
எத்தனையோ கனவுகளோடு பாடசாலை சூழலில் கண்டு நாங்கள் பல்கலைகழகம் செல்கின்றோம். சமூகத்தில் எங்களிற்கு என்று தனித்துவ அடையாளம் பேணிய நாங்கள் பல்கலைக்கழக சென்றதன் பின்னர் முதலில் பறிக்கப்படும் ஒரு அடையலாம் எமது நாணம்....
இலங்கையில் உள்ள பல்கலைக்கழக ரெகிங் ரேங்கிங் லிஸ்ட் இல் முதலிடம் பெறுவது எமது முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒன்றே.... காரணம் முஸ்லிம் மாணவர்கள் எண்ணிக்கை சதவீதம் அதிகம்.... அத்தோடு நான் அங்கு கற்ற ஏனைய எனது சகோதர்கள் அனுபவத்தை அறிந்தவன்....
பண்பாட்டோடு பன்முகபடுத்தப்பட்ட சமூகம் என்று பறைசாட்டும் நாமோ நடைமுறையில் எவ்வாறு வாழ்கின்றோம், வாழ்வை காண்பிக்கின்றோம் என்பதை அவதானிக்க சற்று பல்கலைகழகம் வந்தால் போதும் அறிந்துகொள்வீர்கள்.
குறிப்பாக புதுவரவு மாணவர்களை பகடிவதை என்ற பெயரில் உளவியல், உடலியல், ஆன்மீக மற்றும் சமூகவியல் ரீதியாக தொந்தரவு, துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல் பொதுப்படையாக அரங்கேற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் (ஆண்கள்) மனோநிலை உண்மையில் படுமோசமாக உள்ளது.
சமூகத்தை ஆளவேண்டிய கல்வியல் சமூகம் தோற்றம் பெறவேண்டிய இடத்தில் வன்முறை, மனித உரிமை மீறல், அடாவடித்தனம் கொண்ட சமூக அசிங்கங்கள் தோற்றம்பெருவது இந்த முஸ்லிம் சமூகத்தின் அவமானம் என்பதற்கு அப்பால் இந்த சமூகத்தின் சாபம் என்றும் கூறலாம்...
கடுமையான சட்ட நடவடிக்கை, மற்றும் குற்றத்தண்டனை வழங்கி முழு இலங்கை நாட்டை விட்டும் அகற்றவேண்டிய ஒரு தொற்றுநோய் இந்த பகடிவதை.
பகடிவதை என்ற பெயரில் ஆரோக்கியமான ஆரோக்கியமான எத்தனையோ நடைமுறை அறிமுகப்படுத்த முடியும் அல்லவா....
👉 Report Creation - பல்கலைக்கழக ஒப்படை, ஆய்வு அறிக்கை தயாரிக்கும் முறையை பயிற்றுவிக்க முடியும். உதாரணமாக வித்தியாசமான தலைப்பை கொண்டு ஆய்வு செய்யும் ஒப்படை வழங்கி அதனை ஒரு போட்டியாக , ரெகிங் ஆக மேற்கொள்ள முடியும். இதனால் பல்கலைக்கழக கற்றல் முறை பற்றிய அறிமுகம் புதிய மாணவர்களிற்கு கிடைக்க வாய்ப்பாகும்.
👉 Social Work - சமூக செயல்திட்டம் அறிமுகம் செய்தல். பாடசாலை காலங்களில் சமூக தொடர்பு அற்ற சமூகம் சமகாலங்களில் தோற்றம் பெரும் சூழ்நிலை நாடளாவிய ரீதியாக உள்ளது. இதனை தகர்த்தெறிய இரத்த தான முகம் (Blood donation), பாடசாலைகளில் தலைமைத்துவ வழிகாட்டல் செயல்திட்டம் Leadership Program), குழு வேலைத்திட்டம் போன்றவை அறிமுகம் செய்ய முடியும். இதனால் மனிதவள முகாமைத்துவம் மற்றும் ஆளிடைதொடர்பு வலுப்பெறும்.
👉Language Skills Development - பலர் பின்னடைவான சூழல் தாக்கம் கொண்ட மாணவர்கள் உள்நுழைவு பெறுவார்கள். இவர்களிற்கு தாய்மொழி மட்டுமே அறிந்து இருப்பார்கள். இவர்களுக்கான சொல் வள முகாமைத்துவம் மற்றும் செயல்திட்டங்களை முன்னெடுத்தல்....
இவை போன்ற பல செயற்பாடுகளை முந்தைய மாணவர் அமைப்பு (Senior Batch) மேற்கொண்டால் மிகப்பெரும் அடைவுகள் மற்றும் அபிவிருத்திகளை எமது சமூகம் கண்டுகொள்ள முடியும்.... அத்தோடு ஒரு தலைமுறை செய்யும் இழிசெயல் தொடர்ந்தும் பழிவாங்கும் மனோநிலையை தோற்றுவிக்குகின்றது. இதனை மாற்றுவதனூடாக பழிவாங்கும் குணமும் இல்லாமல் ஒழியும்.
எனவே மிருக நடத்தை கோலங்களில் இருந்து வெளிவாருங்கள். காரணம் நீங்கள் இந்த சமூகத்தை வழிநடத்த இருக்கும் அடித்த தலைமுறை தலைவர்கள்.....
No comments:
Post a Comment