Written by - U.Luthfi Ahamed (physiotherapist)
மோட்டார் வாகனம் ஒன்றில் மிகப் பிரதானமாக
👉 High beam (நெடிய தலை விளக்கு) - 100-150m தூரம் வரை ஒளி பரவும்.
👉 Low beam (குறும் தலை விளக்கு) - 30-76m வரை ஒளி வியாபிக்கும்.
👉 Parking light (பக்க விளக்கு/ சமிக்கை விளக்கு) - 30m உள்ளே
என 3 வகையான தலை விளக்குகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
தலை விளக்கானது மூன்று வெவ்வேறு வகையான ஒளிச்செறிவு (Light Density) அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றது. அவற்றில்
🌘 Halogen headlights - மஞ்சள் நிற ஒளி விளக்கு
🌝 Xenon gas-discharge lamps - வெண்ணிற ஒளி விளக்கு. சக்திவாய்ந்த ஒளியும் கூட
🌗 LED dipped beam - இடைநிலை வெண்ணிற அல்லது மஞ்சள் நிற விளக்கு
என்று எளிமையாக விளக்க முடியும்.
இவ்விளக்குகள் பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை என்ற போதிலும் அறியாத சிலரின் அல்லது அசமந்த போக்குடைய இன்னும் பலரின் நடவடிக்கைகளால் இக்கட்டுரையை வரைய வேண்டியதாயிற்று.
மோட்டார் வாகனங்களின் இரவு நேர பாவனைக்காகவே low beam தலை விளக்கு காணப்படுகிறது. High beam தலை விளக்கானது மிக இருளாக உள்ள பாதையில் பயணிக்கும் போது அப்பாதையின் முன்னால் - தூரத்தில் வருகின்ற வாகனங்களை அவதானிக்க, பாதையின் ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற வாகனங்களை அறிந்துகொள்ள, நாம் முன்னோக்கி செல்லும் பாதையின் வளைவுகளை தெரிந்து கொள்ள, வீதியின் தன்மையை அறிய என அவசியமான குறித்த சில சந்தர்ப்பங்களில் மட்டுமே high beam தலை விளக்கை பயன்படுத்த முடியும். ஆனால் எம்மவர்கள் இரவு நேர பயணம் முழுவதும் High beam தலை விளக்கை பயன்படுத்தி பலநூறு விபத்துக்களுக்கு ஏதுவாகின்றனர்.
முன்னால் வருகிற வாகனம் High beam முக விளக்கை ஒளிரச்செய்த நிலையில் வரும் போது எதிரே வரும் வாகன சாரதியின் கண்களை அவ்வொளி குருடாக்குவதை நாளாந்தம் நானும் நீங்களும் அனுபவம் மூலம் அறிந்து வைத்திருக்கிறோம். இதனால் கணப்பொழுதில் சாரதி நிலை தடுமாறி விபத்தை எதிர்கொள்கிறார்.
ஒரு இயன் மருத்துவராக (physiotherapist) நான் சந்திக்கும் பல நோயாளிகள் High beam தலை விளக்குகளால் விபத்துக்களில் சிக்கி தமது எதிர்காலத்தையும் உறவுகளையும் தொலைத்த அனுபவத்தை என்னிடம் பகிர்ந்திருக்கிறக்கிறார்கள்.
Low beam தலை விளக்கை பாவித்து எமது இரவு நேர பயணங்களை மேற்கொள்வதுடன் அவசியமே இல்லாத சந்தர்ப்பங்களில் High beam தலை விளக்கை பாவித்து அடுத்தவர்களை தொந்தரவு செய்வது மட்டுமின்றி அவர்களை விபத்துக்களில் சிக்க வைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுவதை நாம் முற்றாக தவிர்க்க வேண்டும். எமது அசமந்த நிலைமை, வறட்டு கெளரவம் என்பன எமது உயிரை அல்லது உறுப்பை பழிவாங்குவதை விட நாம் மற்றவர்களது உரிமையில் விளையாடி அந்நபர் வாழ்கையை கேள்விக்குறியாக்கும் உணரப்படா படுமோசமான தீ செயலில் இருந்து முடியுமானவரை முற்றாக ஒதுங்கி வாழ்வோம்.
No comments:
Post a Comment