
தொழில்சார் கல்வியை அறிமுகம் செய்வோம்.....
கடந்தகாலங்களில் அல்லாமல் சமகாலங்களில் பாரிய முன்னேற்றமடைந்துள்ள மதரஸாக்களின் #உலகளாவியரீதியான_அடைவுகள் மற்றும் வெளியீடுகள் எம்மையும் எமது சமூகத்தையும் ஓரளவேனும் #திருப்திப்படுத்துகின்றது. ஆய்வு, தேடல், வாசிப்பு மற்றும் பல்துறை கண்ணோட்டத்தில் மௌலவி மாணவர்களின் புத்தாக்க சிந்தனை மேலும் வலுவூட்டப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இப்பதிவு....
அன்மைக்காலங்களில் #மதரஸாக்களின்_உயர்தரக்_கல்வி பற்றி சற்று பார்த்தோம் ஆனால் குறிப்பிட்ட சில பாடத்தேர்வுகளை அதுவும் இஸ்லாம், அரபு, இஸ்லாமிய நாகரீகம் என்ற அவர்களின் #துறைசார்_பாடங்களைத்_தேர்வு செய்து சித்தி அடைகின்றார்கள். ஆனாலும் சமகாலங்களில் கல்வியல் ரீதியான போட்டி, மற்றும் வேலைவாய்ப்பு, பல்கலைக்கழகம் நுளைவுகளின் வடிகட்டிய தேர்வுகளில் மௌலவி கற்கை மாணவர்கள் பலர் வாய்ப்புகள் இழக்கும் நிலைமை பரவலாகியுள்ளது.
மார்க்கம் கற்ற மௌலவிமார்கள் உள்நாட்டில் தனக்கென வேலையில்லாத பிரச்சினை காரணமாக வெளிநாடுகளிற்கு மிகக்குறைந்த சம்பளம் பெரும் வேலைகளிற்கு செல்வதை காண்கின்றேன். அத்தோடு உள்நாட்டில் தொழிசார் தகமை விருத்தி பின்தங்கிய நிலைமை காரணமாக அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்படும் துர்பாக்கிய சூழல் எழுந்துள்ளது.
மேற்படி நிலை குறித்து நாம் எதிர்காலங்களில் எவ்வாறான நடைமுறை சாத்தியமான திட்டங்களை அமிலாக்கவேண்டும் என்பதில் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மானிடத் தனியன்களுக்கும் பாரிய பொறுப்புண்டு. அவ்வகையில் நாம் இதுபற்றி மீள்வாசிப்பு செய்யவேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளோம்.
மதரஸாக்களின் Mission, Vision குறித்து நாம் ஆழமாக நோக்கினால்..... பாரிய குறைப்பாட்டை நாம் தொடர்ந்தும் எமது வறட்டு கௌரவத்தினால் இச்சமூகத்தை ஆளும் ஆளிம்களிடத்தில் திணிக்கின்றோம் என்று கூறுவேன்.
அதுவென்னவெனில் #தொழில்சார்_வழிகாட்டல்_அற்ற_மதகுருக்களை நாம் வெளியீடு செய்கிறோம். இதன் தாக்கம் மக்கள் மன்றத்தில் புனிதமிக்க மானிட தலைமை சமூகத்தை மரியாதை வழங்கப்படாத புறம்போக்கு சமூகமாக நோக்கும் சமூக அரங்கு மனநிலை தோற்றுவித்துவிட்டது.
எமது சக்திவாய்ந்த அல்குர்ஆன், அல்ஹதீஸ் சுமந்த ஆலிம்களை ஆளுமை மிக்க மானிட வளங்களாக தயாரிப்பதில் எமது வகிபாகம் என்ன????
முக்கிய ஆலோசனை.....
தொழில்சார் கல்வி கற்ற தரமான தொழில் தகமைகள் கொண்ட மௌலவிகள் உருவாக்குவதற்கு முன்வரவேண்டும்.
இதற்காக பாடசாலைகளைப் போன்று மதரஸாக்களின் கல்வித்திட்டம் மீள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
ஊரின் உள்ளக அபிவிருத்திகளில் வெளிநாட்டு உதவிகள் பல கொட்டப்பட்டு குவிக்கப்படும் தளம் மதரஸாக்களில் வெளியான மௌலவிகள் பக்கட்டுக்கள்தான். ஏன் நீங்கள் கற்ற மதரஸாக்களில் ஒரு தொழில்நுட்ப கற்கை பீடத்தை நிறுவதற்கு முடியாது போனது இதுவரை????
#தண்ணியில்லாத_கிணறு, #காக்கா_கழிக்க_கக்கூசு, ஒரு வரிகூட முழுமை பெறாத தொழுகை #ஆளில்லா_பள்ளிவாசல், இவற்றை தாண்டி பெருமைக்கும் கௌரவத்திற்கும் அலங்கரிக்கப்படும் பள்ளிவாசல்கள் செலவு செய்யும் தொகையில் சிறு தொகையை எமது #மதரஸாக்களின்_கற்றல்_வளங்களை_நவீன_மயப்படுத்துவதில்_முதலீடு செய்யுங்கள்....
இல்லை என்றால் குறிப்பிட்ட நேரத்தை மதரஸா மாணவர்களை பாடசாலையில் நடைபெறும் தொழில்நுட்ப கல்வி கற்க அனுமதியாவது வழங்கலாம் அல்லவா???
இதனை ஊரின் கல்விசார் சமூகம் ஒழுங்கமைக்க முடியாதா?
அதற்காக #முழுநேர_தாயிகளையும்_மார்க்க_அழைப்பாளர்களையும் உருவாக்குவதில் கோட்டை விட்டுவிடாதீர்கள்.....
காரணம் கூறாது காரியங்களை நடைமுறைப்படுத்த முன்வாருங்கள். எம் சமூக தலைமைகளை மீள் சமைத்து எம்மை ஆளும் ஆளுமைகளாக உருவாக்குவோம்.
No comments:
Post a Comment