
வரலாறு
அந்த காலங்களில் களிமண் தகடுகள், உலோக தகடுகள், விலங்கு தோல், எலும்புகள், ஓலைச்சுவடி, கற்கள் மற்றும் மரத்துண்டுகள் போன்றவற்றின் தங்கள் எழுத்து அச்சு வடிவங்களை பொறித்து வந்தார்கள். பிற்பட்ட காலங்களில் சற்று பரிணாமம் பெற்ற எழுத்து அச்சிடும் வடிவம் காகிதங்கள், துணிகள் மற்றும் பொலுத்தீன் போன்றவற்றின் அச்சிடப்பட்டும் பின்னர் உள்ள காலங்களில் Typewriter (தட்டச்சு இயந்திரம்) அறிமுகம் செய்யப்பட்டு தற்போதைய காலங்களில் Smartphone, Laptop மற்றும் Computers உள்ள Keyboard நகல்கள் பயன்படுகின்றது.

விசைப்பலகை வகைகள்
26 ஆங்கில எழுத்துக்களை அடைப்படையாகொண்டே பொதுவாக விசைப்பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் முதல் வரிசையில் அமையும் ஆறு எழுத்துகளில் உள்ள வேறுபாட்டைக்கொண்டு வெவ்வேறு கீபோர்ட் அன்றாடம் புழக்கத்தில் இருந்துவருகின்றது. அவ்வகையில் பெரும்பாலான நாடுகளில் பாவிக்கப்படும் QWERTZ keyboard, இதனை அடுத்து AZERTY, HCESAR, Half QWERTZ போன்றவை சில உதாரணங்களாகும்.

பொதுவாக ஆங்கலத்திலும் சரி ஏனைய மொழிகளிலும் சரி சொற்கள் உயிர் எழுத்துக்களை அடிப்படையக்கொண்டே அமையப்பெறும். அத்தோடு அகரவரிசை எழுத்து அமைவு என்பது வேகமான டைபிங் செய்வதில் பாரிய இடையூறை உண்டாக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள கீபோட்களில் எழுத்து இடம் பிடிப்பு என்பது சொற்களின் அதிர்வெண் அடிப்படையாக் கொண்டும் பிரபயன்பாடுகளான மனிதனின் 10 விரல் தொழிற்பாட்டு இலகு தன்மை, குறியீடுகள் மற்றும் கணிதசெய்கை போன்றவற்றை பின்னணியாக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்
தற்காலங்களில் பிறமொழிகளில் ஆதிக்கம் காரணமாக சில பழமை மொழிகள் தங்களின் தனித்துவ விசைபலகை வடிவமைப்பை மேற்கொண்டு இருக்கின்றது. அதில் குறிப்பாக அரபு, ஸ்பானிஸ், ரஷ்யன்ஸ் போன்றவை குறிப்பிட்டு கூறமுடியும்.
குருடர்களின் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு விரல் நுண்ணுணர்வு தொடுகை அடையாளம் கூட தற்காலங்களில் இணைக்கப்பட்ட விசைப்பலகைகள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை விட இன்னும் இலகுபடுத்தப்பட்ட தட்டச்சு முறையாக பேச்சு தட்டச்சு முறைமை (Voice Typing Methods) பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றமை மானிட வாழ்வின் புதிய திருப்பம் எனலாம்....
தேடல் வலைதளங்கள்
https://en.wikipedia.org/wiki/Computer_keyboard
https://en.wikipedia.org/wiki/QWERTY
https://study.com/academy/lesson/what-is-a-qwerty-keyboard-definition-layout-quiz.html
https://www.quora.com/Why-are-the-keys-on-the-keypad-not-arranged-in-alphabetical-order
https://www.huffingtonpost.com/2013/05/06/qwerty-keyboard_n_3223611.html
No comments:
Post a Comment