
இந்நாட்டிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புகளில் மிகமுக்கியமானதொரு பங்களிப்பே தேசிய போராட்ட களத்தில் நின்று உடல் பொருள் ஆவி துறந்தமை. அவ்வகையில் இன்றுவாழும் தலைமுறை சுதந்திரக் காற்றை அனுபவிக்க எம்முன்னோர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
இருந்தபோதும் குறித்த காலங்களில் மட்டும் நினைவூட்டப்படும் இவர்கள் மூலமாகவே இந்நாட்டின் முஸ்லிம்களின் வகிபாகம் குறித்து பேசப்படுகின்றது. ஆனாலும் அண்மைய காலத்து நடத்தை கோலங்களை சற்று நிதானித்து அவதானிக்கையில் பெரும்பான்மை சமூகத்தின் இந்நாட்டிற்கான தேசிய போராட்டத்தின் பங்களிப்பு அன்றுதொடக்கம் இன்றுவரை உயர்ந்த தரத்தில் இருந்துவருகின்றமை குறித்து இன்றுள்ள முஸ்லிம் சமூகம் மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.

04.02.1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆட்சி செய்தவர்கள்.
✍போர்த்துக்கேயர்: 156 வருடங்கள்.
✍ஒல்லாந்தர்: 138 வருடங்கள்.
✍ஆங்கிலேயர்: 152 வருடங்கள்.
📝அன்னியர் ஆட்சியில் இருந்து இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய,குரல் கொடுத்த,சகல இனத்தையும் சேர்ந்தவர்கள் தேச பிதாக்கள்,சுதந்திர போராட்ட வீரர்கள், தேச பக்தர்கள் என அழைக்கின்றோம்.
📝இலங்கையின் சுதந்திர த்திற்காக முஸ்லிம்களும் போராடினார்கள்,குரல் கொடுத்தார்கள்,ஆதரவு வழங்கினார்கள்.என்பதற்கான ஆதாரங்கள் இலங்கையின் வரலாற்று ப் பதிவுகளில் உள்ளன.
சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகளுக்குள் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த முஸ்லிம் தேசிய வீரர்களின் பெயர்கள் இலங்கையின் வரலாற்று ப் பதிவுகளில் இருந்து படிப்படியாக மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.
✍ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த முஸ்லிம் தேச பக்தர்கள்
1804.06.04 ம் திகதி அன்று
👑 சேகு டீ டீ(தோப்பூர்),
👑 பீர் முகம்மது லெப்பை (மார்க்க கடமை புரிபவர்)
👑 முகம்மது சலாம் பதி உடையார் (குச்சவெளி)
👑 அபூபக்கர் ஈஸா (முகாந்தி ரம் சம்மாந்துறை)
👑 மீரா குசைன் காரியப்பர் (சம்மாந்துறை)
👑 உசன் லெப்பை உதுமாலெப்பை (சம்மாந்துறை)
👑 அனீஸ் லெப்பை - டச்சு அரசின் முன்னாள் உத்தியோகத்தர். (மருதமுனை)

இவர்கள் சமூகத் தலைவர்களாகவும்,சமயத் தலைவர்களாகவும், அரச உத்தியோகத்தர்களாகவும் கடமை புரிந்துள்ளனர்.
👉📚இலங்கை சட்டக்கோவை பாகம் 1, பக்கம் 77,78.(1786-1833),
👉�இலங்கையின் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தேசிய வீரர்கள்.

சட்ட வல்லுனர்:I.L.M.Abdul Azeez,
👉�1924 ல் நடை பெற்ற சட்ட சபை தேர்தலில் "முகம்மதிய்யா தேர்தல் தொகுதியில்" வெற்றியீட்டிய சட்டசபை உறுப்பினர்களான:
#பரிஸ்டர்:சேர்:மாக்கான் மாக்கார்(இலங்கையில் முதலாவது Sir பட்டம் பெற்ற முஸ்லிம்)
N.H.M.அப்துல்காதர், கலாநிதி: துவான் புர்கானுதீன் ஜாயா(T.B.Jaya),
📝1939.03.05 ம் திகதி முஸ்லிம் அரசியல் மாநாட்டில் கலாநிதி: பதியுத்தீன் மஹ்மூத் சுதந்திரத்திற்கு ஆதரவளித்து பேசினார்.

சேர்:ராசீக் பரீட்
டொக்டர்:M.C.M.கலீல்
T.B.Jaya போன்றவர்கள் தனது ஆதரவை வழங்கி வாக்களித்தனர்.
✍😥 இப்போது, இவர்களில் பலர் மறக்கடிக்கப்பட்டு
சட்டத்தரணி M.C.சித்தி லெப்பை,
கலாநிதி T.B.Jaya ஆகிய இருவரின் பெயர்கள் மாத்திரம் நினைவு கூரப்பட்டு வருகின்றன.


👉�இது சுதந்திரத்திற்காக உயிர்நீத்த,போராடிய முஸ்லிம் தலைவர்களுக்கு நாம் செய்து வரும் வரலாற்றுத் துரோகமாகும்.
✍தேசிய தினம் இலங்கை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒன்றாகும்.இதில் முஸ்லிம்களுக்கும் பாரிய பங்குண்டு.
✍முஸ்லிம்களின் தேசிய வீர்ர்களை முஸ்லிம்கள்தான் நினைவு கூர வேண்டும்.இது எங்களின் கட்டாயக் கடமையாகும்.
😪😥😢 வரலாற்றை மறந்து வாழும் சமூகம் இன்னொரு சமூகத்தினால் கட்டியாளப்படும் என்பது வரலாற்றில் எழுதப்பட்ட உண்மையாகும்.
நாட்டின் தேயக்கொடி பற்றி
இன்று நடைமுறையில் உள்ள எமது நாட்டின் தேசிய கொடியானது இலங்கையினை இறுதியாக ஆட்சி புரிந்த ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் வடிவமைத்த கொடியை அடிப்படையாகொண்டு அமைக்கப்பட்டது.


👉 S.W.R.D பண்டார நாயக்க,
👉 Sir.ஜோன் கொத்தலாவல,
👉 Sir.லலித் ராஜபக்ஷ,

👉 சட்ட வல்லுனர்:G.G.பொன்னம்பலம்.
👉 கலாநிதி:T.B.ஜாயா



👉 பச்சை நிறம் - முஸ்லிம்கள்
👉 செம்மஞ்சள் - இந்துக்கள்
👉 வால் - வீரமும் அநீதிக்கு எதிரான போராட்டமும்
👉 வால் ஏந்திய சிங்கம், பின்னணி சிவப்பு நிறம் - பௌத்தர்கள்
👉 நான்கு மூலை அரச இலைகள் -
🍃 உபேக்ஸா - நன்மை தீமை இரண்டையும் சமனாக கருதல்
🍃 மெத்தா - அன்பு
🍃 கருணா - காருண்யம்
🍃 முதிதா - மற்றவர் மகிழ்ச்சியில் தானும் மகிழ்தல்
No comments:
Post a Comment