எவ்வளவுதான் அறிவாளியாக கற்றோனாகவும் இருந்தபோதும் எங்கு, எப்படி, எப்போது என்ற சூழ்நிலை தாண்டி யாருக்கு என்பதையும் கருத்தில்கொண்டு பேச்சு அமைவது காலத்தின் தேவையோடு களத்தின் தேவையுமாக சமகாலங்களில் எழுந்துள்ளது.
நிதானமான பேச்சும் சுருக்கமான பொருள் செறிவான எளியமுறை சொல்லாடல் மற்றும் அதனை முன்வைக்கும் விதம் என்பன கருத்தல் கொண்டு எமது வாய்ப்பை முறையான நேர முகாமைத்துவத்தோடு ஒழுங்கமைத்தாலே சிறந்த பேச்சாளனுக்குரிய தனித்துவம்.
அரசியல் மேடை தொடக்கம் ஆன்மீக மேடை வரை இந்நடைமுறை சற்று நெறிபிறழ்ந்த வழக்கா மாறி சாமானியன் தொடக்கம் ரசிகன் வரை ஒரு சலிப்பை உண்டாக்கிவிடுகின்றது பெறுமதியான கருப்பொருள் நிறைந்த தலைப்புக்கள் கூட....
குறிப்பாக யாருக்கு எவ்வாறு எங்கே எப்படி முன்வைப்பது என்பதை தவறவிடும் பேச்சாளனின் பெறுமதியான பேச்சுக்கள் கருத்துக்கள் கூட பஞ்சில் எய்யப்பட்ட வேல் போல் பாயாமல் தோற்றுவிடுகின்றதை அவதானிக்க முடிகிறது.
இன்னும் சில இடங்களில் தலைப்பை தாண்டி உரையாடல் மற்றும் தொடர்பற்ற பேச்சு சொற்களின் கோர்வை என்பனவும் தாண்டி சலப்பல் நிறைந்த கனதியற்ற கருத்துக்கள் செவிமடுப்பாளர்கள் நேரத்தையும் எதிர்பார்ப்பையும் மோசடி செய்துவிடுகின்றது.
எனவே பேச்சாளர்கள் சுவாரசியமான நடைமுறை, ஆதாரங்கள் முன்வைக்கும் உரையாடல் மற்றும் எளிய நடைமுறை உதாரனங்கள் கொண்ட நேர முகாமைத்துவம் பேணும் சுருக்கமான பேச்சுக்கள் காலத்தின் அடிப்படை தேவை. காரணம் சிந்தனை விரிவாக்கம், வேகமான உலகளாவிய ஓட்டம் என்பன பலருக்கு பெரும் தாக்கத்தையும் தாகத்தையும் உண்டாக்கிவிட்டது....
“என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (அல்குர்ஆன் 28:34)
No comments:
Post a Comment