குற்றத்திற்கான தண்டனை வழங்குதல் என்பது அக்குற்றம் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதாக அமைவது அல்லது அக்குற்றம் நடைபெறும் வீதத்தை குறைப்பது அல்லது அக்குற்றத்திற்கான தண்டனை மீதான விழிப்புணர்வை மானிட உள்ளங்களில் உதயமாகச் செய்வதுமே ஆகும்.
ஆனாலும் அநேகமான நாடுகளில் குற்றவியல் சட்டம் என்பது வெறும் கண்துடைப்பிற்கு அமில்படுத்தப்படுவதாகவே அமைந்துள்ளது. அந்தவகையில் குற்றம் என்பது தீர ஆராயப்பட்ட பின்னரே அதற்கான தண்டனை வழங்கப்படுதல் வேண்டும். இன்னும் இவ்விடயத்தில் அகப்புறக் காரணிகளை காரண காரியங்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டு தீர்ப்பு வழங்குவதில் உள்ளது ஒரு சட்டத்தின் தரம் மற்றும் குற்றவியல் நடைமுறை....
அதுமட்டுமன்றி நாட்டின் குற்றவியல் சட்டம் ஒரு குற்றவாளிக்கு மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் என்ணத்தை தூண்டுவதாகவே அமைந்துள்ளது. மேலும் குற்றத்திற்காக வழங்கப்பட்ட தண்டனையின் உணர்வு பெரும்பாலான குற்றவாளிகள் வாழ்வில் பிரதிபலிப்பதில்லை.
மூன்றுவேளை மூச்சுமுட்ட உண்டு உண்டில் நிறைக்கின்றான் கைதி... ஆனால் வியர்வை சிந்தி வயிற்றை நிரப்பிட போராடுகிறான் சாமனிய மானுடன்.... என்னவொரு அந்தஸ்து பரவலாக்கம் இன்றைய நவீன உலகில்....

உஸ்தாத் அவ்தாவின் தஷ்ரீஹுல் ஜினாயிஹில் இஸ்லாம் எனும் நூல் மேலைத்தேய குற்றவியல் சட்டங்களுடன் இஸ்லாமிய குற்றவியல் சட்ட நெறிமுறைகளை ஒப்பு நோக்கி ஆராய்கிறது. வெற்று மனித உரிமைக் கோட்பாடுகள் குற்றத்திற்கும் தண்டனைக்கும் இடையிலான உறவை சரியாக மதிப்பீடு செய்யத் தவறி தோற்கும் இடத்தில் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டவாக்கம் எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியமான ஒரு அமைப்பாக திகழ்கிறது என்பதை குறித்த நூலில் எடுத்துக் காட்டுகிறார் அப்துல் காதிர் அவ்தா.
குற்றவியல் சட்டம் அல்குர்ஆன் பார்வையில்
👉 "திருடியதற்கு தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள்" (அல்-குர்ஆன் 5:38)
👉 "பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்" (அல்-குர்ஆன் 5:33)
👉 "(திருமணம் ஆகாத) விபசாரியும், விபசாரனும் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்" (அல்-குர்ஆன் 24:2)
👉"விபச்சாரம் செய்தவர் - திருமணம் ஆனவர் ஆயின் மக்கள் முன்னிலையில் கல்லெறிந்து கொல்லுதல்" (ஹதீஸ் புஹாரி-6812)
👉"எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்" (அல்-குர்ஆன் 24:4)

பழிக்குப்பழி வாங்குதல்
“உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்குச் சமமான காயங்களாகவும் நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்; எனினும் ஒருவர் பழி வாங்குவதை தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்" (அல்-குர்ஆன் 5:45)
"கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கொலையுண்டவனின் வாரிசுகளால் ஏதும் மன்னிக்கப்படுமானால்; இதற்காக நிர்ணயிக்கப் பெறும் நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் செலுத்திவிடல் வேண்டும்" (அல்-குர்ஆன் 2:178)
சாட்சியங்கள்
சாட்சி என்பது மனிதனை மட்டும் இஸ்லாம் கூறவில்லை.
ஒரு வீடியோ அல்லது ஒரு போட்டோ ஒரு ஆதாரத்திற்கு இருக்குமானால் அது கூட இரண்டு ஆண்களையே அல்லது நான்கு பெண்களையே விட அதிக சாட்சி தகுதியானது. உதாரணமாக உயிரியல் யுத்தம் (Bio war), மின்னியல் குற்றம் (Cybercrime) போன்றவை மனித சாட்சிகளை விட பலமான சாட்சியை கொண்டு அமைந்துள்ளதல்லவா??? அலகுர்ஆன் சாட்சி என்று எளிமையான பொருளை கொண்டு #உண்மையான_ஆதரத்தையே முன்வைக்கின்றது என்பதை நாங்கள் புரிந்துகொண்டால் தெளிவு கிடைக்கும்.
No comments:
Post a Comment