
{BSc in Animal Science & Fisheries - R}
சமகால உலகினில் கழிவு முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வு பரவலாக்கம் பெற்று வருகின்றது. அவ்வகையில் வளர்சியுற்ற நாடுகளிலும் பார்க்க வளர்ச்சி அடையும் நாடுகளின் கழிவு முகாமைத்துவம் சற்று பின்னடைவிலே இருக்கின்றது.
மீள் சுழற்சி (Recycling), மீள் பாவனை (Reuse), சார்ந்த துறை வரவேற்பு பெற்றுவருக்கின்றது. அவ்வாறே குறை உணவு உற்பத்தி மற்றும் விலங்கு சார் உணவு உற்பத்தியில் கழிவாக வீசப்படும் சில விலங்கு, தாவர உடல் பாகங்களை பயன்படுத்தி சந்தைப்பெருமதிமிக்க வியாபார பண்டமாக மாற்றும் நவீனத்துவ பொருள் உற்பத்தி வரவேற்பு அடைந்துள்ளது.
இன்று திருகோணமலை மீன் சந்தையிற்கு பின்னால் உள்ள கடற்கரையிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நானும் எனது நண்பனும் அவர்களுடைய வாழ்க்கை முறையினை பார்ப்பதற்காக அங்கு சென்றோம்.
சகோதரர் ருமைஸ் அவர்களின் பதிவில் இருந்து.....
சாதாரணமாக 300-400 வரையான படகுகள் அங்கு வருவதும் போவதுமாக இருந்தது. அதில் எப்படியும் ஒரு படகில் 50-70 கிலோ எடை கொண்ட 2 அல்லது 3 மீன்கள் காணப்பட்டது. குறைந்தளவு சிறிய மீன்களும் காணப்பட்டது.
அதில் ஒருவரிடம் விசாரித்த போது ஒரு கிலோ 700 ரூபாய்க்கு வாடியிற்கு மீனவர்கள் கொடுப்பார்கள் என்றும். வாடி உரிமையாளர்கள் அதனை 1000-1500 ரூபாய் வரை கம்பணியிற்கு கொடுப்பார்கள் என்றும் சொன்னார்.
சிறிய மீன்களை நல்ல விலை கிடைத்தால் மட்டும் வியாபாரிகளுக்கு கொடுப்பார்கள் என்றும் இல்லா விட்டால் கடலிலேயே கொட்டி விட்டு சென்று விடுவார்கள் என்றும் சொன்னார்.

என்னுடைய கணிப்பின் படி ஒரு நாளைக்கு அந்த கடற்கரையில் மட்டும் 150 கிலோ மீன்கள் மற்றும் மீனின் களிவுபொருட்கள் வீணாக எரியப்படுகிறது. அவ்வாறு என்றால் முழு திருகோணமலையில் எவ்வளவு மீன் மற்றும் மீன் கழிவுகள் வீணாக வீசப்படும். இலங்கையில் ..........
மீன் என்பது மிகப்பெரிய புரதவளம் மிக்க உணவு. உலர் நிறையில் 95 % புரதம். மீனில் கழிவு என்பதே இல்லை. இதனை உணவாக , மீன் எண்ணெயாக, விலங்கு உணவாக, பசலையாக எல்லாம் பயன்படுத்த முடியும். இலங்கையில் விலங்கிற்கு கொடுக்கும் மீனில் இருந்தும் அதனது கழிவில் இருந்து தயாரிக்கும் மீன் மாவின் விலை ஒரு கிலோ அண்ணளவாக 200 ரூபாய். இதனை பெரும்பாலான கம்பெனிகள் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்கிறது.இதற்காக பல மில்லியன் ரூபாய்களை எமது நாடு வெளிநாட்டிற்கு வழங்குகின்றது.
இவ்வாறு எமது வழங்கள் வீணாவதற்கு முதல் காரணம் எமது நாட்டில் இதை பற்றிய அறிவு மிக குறைவு மற்றும் துறை சார்ந்தவர்கள் இதை பற்றி எந்த வித அக்கறையும் கொல்லாமை. வசதி படைத்தவர்கள் இத்துறையில் முதலிட்டால் சிறிய முதலீட்டில் பெரிய இலாபங்களை பெற்றுக்கொள்ள முடிவதோடு பெருமளவான வேலை வாய்ப்புகளை எமது நாட்டில் உருவாக்க முடியும். வறுமை கோட்டின் கீழ் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த முடியும்.
நிலையான உற்பத்தி மூலம் எமது வளங்களை சிறப்பாக மீள் சுழற்சி முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் எமக்கு வரும் வளப்பற்றக்குறையினை தவிர்த்துக் கொள்ளலாம்.
எமது நாட்டின் மீன்பிடித்துறை என்பது பாரம்பரிய அடிப்படை சார்ந்து இன்றளவும் நடைமுறையில் இருப்பது பெரும் பொருளாதார பின்னடைவை குறித்த சமூகத்தில் காணமுடிகிறது. இவற்றுக்கு அப்பால் மீன்பிடி சார்ந்த தொழிநுற்ப உபயோகம் மற்றும் கால வரையறை கொண்ட பீன்பிடித் தொழில் முகாமைத்துவ வழிகாட்டல் மற்றும் நடைமுறை ஒழுங்கமைக்கப்படாமல் இருப்பது ஒரு துரதிஷ்டம் நிலைமையே....
எமது அண்டை நாடான இந்தியாவில் கூட மீன் கழிவு பொருட்களை பயன்படுத்தி விலங்கு உணவு உற்பத்திக்கு அப்பால் சூழல் நேயமான பொதிப் பொருள் உற்பத்தி (Environment Friendly Packaging Material), உரம்/ கூட்டுப்பசளை, நீரினுள் பயன்படுத்தும் அழிவடையும் பொருட்கள் போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றது.
குறிப்பாக முறையற்ற வளப்பயன்பாடு காரணமாகவும் முறையற்ற கழிவு அகற்றல் காரணமாகவும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது பாரிய தடங்கலாக இன்றுள்ள மீன்பிடி சார்ந்த சமூகத்திற்கு உள்ளது. எனவே மிகப்பெரும் கடல் வளத்தை கொண்டுள்ள நாம் அதனை முறையாக பயன்படுத்தி பயன்பெறவேண்டும்.
No comments:
Post a Comment