அண்மைகால மாணவர்களின் கல்வி வளர்ச்சி, அதன் மீதான விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் என்பன பாரிய முற்போக்கொடும் முனைப்போடும் வளர்சியுருவது வரவேற்கத்தகது. நவீனத்துவ போராட்டமிக்க உலகோடு போட்டிபோடும் புதிய தலைமுறையின் தேடல், முயற்சி மற்றும் போராட்ட களம் ஒருபுறம் இவ்வாறு கூர்ப்புற்று காணப்பட மறுபுறம் அவர்கள் வாழ்வில் அனுபவிக்கப்பவேண்டிய பல சுவாரசியமான நிகழ்வுகளையும் அனுபவங்களையும் தவறவிட்டு துரதிஸ்டவாளிகளாக நவீன உலகின் இயந்திர மனிதனை ஒத்த வாழ்க்கை கோலத்தில் சுழன்றுகொண்டு வாழ்வை கடத்துவது அவதானிக்கையில் வேடிக்கையோடு கவலையாகவும் உள்ளது...
கருவுற்றதும் கருவிலே இத்துறைக்குத்தான் என் குழந்தை வளர்க்கப்படவேண்டும் என்று முத்திரை குற்றப்பட்டு காப்பகத்தில் வளர்க்கப்படும் விலங்குகள் போல் நேரசுசி இட்டு இயங்கிட அவர்களை நாங்கள் திணிப்பதோடு மாத்திரமன்றி அவர்களிற்கு அவ்வாறே நாங்கள் பழக்கப்படுத்தி அடிமையாக்கப்பட்டு புரோகிராம் செய்துவிடுகின்றோம்.
இதன் தாக்கம் அன்பு, விட்டுக்கொடுப்பு, தோல்வி ஏற்கும் மனோநிலை, முரண்பாட்டு அணுகுமுறை தலைமைத்துவ ஆளுமை விருத்தி குழுவில் செயற்பாடு மற்றும் கலை கலாசார பொழுதுபோக்கு என்று எந்தவித சமூகவியல் ஆளிடை தொடர்புகளும் அற்று வளர்க்கப்படுவது என்பது சிறைச்சாலை கைதிக்கு ஒப்பாக உள்ளது.

இதன் காரணமாக ஆளுமை விருத்தியற்றதும், ஆளிடை தொடர்பு அற்றதுமான வெளியுலகு அறியாத புத்தகப்பூசிகளையே உருவாக்க முடியும். இதனால் மன அழுத்தம், உடல் ஆரோக்கியமற்ற சந்ததி உருவாக்கத்தையே நாங்கள் விளைவிக்க முடியும். அத்தோடு அடுத்த சந்ததியில் அறிவு மட்டும் நிறைந்த பண்பாடு ஒழுக்கவியல் மற்றும் ஆளுமையற்ற தலைமைகளை நாங்கள் காணமுடியுமாக அமையும்....
எனவே இதுகுறித்து எமது சமூகம் தீர்க்கமான முடிவுகள் எடுக்கவேண்டிய தேவைப்பாடு எழுத்துள்ளது என்பதை தனிநபர் ஒவ்வொருவரும் உணரவேண்டிய தருணத்தில் உள்ளோம்...
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தினத்திலாவது தரம் 9 க்கு உட்பட்ட மாணவர்களிற்கு வெளியக வகுப்புகள் முழுமையாக தவிர்க்கச் செய்தால் நான் கீழ் சுட்டிக்காட்டும் பல அனுகூலங்களை அம்மாணவர்கள் அனுபவிக்க வாய்ப்பளிக்க முடியும்....
👉 ஒய்வு பெற்றுக்கொள்வார்கள்
👉 விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பயணங்கள் மேற்கொள்வார்கள்.
👉 குடும்ப உறவுகளை சந்திக்கவும் தங்களின் நண்பர்களை சந்திக்கவும் நேரம் ஒதுக்குவார்கள்.
👉 வீட்டு வேலைகள், வீட்டின் உள்ளக வெளியக ஆளுமை விருத்தி போன்றவற்றை பழகுவார்கள்.

👉 புத்தாக்க சிந்தனைகளான வீட்டுத்தோட்டம், உடல் பயிற்சி, வாசிப்பு மற்றும் எழுத்து பணிகளையும் மற்றும் இணைப்படவிதான செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும்.
👉 மார்க்க அறிவு, கலை, கலாசார பண்பாட்டியல் செயற்பாடு, குழு நிகழ்ச்சி செயல்திட்டங்களையும் ஆக்கப்போர்வமான சமூகவியல் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவும் இதனூடாக ஆளுமை விருத்தி செயற்பாடுகளையும் மேற்கொள்வார்கள்.
இது குறித்து அவசரமாக ஊர் தலைமைகள் கல்வி சார் சமூகம் ஆரோக்கியமான முடிவுகளை எட்டவேண்டும் என்று பொதுமகனாக இவ்விடத்தில் முன்வைக்கின்றேன்.
No comments:
Post a Comment