அவ்வாறாயின் அவ்வினாவிற்கு.... குடல் புழுக்கள் சாதாரண புழுக்களை போன்று சுவாசிக்க தேவையில்லை.
காரணம் அவை ஒட்டுண்ணிகள் வகையை சார்ந்தவை.
ஒட்டுண்ணி என்றால் என்ன? (Parasitic)
விருந்துவழங்கியில் இருந்து தனது தேவையை பூர்த்தி செய்து விருந்து வழங்கிக்கே தீங்கு விளைவிக்கும் அங்கிகளை ஒட்டுண்ணி என்று அழைப்போம். ஒட்டுண்ணிகள் பொதுவாக விருந்து வழங்கியின் பருமனை விட பன்மடங்கு சிறியவை. அத்தோடு எண்ணிக்கையில் அதிகமானவை. உதாரணமாக குடல் புழுக்கள், பேன், சில குடம்பிகள் (மலேரியா) அதே போன்று தாவரங்களில் தூத்துமக்கொத்தான் கூற முடியும்.

போசணை / உணவூட்டம் வகையில் தற்போசணி, பிறபோசணி என்ற இரு பாகுபாட்டு வகை உண்டு.
தற்போசணி - என்றால் தனக்கு தேவையான உணவை தாமே உற்பத்தி செய்துகொள்ளும் உயிரங்கிகள். பெரும்பாலும் தாவரங்கள் தற்போசணி வகையில் உள்ளடங்கும். அத்தோடு சில பாக்டீரியாக்களும் உள்ளடங்கும். பொதுவாக உணவு உற்பத்தி ஒளித்தொகுப்பு என்ற செயன்முறையின் மூலம் நடைபெறும்.
பிறபோசணி - என்றால் தொகுக்கப்பட்டு சேமிக்கப்பட்ட உணவு அல்லது சக்தியை உள்ளெடுக்கும் செயன்முறை. உதாரணமாக விலங்குகள், நுண்ணங்கிகள் உள்ளடங்கும். பிறபோசணி உணவூட்டத்தில் ஒட்டுண்ணி, ஒன்றியவாழி என்ற இருவகை உண்டு.
ஒன்றியவாழி வகையில் ஒன்றுக்கொன்று துணையான் தன்மை, ஓரொட்டி வாழ்தல், ஒட்டுண்ணி போசணை என்ற வகைகள் உண்டு. ஒட்டுண்ணிகள் வகையில் முழு ஒட்டுண்ணி, குறை ஒட்டுண்ணி என்ற பிரிவு உண்டு.
முழு ஒட்டுண்ணி - என்றால் போசணை, நீர், இருப்பிடத்தை முழுமையாக விருந்து வழங்கியில் இருந்து பெற்றுக்கொள்ளும்.
குறை ஒட்டுண்ணி - என்றால் உணவு அல்லது நீரை மாத்திரம் விருந்து வழங்கியில் இருந்து பெற்றுக்கொள்ளும்.

குடல் புழுக்கள்
அவ்வகையில் குடல் புழுக்கள் முழு ஒட்டுண்ணி வகையில் உள்ளடங்கும். அதாவது குடலில் வாழும் புழுக்கள் குடல் இழையங்களை துளைத்து குடலில் காணப்படும் குருதி கலன்களினுள் பாயும் குருதியை உறிஞ்சி தனது போசணை தேவையை பூர்த்தி செய்யும். அதாவது குருதியில் கரைந்துள்ள குளுக்கோஸ், கொலஸ்ட்ரோல் போன்றவற்றை போசணையாக பெற்றுக்கொள்ளும்.
அத்தோடு குருதியில் சுவாச வாய்வான "ஒக்சிசன்" கரைந்த நிலையில் காணப்படும். குருதியை நேரடியாக குடல் புழுக்கள் உருஞ்சுவதன் மூலமாக அவற்றுக்கு தேவையான ஒக்சிசன் தேவை நிவர்த்தி செய்யப்படுகின்றது.
இதனால்தான் அவை குடலின் உள்ளே இருந்தபோதும் அவற்றுக்கு சுவாசிக்க வாயு தேவைப்படாது.

மேலதிக தகவல்
சாதாரண புழுக்களின் சுவாசம் மேற்றோல் மூலமாகவே நடைபெறும். இவற்றுக்காக மேற்றோல் ஈரலிப்பான நிலையில் காணப்படும். குடல் புழுக்கள் நேமெட்டோட் வகையை சார்த்த ஒன்றாகும். அத்தோடு மனித உடலில் வாழும் புழுக்கள் சில காலப்பகுதி மாத்திரமே உடலில் தங்கி உயிர்வாழும். அதன் பிற்பாடு முட்டைகளை மலத்தின் வாயலாக வெளியேற்றும். பொதுவாக உணவுசுகாதரம் குறைபாடு காரணமாக குடல் புழுக்கள் தோற்றுதல் அடையும். உடலில் குடல் புழுக்கள் அதிக பெருக்கம் அடைந்தாள் உடலிற்கு பாதிப்பை உண்டாக்கும். உதாரணமாக குருதிச்சோகை, இரத்த இழப்பு, உடல் ஊட்டம் குறைவடைதல், சில வேலை உயிரிழப்பு கூட நிகழலாம்.
No comments:
Post a Comment