
இல்லை - இருந்த இடத்தில் தான் மீண்டும் இருப்போம்.
--------------------------------------
நான் சின்ன வயசாக இருக்கும் போது பஸ்ஸில் பலமுறை சென்று இருக்கிறேன். ஆனால் எனது சீட்டை விட்டு பஸ் நிக்கும் வரைக்கும் அசையாமல் இருப்பேன். காரணம் நீங்கள் கேட்ட கேள்வியின் அறியாமையே. அதாவது பஸ் ஓடும் போது பாய்ந்தால் நான் அந்தரத்தில் இருக்கும் வேளையில் பஸ் முன்னிற்கு சென்றுவிடும். நான் பின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே விழுந்து விடுவேன் என்று பயந்து....
ஆனால் உண்மை அவ்வாறில்லை. இதனை சார்பு இயக்கம் (Relative velocity/ Relativity) என்று விஞ்ஞானத்தில் கூறுவோம்.
சார்பியக்கம் என்றால் என்ன?

இதேயே இயக்கத்தை இரண்டு காரும் ஒரே திசையில் பயணித்தால் சார்பியக்கம் மணிக்கு 10 கிலோமீட்டர் (10 Km/H) வேகம் ஆகும்.
அதாவது ஒரு காரை நிலையாக வைத்து மற்றைய காரின் வேகத்தை ஒப்பீடு செய்வதாகும்.
ஒருவேளை இரண்டு கார்களும் ஒரே திசையில் மணிக்கு 50 கிலோமீட்டர் (50 Km/H) வேகத்தோடும் பயணிக்குமாயின் காரின் சார்பு வேகம் 0 ஆகும். அதாவது இரண்டு காரும் ஒன்று சார்பாக மற்றையது ஓய்வில் உள்ளது போன்று இருக்கும்.
மேற்படி நிலைப்பாடுகளை நீங்களே பார்த்து இருப்பீர்கள்.

அதுபோல நீங்கள் வேகமாக பயணிக்கும் போது அருகில் உங்களின் வேகத்தை ஒத்த ஒரு பயணி பயணிக்கும் போது இருவரும் ஒருவர் சார்பாக ஒருவர் ஓய்வில் உள்ளது போன்றே பார்த்துக்கொள்வீர்கள்.
இதைத்தான் சார்பு இயக்கம் என்று சொல்வோம்.
பஸ் உள்ளே உள்ள உடல் நாம் ஓடும் பஸ்ஸின் உள்ளே இருக்கின்ற போது எமக்கும் அந்த பஸ்ஸின் வேகம் எதுவோ அதனையே பெற்று இருப்போம். உதாரணமாக பஸ் 50km/h ஆக இருந்தால் நாமும் 50km/h வேகமாகவே இருப்போம் பஸ் 100km/h ஆக இருந்தால் நாமும் 100km/h ஆகவே இருப்போம்.
ஆகவே பஸ் சார்பாக ஆசனத்தில் இருக்கும் எமது உடலின் சார்பு இயக்கம் பூச்சியம் வேகம். ஆகவே நாம் உள்ளே பாய்ந்தாலும் உள்ளே தான் விழுவோம்.
இங்கே ஒரு விடயம் கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது நீங்கள் பஸ்ஸில் சென்று இருந்தால் இதனை அடிக்கடி உணர்ந்து இருப்பீர்கள்.
இவற்றுக்கு காரணம் சார்பியக்கமே. அதாவது பஸ் பயணிக்கும் போது நீங்கள் ஓய்வில் உள்ளீர்கள் அதனால் பின்னோக்கி சற்று இழுக்கப்படுக்குறீர்கள் பஸ் இயக்கம் காரணமாக. அதுபோல் பஸ் நிறுத்தப்பட்டதும் நீங்கள் பஸ் இயங்கிய வேகத்தில் இருந்தீர்கள் அதனால் முன்னோக்கி தள்ளப்பட்டீர்கள்.
இதனால்தான் சடுதியாக வாகன விபத்தில் பயணிகள் முன்னோக்கி தூக்கி எறியப்படுதலுக்கு காரணம்.
எனவே நீங்கள் இனிமேல் சீட் பெல்ட் (ஆசனப்பட்டிகை) அணிந்தே வேகமாக காரில் பயணிக்கவும்.....
No comments:
Post a Comment