
அந்தவகையில் முதலாவது ஆகாயவிமானக் கண்டுபிடிப்பானது 1903ஆம் ஆண்டு ரைட் சகோதர்கள் (Wright brothers) மூலமாக வரலாற்றில் பதியப்பட்டது. இருப்பினும் விண்வெளிக்கான பயணம் 1957இல் தான் சாத்தியமானது. இதன் பின் முதலாவது மனிதனைக் கொண்ட விண்வெளி Vostok 1 என்ற ஓடம் 12 April 1961இல் பய ணத்தை மேற்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலத்தில் சாத்தியமான இவ்வுண்மையை அல்-குர்ஆன் மிக எளிய வடிவில் விபரிக்கின்றது.
“மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வான ங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் முடியுமாயின் அவ்வாறு சென்றுவிடுங்கள். இருப்பினும், மிகப்பெரும் பலத்தைக் கொண்டே தவிர உங்களால் செல்ல முடியாது” (அல்-குர்ஆன் 55:33)
மேற்கூறப்பட்ட வசனத்தையொத்த மற்றுமொரு இடத்தில் குர்ஆன் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றது.

இவ்விரு வசனங்களில் இருந்தும் விண்வெளி பயணம் சாத்தியம் என்று நிரூபணமாகிறது. இருந்த போதும் இவ்விடத்தில் மற்றுமொரு அறிவியல் உண்மை மறைமுகமானதொரு கருத்தில் விதைக்கப்பட்டுள்ளது.
வசனம் 55:33இல் “மிகப்பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது” என்று கூறக்காரணம்; புவியின் ஈர்ப்புப் புலத்தை விட்டு ஒரு பொருள் புறவெளிக்கு செல்லவேண்டுமாக இருப்பின் அது மிக உயர்ந்த வேகத்தை கொண்டிருக்க வேண்டும். இதனை தான் அண்மைய ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
அதாவது 1kg திணிவுடைய ஒரு பொருளை அனுப்ப சுமார் 9x1016 J சக்தி தேவை. ஒரு வினாடிக்கு பொருள் 11km தூரம் பயணம் செய்யும் வேகத்தில் செல்லும் போது இது சாத்தியமாகும். ஆக ஒரு கிலோ திணிவிற்கே இவ்வளவு சக்தி தேவை என்றால் சாராசரி மனிதனின் நிறை மற்றும் அவனை சுமந்து செல்லும் விண்கலத்தின் நிறையின் கூட்டுதொகையின் பெருக்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று சற்று கற்பனை செய்க.
மேலும் அடுத்த வசனமான 6:125 இல் “நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படி” கூறப்படுவதன் நோக்கம் மிக அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது விண்வெளி பயணத்தின் போது அமுக்க வேறுபாடு, புவியீர்ப்பு விசையின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் மனிதனின் உள்ளக உடல் அமைப்பு, அங்கங்கள் தளர்வடைகின்றது.
அதாவது அமுக்கவேறுபாடு, புவியீர்ப்பு விசை குறைவடைதல் என்பன இதயத்தின் இயக்கத்தை மந்தப்படுத்தும். இதனால்தான் மிக நவீன முறையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் விண்வெளிப்பயணத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாடைகள் விண்வெளி மனிதனுக்கு இயல்பான நிலைமையினை பேணிட உதவுகின்றது. இது குறித்து ஆங்கிலத்தில் வெளியா கிய பல திரைப்படங்கள் பிரதிபலிக்கின்றது. உதார ணமாக் The Martain, Apollo-13, Avatar யை குறிப்பிடலாம்.
இவ்வாறான அறிவியல் முன்னறிவிப்புக்கள் எவ்வாறு முகம்மதிற்கு கிடைத்தது என்று சற்று நாம் சிந்திக்க வேண்டாமா? அவ்வாறாயின் உண்மையான இறைத்தூதராக இருந்தால் மாத்திரமே சாத்தியம்.
No comments:
Post a Comment