மேகங்களில் காற்றின் குளிர்த்தும் செயற்பாடு காரணமாக நீராவியாக காணப்படும் நீரின் நிலை மறுவுருவம் பெற்று திரவநிலை பௌதீக வடிவம் பெரும். பொதுவாக மேகங்களில் காணப்படும் நீராவி பூமியை மழை, ஆலங்கட்டி, பனி / மூடுபனி என்ற மூன்று வடிவங்களில் வந்தடையும். இவற்றில் மழை நீர் பற்றியும் அதன் அளவு பற்றியும் இப்பதிவில் பார்ப்போம்.
மழையானது ஆரம்பத்தில் மழை முகிலில் இருந்து உருவாகும் போது பெரும் பெரும் துளிகளாகவே தோற்றம் பெரும். ஆனால் அவை பூமியை நோக்கிய பயணத்தின் இடைவெளியில் துளிகளா உடைக்கப்பட்டு பூமியை வந்தடையும். அதாவது காற்றின் தடை, நீர் மூலக்கூறுகளின் மேற்பரப்பு இழுவிசை என்பன இதில் தாக்கம் செலுத்தும்.

நீர் மூலக்கூறுகள் அசையும் தன்மை கொண்டது. அத்தோடு வளியில் மிதக்கும் வகையில் நீர் துளி ஒன்றின் பயணம் நாம் மழை நீர் துளி வரைவது போன்று காணப்படாது. முற்றிலும் அதற்கு மாறுபட்டதாகவே காணப்படும்.
அந்தரத்தில் விழும் நீர் துளி அமைப்பு பெரும்பாலும் கோளவடிவ அமைப்பையே பெரும். காரணம் குறைந்த பரப்பில் அதிக கனவளவு கொண்ட அமைப்பு கோளமே.

உதாரணமாக 10 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் ஒரு 1kg தேங்காய் ஒன்றை கருதுவோம் எனின் அது பூமியை 36 km/h என்ற வேகத்தில் தரையை அடிக்கும். வெறும் பத்து மீட்டர் தூரத்தில் இருந்து விழும் ஒரு பொருளின் வேகம் இவ்வாறு என்றால் மேகத்தில் இருந்து விழும் மழை துளியின் வேகம் என்னவாக இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். ஆனால் அவை அவ்வாறு வேகமாக பூமியை அடைவதில்லை... அப்படா நல்லம்தான்....

இதற்கான காரணம் காற்றின் மறுதாக்கம். இந்த மறுதாக்கமும் துளியின் பருமனில் செல்வாக்கு செலுத்தும். உதாரணமாக கோளவடிவாக காணப்படும் துளியின் தொடர்ந்து காற்று மோதும் போது துளி பிரிந்து குடைபோன்ற அமைப்பாக மாறும். அவ்வாறு தொடர்ந்தும் துளி பிரிகை அடைந்து பிரிகை அடைந்து பூமியில் மிகச்சிறு துளியாக வந்தடையும்....
பெரும்பாலம் 1mm ~ 3mm வரையே அதிகூடிய துளியின் அளவு காணப்படும். இதைவிட அதிக பருமன் கொண்ட நீர்த்துளி பிரிந்து சிறியதாக மாறிவிடும்.... ஆனால் ஆலங்கட்டிகள் (பனிக்கட்டி) நிலை அவ்வாறு இல்லை. இதனால்தான் ஆலங்கட்டி பூமியில் விழுதல் ஆபத்தானது....
"தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்" (அல்குர்ஆன் 7:57)
No comments:
Post a Comment