இதுவரைக்கும் நாங் சடப்பொருள் வகை எத்தன என்னனென்ன எண்டு கேட்டா.... உடனே திண்மம், திரவம், வாயு என்று மழைகாலத்து தவளைபோல கத்துவோம்.
ஆனால் சடப்பொருள் வகையில் இன்னொன்றும் உள்ளது. அதான் பிளாஸ்மா (Plasma)
பிளாஸ்மா என்றால் என்ன?
அதற்கு முன்னர் ....
உலகில் திண்மம், திரவம், வாயு நிலைபற்றி சற்று சுருக்கமாக நோக்கி பின்னர் பிளாஸ்மா பற்றி பேசினால் தெளிவு இலகுவாக கிடைக்கும்.
சடப்பொருள் (Matter) அடிப்படை கட்டமைப்பு அலகாக அணு (Atom) காணப்படும். அணுக்களின் ஒழுங்கமைப்பு பொறுத்தே சடப்பொருள் தன்மை வேறுபடுகிறது. அதாவது துணிக்கைகள் நெருக்கமாக அடுக்கப்பட்டு அசையாமல் காணப்பட்டால் திண்மம் (Solid) என்றும் ஓரளவு ஐதாக துணிக்கைகள் காணப்பட்டு அசையும் ஆயின் அதனை திரவம் (Liquid) என்றும் மிக ஐதாக துணிக்கை இடைவெளி பெருமளவு காணப்பட்டு துணிக்கைகள் வேகமாகவும் சுயாதீனமாகவும் அசையும் ஆயின் அவற்றை வாயு (Gas) என்றும் கூறுவோம்.

அணுக்கள் கரு (Nucleus ), ஓடு/சக்திமட்டம் (Isotopes) என்ற இரு பெரும் பகுதியை கொண்டது. புரோத்திரன் (Protons) என்ற நேர் ஏற்றமும் நியூத்திரன் (Neutrons ) என்ற ஏற்றம் அற்ற கூறும் கருவில் காணப்படும். அதுபோல ஓடுகளில் இலத்திரன் (Electrons) என்ற மறை ஏற்றம் கொண்ட துணிக்கையும் காணப்படும். எப்படி பெற்றோரை சூழ குழந்தைகள் வலம் வருவார்களோ அதுபோல இலத்திரன் கருவை சூழ சுற்றிக்கொண்டு இருக்கும்.
நிலைமாற்றம் என்றால் சடப்பொருள் அதன் சொந்த நிலையில் இருந்து மற்ற நிலைவடிவத்திற்கு மாறுபடுதல். அதாவது திண்மம் திரவம் ஆதல். அதுபோல திரவம் வாயுவாக மாறுதல்.
மேற்படி நிலைமாற்றம் வெப்பநிலை காரணமாகவே நிகழும்.
இவ்வாறு திரவம் வாய்வாக மாறியது போல வாயு வெப்பநிலை வழங்கல் மூலமாக என்னவாக மாறும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா???
வாயு வெப்பநிலை வழங்கல் மூலமாக மாறும் நிலையே பிளாஸ்மா என்று எளிய வடிவில் கூறலாம்....
சரி இப்ப பார்ப்போம் பிளாஸ்மா என்றால் என்ன என்று.
பிளாஸ்மா என்றால் அயனாக்கப்பட்ட சடப்பொருள் நிலை. இது மின்னியல், காந்தவியல் என்ற இரு நிலைபாடுகளை கொண்டுள்ளது. பிளாஸ்மா பொதுவாக உயர் வெப்பநிலை காரணமாக அணுக்களில் உள்ள இலத்திரன் அருட்டப்பட்டு அயனாக்க நிலையை அணுக்கள் பெரும் நிலையை குறிக்கும்.

மருத்துவக்கழிவு அகற்றல் - மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை எவ்வாறு அழிப்பது என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகும். இத்தகைய நச்சுக் கழிவுகள் தற்சமயம் அதிக வெப்பத்தை செலுத்தி எரிக்கப்படுகின்றன. அவ்வாறு எரிக்கப்படும் போது வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதால், சுற்றுப்புறத்திற்கும் மனிதர்களுக்கும் கெடுதல் உண்டாக்குகின்றன. மருத்துவமனை கழிவுகளை எரிப்பதற்கு வெப்ப பிளாஸ்மா பயன்படுகின்றது. இந்த முறையில் நச்சு வாயுக்கள் வெளியேறுவதில்லை. எனவே இது பாதுகாப்பான தொழில்நுட்ப முறையாகும்.
http://pluto.space.swri.edu/image/glossary/plasma.html
https://www.britannica.com/science/plasma-state-of-matter
https://education.jlab.org/qa/plasma_01.html
https://www.tomsguide.com/us/lcd-or-plasma,review-409-6.html
https://www.techwalls.com/the-plasma-advantages/
No comments:
Post a Comment