பெரிய சூப்பர் மார்க்கெட் மற்றும் மால்களில் பொருட்கள் வாங்கும்போது நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். அது பொருட்களின் விற்பனை விலை! அங்குள்ள அனைத்து பொருட்களிலும் விலை 999, 499 என்பது போன்று 99 அல்லது 9 என்ற எண்ணில் அமையுமாறு விலை வைத்திருப்பார்கள். இப்படி விலை வைப்பதன் பின்னணி என்னதான் உள்ளது? வேற என்ன லாபம்தான்
பெரிய கடைகளில் பொருட்களின் விலைகள் 199, 99 49, 999 என்று எல்லா விலையுமே 9-ம் எண்ணில் முடியும்படி வைத்திருப்பார்கள். ஏன் விலையை இப்படி நிர்ணயிக்கிறார்கள்? 200, 100, 50, 1000 என்று வைத்திருக்கலாமே சொல்வதற்கும் நினைவில் வைத்து கொள்வதற்கும் சுலபமாக இருந்திருக்குமே! அப்படி வைக்காமல் ஏன் ஒரு ரூபாய் விலை குறைத்து வைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
2005 இல் Thomas and Morwitz என்பவர் ஆய்வில் இருந்து ஒரு அழகிய விளக்கத்தையும் உண்மையையும் இவ்வுலகிற்கு முன்வைக்கிறார். அதுதான் விலை உளவியல்... அவ்வாறென்றால் எப்போதும் ஒரு எண்ணின் இறுதி இலக்கமே அவ்வெண் தொகையின் பெறுமதியை உளவியல் ரீதியாக தீர்மானிக்கின்றது. இந்த நுற்பமே விலை குறிப்பீட்டிலும் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றுக்கு அப்பால் மேலும் சில பின்னணி காரணங்கள் உண்டு.
'Charm pricing': Reduce the left digits by one
'Prestige' pricing strategy
'BOGOF': Buy one, get one free
Comparative pricing: placing expensive next to standard
Visually highlight the different prices
மேலுள்ளவை பற்றி சுருக்கமாக விபரிக்கிறேன்.
உளவியல் ஏமாற்று
1000 ரூபாய் என்பதைக் காட்டிலும் 999 ரூபாய் என்பது வாடிக்கையாளருக்கு விலை குறைவு என்ற தோற்றத்தைத் தரும். ஒரு ரூபாய் குறைப்பதால் 900 ரூபாய் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதனால்தான் இப்படி விலை வைக்கிறார்கள். இதுவொரு உளவியல் ரீதியான வர்த்தக யுத்திதான். 40,000 விலையுள்ள எல்சிடி டிவிக்கு 39,999 என்று விலை வைப்பது இதனால்தான். 40 ஆயிரம் நம் கண்ணில் இருந்து மறைந்து ஏதோ 30 ஆயிரத்திற்கு வாங்குவதுபோல் உணர வைக்கும்.
பன்மடங்கு இலாபம்
பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் மீதம் வரும் ஒரு ரூபாயை கேட்க மாட்டார்கள். ஒரு சில வாடிக்கையாளர்கள் பிடிவாதமாக கேட்டாலும் சில்லறை இல்லை என்று சொல்லி சமாளித்துவிடுவார்கள். இல்லையென்றால் மலிவான ஒரு சாக்லேடை சில்லறைக்குப் பதில் தருவார்கள். அதிலும் அவர்களுக்கு 50 சதம் லாபம் இருக்கும்.

ஒரு ரூபாய்தானே போகட்டும் என்று விட்டுவிடுபவர்கள்தான் பலர். ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 500 வாடிக்கையாளர்கள் வருவதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் 500 பேருமே மீதி வரும் ஒரு ரூபாயை வாங்கவில்லை என்றால், அந்த மீதி ஒரு ரூபாயே ஒரு நாளைக்கு 500 சேர்ந்துவிடும். இதுவே ஒரு வருடத்தில் (500 X 365 = 1,82,500) ரூ.1,82,500 கிடைக்கும். இதுபோக இன்னும் பலர் 5 ரூபாய், 10 ரூபாய்யைக் கூட விட்டுச் செல்கிறார்கள். அதையும் சேர்த்துப் பார்த்தால் வருமானம் எங்கோ போய்விடும்..!!
இந்த உதிரி வருமானத்திற்கு வரி என்பதே கிடையாது. இந்த ஒரு ரூபாய் கணக்கில் வரமால் உரிமையாளருக்கு சேரும் பணம். அதாவது கறுப்புப்பணம் (Black Money). நுகர்வோர்கள் எல்லாம் வசதிப்படைத்தவர்களாக மாறிவிட்டதால் அவர்களுக்கு இந்த சில்லறை ஒரு ரூபாய் பெரிய விஷயமில்லை. அதனால்தான் பெரும்பான்மையான பொருட்களின் விலையை இப்படி நிர்ணயிக்கிறார்கள்.
நுகர்வோர்கள் ராஜாக்கள்
நுகர்வோர்கள் ராஜாக்கள்! என்று பொருளாதாரத்தில் சொல்லப்படுவதுண்டு. அதாவது நுகர்வோர் தேவைக்கேற்பதான் பொருட்களின் உற்பத்தியும், விலையும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான் இதன் பொருள். இது மேலைத்தேய நாடுகளின் தத்துவம். ஆனாலும் இத்தத்துவம் நம் நாட்டிற்கு எல்லா சந்தர்பங்களிலும் பொருந்தாது.

என்னதான் தீர்வு
நாம் பில் தொகையை பணமாக செலுத்தாமல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் செலுத்தும்போது இந்தக் கறுப்புப்பணம் உருவாகாது. சமீபகாலங்களில் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை பரவலாகி வருவது வரவேற்கத்தக்க விஷயமே..!! இருந்தும் அதிலும் சில சிக்கல்கள் நிலவத்தான் செய்கின்றது....
தேடல் வலைத்தளம்
https://www.entrepreneur.com/article/279464
https://www.quora.com/What-is-the-reason-behind-keeping-the-price-of-products-ending-with-999-99-9
https://www.livescience.com/33045-why-do-most-prices-end-in-99-cents-.html
https://www.cbsnews.com/media/7-pricing-tricks-that-make-you-spend-more/
No comments:
Post a Comment