
நம்மட பங்குக்கு ஒன்ன போடுவம்.
இப்படித்தான் நா ஒரு மூண்டு நாலாமாண்டு படிச்சிட்டு இருந்த தருணம். அப்பயெல்லாம் பொன்னிவண்டு, பால் பூச்சி, பேப்பந்து, ஐஸ்கோல் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான பொழுதுபோக்குதான் புத்தகத்துக்குள்ளே வளக்கிற மயில்ரேகை குட்டிகள்.
கிட்டத்தில ஒருநாள் தரம் 6 வகுப்புக்கு கிளாஸ் எடுக்க ஸ்கூல் போனேன். மொதலாவது சப்ஜெக்ட்டே "உயிர்ச்சூழலின் விந்தை" என்று அதுக்குள்ளே உயிருள்ள உயிரில்லாத சிறப்பியல்பு பத்தி இருந்திச்சி. இத பிள்ளைகளுக்கு வெளங்கும் விதமாக உதாரணத்திற்கு எடுத்த சுவாரசிய சம்பவம் இந்த மயில்ரேகை குட்டி வைகிறதே....
வளர்ச்சி, போசணை, அசைவு, இனப்பெருக்கம், சுவாசம் எண்டு உயிருள்ள இயல்பை இந்த மயில் ரேகை வளர்ப்போடு செஞ்ச கூத்தை ஒப்பீடு செய்து விளங்கப்படுத்த இந்த 20s குஞ்சி குருக்கள் சிரிச்சி மாண்டு போய்ட்டு.
மயில்ரேகைக்கு பென்சில் சீவுன பென்சில் தூள் சாப்பாட்டுக்கு போடுறது, இஸ்லாம் புத்தகத்துக்குள் வைக்கிறது முஸ்லிம் மயில் குஞ்சி வரும் எண்டு கூலத்தனத்தை சொல்லவே வேணாம்.
இப்படித்தான் பொன்னிவண்டு முட்டைக்கு காஞ்சிபோன மாட்டுச் சாணம் தேடி அடைக்காக வைக்கிறது.
---------------------------
உங்களுக்காக இன்னும் சில
#90கள்_அனுபவித்த_அண்ட_புளுகுகள்😜🤣
👉 இடி விழுகும் போது மூத்த புள்ள வெளியே போககூடாது😀
👉 வண்ணாத்திப்பூச்சி சிவனொலி பாதமல போவுது சாகிறதுக்கு 🐝
👉 தாய பழிச்சாலும் தண்ணிய பழிக்கப்படாது
👉 Gold fish தங்கம் 🐠
👉 காண்பட்டா இரும்பு சுட்டு கழுவனும்
👉 வீட்டுக்கு வெளிய வேப்பிலைய வச்சா பேய் வராது😌😌
👉 மழ பெய்யும் போது வெயில் அடிச்சா காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம்😀
👉 பூனைய கொண்டா ஒவ்வொரு முடிக்கும் ஒவ்வொரு ரொட்டி சுடனும்
👉 உச்சந்தலைல கை வைக்கிறது ஆகாது
👉 முள்ளு பொருத்தா கோப்பய சுத்தி விடனும்
👉 எறோபிலைனுக்கு ✈✈ paint அடிக்கிரடா பறக்கும்போதுதா அடிக்கிற அப்பதா சின்னதா இருக்கும்.
👉 கைக்குள்ளாள பூராத கட்டுவரும். பூந்ததால திருப்பி இங்கால பூந்து வா...
👉 தேங்காய்க்கு மேல இருந்தா கட்டு வரும் ?😂
👉 பெளர்ணமி அன்னிக்கி நாகபாம்பு வைரம் கக்கும் அத அறிக்கன் சட்டியால மூடினா வெளிச்சம் இல்லாம பாம்பு செத்துடும். வைரத்தை நாங்க எடுக்கலாம்.
👉 நல்லபாம்பு போட்டா எடுத்தா 20 வருஷமானாலும் மறக்காம கொத்துமாம்
👉 நல்லபாம்பு அடிச்சா ஏழு பாம்பு வரும்.
