
குறிப்பாக ஆண்பிள்ளைகளை இங்கே எனது பதிவில் அதிகம் பேசவேண்டிய தேவை உண்டென்பதனால் அதனை குறித்தே பதிவின் முழு பார்வையையும் ஒருக்கியுள்ளேன்.
கட்டிளமைப்பருவதில் உடலியல் ஓமோன்களின் தொழிற்பாடுகள் காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்களை விட உளம் மற்றும் சமூக மாற்றங்கள் பற்றிய தெளிவின்மை காரணமாக பெற்றோர் பிள்ளை ஆளிடைத்தொடர்பு பெரும் விரிசல் உண்டாகின்றது. இதன் தாக்கம் முறையற்ற வழிநடத்தல் மற்றும் தவறான ஆளுடை வட்டம் மற்றும் நண்பர்கள் பிணைப்பு என்பன வளர்க்கப்பட காரணமாகின்றது.

உளவியல் மாற்றம் காரணமாக குழந்தையானது தன்னை சமூக மட்டத்தில் ஒரு அந்தஸ்து மிகுந்த ஒரு மானிட தோற்றத்தை உணர்வான். இதற்கான அடித்தளமாக சமூகவியல் செயற்பாடுகள், தலைமைத்துவ வகிபாகம் மற்றும் குழுவில் செயற்பாடுகள், ஆளுமை விருத்தி சார் செயற்பாடுகளில் அதீத ஆர்வத்தை காட்டுவார்கள். இதற்கான அடிப்படை நோக்கம் அவர்கள் தங்களை சமூக அரங்கில் அடையாளப்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
இதனை முன்னைய தலைமுறையான பெற்றோர், ஆசிரியர், ஆன்மீக தலைவர்கள் வாய்புகள் வழங்கி வழிகாட்டி வழிநடத்திட முன்வரவேண்டும். காரணம் முறையற்ற வாய்ப்புகள் கிடைக்காமை, எதிர்பார்புகள் நிறைவேறாமை என்பன ஒருவகை உளச்சோர்வை ஏற்படுத்தி சமூகத்தின் மீதான அவநம்பிக்கை மற்றும் தனிமை நாடும் போக்கு அத்தோடு தாழ்வுச்சிக்கல் காரணமாக சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றமை போன்ற பல துர்பாக்கிய சூழல் உருவாகும்.
எதிர்பால் கவர்ச்சி காரணமாக தங்களை அழகாகவும் வசீகரமாகவும் காட்சிப்படுத்த முயற்சிப்பார்கள். இத்தருங்களில் உடல் அழகியல் பற்றிய கரிசனை அதிகம் காணப்படும். இதற்காக அதிக நேரங்களை ஒத்துகுவார்கள். இவ்வாறன பொழுதுகளில் அவர்களின் உடை, உணவு, உடல் அமைப்புக்கு தேவையான பொருளாதார வழிகளை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இல்லையேல் அவர்களின் தேவையை நிறைவு செய்ய களவு, திருட்டு, பொய் பேசுதல் போன்ற துர்நடத்தை காண்பிக்க வாய்ப்பாகும். குறிப்பாக அழகியல் ஆர்வத்தை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். இதனால் தங்களையும் தங்களை சார்ந்த சூழலையும் அழகாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பேணுவதும் அதனை ஒழுங்குபடுத்துவதும் வளர்க்கப்படும்.
பல பெற்றோர்கள் அவர்களின் ஆர்வத்தை ஒரு பிற்போக்கு சிந்தனையோடு நோக்குவதனால் அவர்கள் ஏனைய சம வயதுடையோர் மத்தியில் ஏற்றத்தாழ்வையும் அவமானத்தையும் உணர்ந்து தன்னிலும் தன்னை சார்ந்த குடும்பத்திலும் வெறுப்புணர்வை உண்டாக்க வழிகோலும். இதனால் பெற்றோர் மீதான நம்பிக்கை இன்மையும் அவர்களிற்கு கட்டுப்படாத முரண்பாட்டு நடத்தையும் காட்டுவார்கள்.

பாலியல் தேவை பற்றிய கண்ணோட்டத்தை நாங்கள் ஆண்மீகத்தொடும் தூரநோக்கு கொண்ட குழந்தையின் இலட்சிய பயணத்தொடும் ஒப்பீடு செய்து அவற்றை வழிகாட்டவேண்டும். குறிப்பாக ஓரினச்சேர்க்கை (Masterbation) ஆபாச சினிமாக்கள் (Porn Videos) சிறுவர் துஸ்பிரயோகம் (Child Sexual Abuse) போன்ற பாரிய குற்றங்களிற்கு அடிமையாகவேண்டிய நிலைமை உண்டாகலாம். அத்தோடு நண்பர்கள் உண்டானான இரவு நேர களியாட்டங்கள், இரவு நேர இல்லறத் தங்குதல் (Room Boarding) போன்றவற்றில் அவதானமாக இருக்கவேண்டும். காரணம் போதைப்பொருள் பாவனை, வீண் பொழுதுபோக்கு, அளவிற்கு அதிகமான தேவைகள் உண்டாகிடவும் பழக்கமாகிடவும் இது வாய்பளிக்கலாம்.

“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்"(அல்குர்ஆன் 31:18)
No comments:
Post a Comment