ஒன்று - தன்னைத் தானே கனவின் களத்தில் காண்பதும் அதை கொண்டு கதை நகர்வு அமைவதும். இக்கனவுகளில் உங்களின் முகத்தை நீங்களே கனவில் காணமுடியும். இவ்வகை கனவுகளை ஒத்த களத்தையே பெரும்பாலான மரபுவழி சிறுகதை எழுத்தாளர்கள் அதிகம் ஆகர்சிக்கின்றார்கள்.

மூன்றாம் தரப்பு - கனவு காட்சி அமைப்பின் மூன்றாம் நிலை கதை களத்தைவிட்டு வெகு தொலைவில் எமது பாத்திரம் அமையும். தொடர்பற்ற வகிபாகத்தை கொண்டிருக்கும் நாம் ஏதோவொரு கட்டத்தில் மட்டும் பங்குபெற வாய்ப்பு கிடைக்கும். அந்நிலையில் கனவின் முழு கதை அமைப்பும் எம்மை சார்ந்துவிடும். மூன்றாம் நிலை அமைப்பையே நவீன எழுத்தாளர்கள் பிரதான போக்காக காணமுடிகிறது. இதற்கான காரணம் சூழலில் அவர்களின் அனுபவ, சம்பவங்களை கதைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

உண்மையை உண்மையாக கூறுவதும், உண்மையோ பொய்யோ அவற்றை ரசனையோடு மெருகூட்டி கூறுவதும் அவற்றின் தத்துரூபம். அத்தோடு முடிவு மகிழ்வாகவும், சோகமாகவும் முடிவுறும் பின்னணியில் மற்றுமொரு நவீன எழுத்தாளர்களின் புதுமை முடிவை தொக்கிவைத்து வாசகன் தீர்மானத்திற்கு ஒப்படைப்பது. இதில் வாசகன் குழப்பம் அடைவதோடு மாத்திரமன்றி அவன் திருப்தியும் அடைகிறான் என்று முழுமையாக சாடமுடியாது. எனினும் கதை வாசகன் மத்தியில் தாக்கம் ஏற்படுத்துகின்றது என்பதை மட்டும் முழுமையாக நம்பமுடியும்........
No comments:
Post a Comment