
காலத்தால் அழிந்தவையும் அழிகின்றவையும்...
இந்த இந்திரன் 2 படத்தில சொல்றதபோல சுனாமிக்கு முன்னர் எல்லாம் காலையில் தெனயான் கூட்டம் என்னமாதிரி எல்லாம் டிசைன் போட்டு பறந்துபோகும் என்று இங்குள்ள 90s kids முன்னுள்ள அனைத்து கிட்ஸ்க்கும் தெரிந்து இருக்கும். அவ்வளவு அழகு.
இப்படித்தான் மாப்புள வண்ணாத்திப்பூச்சி பிடிச்சி அதிட உடம்பில நூல் கட்டி பட்டம் விடுவது போல பறக்க விடுவது. அப்புறம் பொன்னிவண்டு பிடிக்க கப்றடி கட்டுக்குள்ளும், சவக்காலை காட்டுக்குள்ளும் போறது. பொன்னிவண்டு பிடிச்சா அப்பவெல்லாம் பெரிய சாதனதான். அவ்வளவு மதிப்பு. அதோடு பொன்னிவண்டு முட்டை தொழுதொழு எண்டு ரப்பர் முட்டையாட்டம் இருக்கும்.

வசந்த காலம் தொடக்கம் என்பது கூட்டம் கூட்டமாக சிவனொளிபாத பாத மலை தேடி செல்லும் இந்த பண்ணிற வண்ணாத்துப்பூச்சி வருகையை கொண்டே ஆரம்பிக்கப்படும். ஊரெல்லாம் எங்கு பார்த்தாலும் மஞ்சள் வண்ணாத்தி, சிவப்பு, வெள்ளை, கரியநிற வண்ணாத்தி என்று எத்தன கலர் ஜாதிகள் அதில். வண்ணாத்தி பிடிக்க சொழவு(சுழகு) பாவிக்கிறது.






#கும்புடு_பூச்சி, #தும்பி, #குஷி_வண்டு (Bombarier-beetle), #வெட்டுக்கிளி, #மூத்திரத்_குளவி, #சில்வண்டு/#புள்ளப்பூச்சி (Cricket) என்று எத்தனை பூச்சி இனங்கள் இன்று கண்ணால் கூட காணாத அளவிற்கு ஊரை விட்டும் எமது வாழ்வை விட்டும் தொலைதூரம் சென்றுவிட்டது. அன்றுள்ள தலைமுறை அனுபவித்த பல அழகான அனுபவங்களை இன்று நினைவில் மீட்டிப்பார்த்துக்கொண்டு காலம் களிக்குகின்றோம்.
No comments:
Post a Comment