, 2019

மாற்று சக்திவளங்களை நுகர்வோம்

சூரிய சக்தி நுகர்வை பரவலாக்கம் செய்வோம் 
Related image
உலகளாவிய மானிட சனத்தொகை வளர்ச்சி வீதம் வரைப்பிற்கு y அச்சை நோக்கிய சமாந்தர போக்கை காண்கின்ற வேளையில் குறிப்பாக வளர்முக நாடுகள் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்றே சக்திவள தட்டுப்பாடும் நுகர்வுக்கான நாளாந்த கேள்வியும். 
இலங்கையை பொருத்தமட்டில் தெற்காசியாவில் 98% சதவீத சக்திநுகர்வை எட்டியுள்ளமை பாராட்டத்தக்கது. இலங்கையின் மின்னுற்பத்தியில் நிலக்கரி பயன்படுத்துகின்ற அனல்மின் சக்தி (Thermal power), நீர்மின் உற்பத்தி (hydropower) மற்றும் புதுப்பிக்கத்தக்க சூரிய, காற்று வலு மின்சக்தி (non-conventional renewable) குறிப்பிட்டுக்கூறலாம். 
2017 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் 4,043 மெகாவாட் ஆகும். 900 மெகாவாட் நிலக்கரி மின்சாரம், 1,215 மெகாவாட் அனல்மின் வெப்ப ஆற்றல், 1,720 மெகாவாட் நீர்வழங்கல் மற்றும் 208 மெகாவாட்   புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களான காற்றாடி, மினி ஹைட்ரோ, உயிர்த்திணிவு (Biomass) மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள். இருந்தபோதும் நாட்டின் மொத்த மின்சக்தி தேவை ஆண்டுக்கு  14,150 GWh ஆகும். "பற்றாக்கறை...."
Related imageநீர்மின் உற்பத்தி 
சாதகம்  - சூழல் மாசடைவு குறைவு, அதிக அளவான சக்தி உற்பத்தி, மலிவான மற்றும் பரந்த அளவிலான நீர்மின் வள பிரதேசங்கள். 
பாதகம்  - கோடை காலங்களில் நீர் தட்டுப்பாடு காரணமாக சக்தி உற்பத்தியில் தடங்கள் மற்றும் தேறிய சக்தி வீதம் குறைவு. 
அனல்மின் உற்பத்தி 
சாதகம்  - பாரிய அளவிலான தேறிய மின்சக்தி விளைவு. 
பாதகம்  - சூழல் மாசடைவு, மனிதனுக்கு ஆபத்து. 
உயிர்த்திணிவு மின் உற்பத்தி 
சாதகம்  - இலாபகரமானது, மீள் பாவனைக்கு கழிவுகள் பயன்படுத்தப்படும். 
பாதகம்  - குறைந்த அளவிலான சக்தி உற்பத்தி. 
காற்றலை மின் உற்பத்தி 
சாதகம்  - இலாபகரமானது. சூழல் மாசடைவு இல்லை, தொடர்ச்சியான சக்தி உற்பத்தி. 
பாதகம்  -  எல்லா இடங்களுக்கும் பொருத்தமில்லை, ஆரம்பச்செலவு உயர்வு. 
சூரிய மின் உற்பத்தி 
சாதகம்  - இலாபகரமானது, மின்சக்தி தொடர்ச்சியாக பெறமுடியும், சூழல் மாசடைவு குறைவு, சக்தி சேமிப்பு மற்றும் கையாடல் இலகு. 
பாதகம்  - எல்லா காலங்களிற்கும் எல்லா இடங்களிற்கும் பொருத்தமில்லை. 

சக்திவள முகாமைத்துவம் மற்றும் உற்பத்தியில் இலங்கை பின்னணியில் உள்ளதனை ஆண்டுக்கான சக்தி தட்டுப்பாட்டு நிரூபணம் செய்கின்றது. இலங்கையில் நீர்மின் உற்பத்திக்கு பதிலாக சூழல் பாதகமற்ற சக்தி உற்பத்தியில் சூரியபடல் மின்னுற்பத்தி மற்றும் காற்றலை என்பன பரவலாக்கம் செய்வது காலத்தின் தேவையாக உள்ளது. 
Related image
மத்தியகோட்டை அண்டிய நாடென்ற வகையில் ஆண்டின் பெரும்பகுதி காலம் மற்றும் மொத்த நிலத்தில் 70% பெரும் நிலப்பரப்பு சூரிய ஒளியை பெற்றுக்கொள்ளும் சாதகமுள்ளது. இருந்தபோதும் நாட்டின் அபிவிருத்தியில் பல்வேறு புதுவித வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் அரசின் திட்டத்தில் சக்தி உற்பத்தி பற்றிய பின்னடைவு சித்தாந்த சிந்தனை மாவட்ட ரீதியாக நேரசூசி வழங்கிய மின் துண்டிப்பை அறிமுகம் செய்துள்ளது. 
Image result for energy sources in sri lanka
மானிய முறை அடிப்படையிலான சூரியபடல் (Solar-Cell) வழங்கும் திட்டம் நாட்டில் உலர்வலைய பிரதேசங்களில் அறிமுகம் செய்யப்படுமாயின் சுயமின் உற்பத்தியில் ஒவ்வொரு குடில்களும் பொறுப்பேற்றுக்கொள்ளும் நாட்டின் சக்தி தட்டுப்பாட்டை. 
நாட்டில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டாகாலி நிலங்களையும், ஒவ்வொரு வீட்டிலும் மற்றும் அலுவலகங்களிலும் சூரியப்படலை பயன்படுத்திய மின்சார உற்பத்தி மேற்கொள்ள எம்மிடம் பெரும் வளங்கள் இருக்கின்றபோதிலும் நாம் இன்றுவரை இதனை பயன்பாட்டில் நடைமுறைப்படுத்துவதில் பிற்போக்கு சமூகமாக இருப்பது என்பது எமது அறியாமை உளவியல் குறைப்பாட்டை வெளிக்காட்டி நிற்கின்றது. எனவே தனிமனித மனநிலை மாற்றம் ஒரு சமூக மாற்றத்துக்கான முதற்படி என்ற எண்ணக்கருவில் புதிய வீடுகள் நிர்மாணம் மற்றும் புதிய தொழில்தள அமைவிடத்தில் சிறிய அளவிலான சூரியப்படலை அறிமுகம் செய்து நாட்டின் சக்தித் தட்டுப்பாட்டில் கைகொடுப்போம்.... 
அத்தோடு இலங்கையை சூழ கடல் சூழல் காணப்படுவதனால் கடல் அலை சக்தி மூலமான மின் உற்பத்தி இதுவரை இலங்கையில் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது துரதிஷ்டம்தான்... 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages