புனித வேதத்தின் இவ்வசனத்தை கொண்டு மேற்படி தலைப்பை பகுப்பாய்வு செய்வோம்.
சமகால உலகில் பால் ரீதியாக சமத்துவம் என்பது மருவி அந்தஸ்து ரீதியான சமத்துவம் என்ற நிலை உலகமயமாக்கம் பெற்றுவருகின்றது. இந்நிலைப்பாடு இஸ்லாமிய சமூகத்தின் பால் ரீதியான பாரிய தாக்கத்தை செலுத்தியபோதும் பொருளாதார கண்ணோட்டத்தில் ஆண், பெண் என்ற பாகுபாட்டை இஸ்லாம் வழிவகுக்கவில்லை என்பது மேற்படி வசனம் சிறந்த எடுத்துக்காட்டு.
உதாரணமாக ஆன்மாக்களே அளவிடப்படும் மறுமை நாளில் ஆண், பெண் என்ற சமத்துவம் இருக்காது. யார் தன்னிடம் உள்ளதை கொண்டு நற்கூலியை நாடி தர்மம் செய்தாலும் அவருக்கு பிரதிபலன் உண்டு.
பெண்கள் பொருளாதார பாங்கில் பின்னிலை வகித்தால் அவர்களினால் எவ்வாறு தர்மம், அழகிய கடன் கொடுக்க முடியும்????
மேற்கோளுக்கு.... நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா அம்மையார் செல்வச்சீமாட்டியாக இருந்த ஒரே காரணத்தினால் நபி அவர்களினால் பல்வேறு பொருளாதார இழப்பீடுகள், இஸ்லாத்தின் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் பெரிதொரு அஸ்திவாரம் இட வாய்பாகியது. அவ்வகையில் பிற்பட்ட காலங்களில் வரலாற்றை சற்று ஆழ்ந்த போதும் இதே நிலைப்பாட்டை காணமுடிகிறது.
நிதியீட்டல் வலுவூட்டல் என்பது பறந்த கண்ணோட்டத்தில் நோக்கப்படவேண்டும். உதாரணமாக அவை சமூகத்தின் தனி அலகான குடும்பத்தில் இருந்து ஆய்வு செய்யப்படவேண்டிய காரணி. குறிப்பாக சுயதொழில் கொண்டு சமூக ஆளுமை பெண் தலைமைத்துவம் வரை விலாவாரியான கண்ணோட்டத்தில் அலசப்படவேண்டும்.
சமகால உலகில் பெண் நிதியீட்ட வலுப்பெறுவது காலத்தின் முக்கிய தேவையாக உள்ளது. அவை இஸ்லாமிய வரையறையோடு ஒழுங்குபடுத்தப்படுதல் அவசியம். இதை குறித்து பல்வேறு சமூக மட்டத்தில் கலந்துரையாடல் மற்றும் பரவலாக்கம் செய்யப்படுதல் மீள்வாசிப்பு செய்யப்படவேண்டும்.
No comments:
Post a Comment