மழைகாலங்களில் இடி ஒலி கேற்பது சகஜம். ஆனாலும் சில பொழுதுகள் வெயில் காலங்களிலும் இடியொலி கேற்கின்றது தானே? அவ்வாறாயின் மேகங்கள் மோதுவதனால் இடி சத்தம் உண்டாக வாய்ப்புண்டா? இல்லை தானே
முதலில் இடி மேகங்கள் மோதுவதனால் உண்டாவதில்லை என்று புரிந்துகொள்வோம்.
சரி அவ்வாறாயின் எப்படி இடி சத்தம் உண்டாகின்றது?
மின்னல் பற்றி சற்று விளக்கினால்தான் இடி ஒலி எவ்வாறு தோன்றுகின்றது என்று விளங்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகின்றேன்.
மின்னல் (Lightning)

பல்லாயிரக்கணக்கான நீர்த்துளிகள் மூலமாக மிகப்பெரும் ஏற்றத் தொகுதி மேகம் ஒன்றில் காணப்படும். இவ்வாறு காணப்படும் ஏற்றம் ஏதாவதொரு இடத்தின் ஊடாக கடத்தப்படும் போது இலத்திரன் ஓட்டம் காரணமாக சக்திவாய்ந்த மின்சக்தி ஒன்று பாயும். இதுவே மின்னல்.
மின்னல் 1 Billion volts, 200,000 Amperes மின்சக்தியை கொண்டது. இதனால் பிறப்பிக்கப்படும் வெப்பம் ஒரு பொருளை உருக்கி ஆவியாக்கிவிடும். இந்நிலைமை காரணமாக மின்னல் உண்டாக்கும் சேதம் அதிகமாக உள்ளது பூமியில். பெரும்பாலான மின்னல் அடுத்தடுத்த மேகங்கள் இடையே உண்டாகின்றது.
இடி ஒலி (Thundering)
இடி சத்தம் என்பது மின்னல் காரணமாக தோற்றுவிக்கப்படும் இரண்டாவது விளைவு. மின்னல் காரணமாக உருவாகும் சக்திவாய்ந்த வெப்பத்தில் மின்னல் உருவாகும் இடத்தில் சூழவுள்ள நீர்,மற்றும் ஏனைய பொருட்கள் சடுதியான பதங்கநிலை / ஆவிநிலைக்கு நிலைமாற்றம் பெரும். இதனால் குறித்த இடத்தில் ஒரு வெற்றிடம் ஒத்த சூழல் உருவாகும்.

இவ்வாறு உருவாகும் வெற்றிடத்தில் வளி மூலக்கூறுகள் சடுதியாக ஒடுக்கமடைவதன் காரணமாக உண்டாகும் ஒலியே இடி முழக்கம்.
இந்நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டை துப்பாக்கி ரவையில் இருந்து விடிவிக்கப்படும் தோட்டா ஆரம்ப நிலை, விண்வெளி ஓடங்கள் பயணம், ஏவுகணை இயக்கம், Super Sonic விமானங்கள் பயணிக்கும் போது உண்டாகும் Boom Sound நிலைப்பாடுகளுக்கான வேறு உதாரணங்களாக சுட்டிக்காட்டலாம். இவைகளின் போது அதிர்வலைகள் (shock waves) தோற்றம்பெறும்.
No comments:
Post a Comment