👉 நல்லப்பாம்பு வெட்டி வேற வேறயா தாக்கனும். இல்ல ஒட்டி உசிராகிடும். 🐍
👉 பழக்கொட்டை முழுங்குனா வயித்துக்குள்ள மரம் மொளைக்கும். 🌲🌱
👉 காக்கா குளிச்ச தண்ணில முகம் கழுவுனா கண் கட்டி போயிடும்
👉 டிவி -ல நியூஸ் வாசிக்கிற 2 பேரும் புருஷன் பொண்டாட்டி னு..
👉 Evil dead படம் தனியா தியேட்டர்ல் பார்த்தா
பணம் தருவாங்க இதுவரை பார்த்தவங்க எல்லாம் ஹார்ட் அட்டாக்ல செத்துட்டாங்க
👉 பறக்கிற கொக்க பாத்து
கொக்கு கையில வெள்ள போடு சொன்னா கையில வெள்ள போடும் ☺☺
👉 Undertaker நேத்திக்கு செத்துபோயிட்டான் !
அவனுக்கு மொத்தம் 7 உயிர் இருக்கு …
👉 மின்வெட்டும் போது கூரையை பிச்சிட்டு தங்க கட்டி உழும். அத ஒடனே சாக்கால மூடனும். இல்ல கரியாகிடும்.
👉 டேய் தோள்லந்து கைய எடுடா அப்புறம் வளர மாட்டேன்.!
👉 ரெட்டை வாழைப்பழம் 🍌 சாப்டுவமா ? வேணாமா ? ஆத்தி வேண்டாம் அப்பறம் ரெட்டை புள்ள பொறக்கும்
👉 மண்டைல ரெட்டை சுழி இருந்தா ரெண்டு பொண்டாட்டி 😂 சில ஊர்ல ரெட்டை சுழி இருந்தா ரொம்ப சேட்டை பண்ணுவாங்க
👉 ரெட்ட சுழி மண்டைல உள்ளவன் தண்ணில தாலுவான்.
👉 நகத்தை வெட்டி வீட்டுக்குள்ள போடாதடா வீடு வெளங்காம போயிடும்; 😜
👉 வாலந்தவகட்ட (வாற்பேய்) மீன் எண்டு வழத்து பெரிய தவள வந்தது.
👉 கைல இரும்பு இருந்தா பேய் வராது 👻
👉 மையவாடிக்கு விறல் காட்ட கூடாது. அப்படி காட்டினா விறல கடிக்கணும்.
👉 நூறு தடவ மூக்கில் விரலால சொறிஞ்சி புண் வந்தது. 😡
👉 குஷி உட்டா உள்ளங்கையல மயிர் மொளைக்கும். 💨
👉 பச்சை பாம்பு பறந்த வந்து கொத்தும்; 🐍
👉 தேன்ன நக்கிட்டு மண்டையில் தடவுனா முடி நரைச்சு போகும்😂😂
👉 மயில் இறகை புக்ல வச்சா குட்டி போடும்😂
👉 வீட்டு வாசல்ல காக்கா கத்துனா வீட்டுக்கு விருந்தாளி வருவங்க
👉 பல்லி அடிச்சா பத்து நன்ம. ஓணான் அடிச்சா ஒம்பது நம்ம...
👉 அணில் முதுவுல உள்ள மூணு கோடு ராமன் போட்டது. 🐁
👉 மொதல நம்மல புடிச்சா வயிதில கிச்சி கிச்சி காட்டினா உட்டுடும் 🐊
👉 உடும்பு எறைச்சி திண்டா ஊசி ஏறாது. 💉
👉 பல் விழுந்தா ஊட்டு ஓட்டு மேல எறிஞ்சா உடனே பல் மொளைக்கும்.
👉 பீ வண்ட (சாணவண்டு) கிரிக்கட் பெட்டாள குறி பாத்து அடிக்கிற...
அதெல்லாம் இந்த 20s க்கு தெரிய வாய்ப்பே இல்லப்பா... அதுகள் பொறக்கும் போதும் சரி, சாப்பிடும் போதும் சரி ஏன் தூங்கும் போதும் சரி இந்த போன் கூடதானே பொழுது போகுது. எங்களுக்கு அப்படியா???
அதெக்காக எல்லாம் இந்த 90s முட்டாள் பயலுகள் என்று நெனச்சிட கூடாது...
ஏன்னா...
90s kids தான் நவீனத்தையும் பாரம்பரியத்தையும் முழுமையாக அனுபவிக்கிறதோடு முறையாகவும் அணுகுகின்றது....
No comments:
Post a Comment