
அந்த வீடியோவில்
1. அப்பிள் பழத்தின் மேல் தோல் சிறிய பிடேட் ஒன்றினால் சுரண்டப்பட்டு மெழுகு துருவல்கள் சேகரிக்கப்பட்டு உண்பதற்கு உகந்தது அல்லாத பொருள் என்று சித்தரிக்கப்பட்டது.
2. மற்றைய வீடியோவில் சுடு நீரில் அப்பிள் பழத்தை இட்டதும் மெழுகு உருகியது.
உண்மையில் அப்பிள் பழத்தின் மேற்றோலில் காணப்படும் மெழுகு உடலுக்கு ஆரோக்கியமானது. சரி அதுபற்றி சற்று பார்ப்போம்.

அப்பிள் மெழுகு
நீங்களே அறிந்து இருப்பீர்கள். உணவு பாதுகாக்கும் முறைய பற்றி. அதில் ஒன்றுதான் பொதிசெய்தல். ஆனால் சில உணவுகளை பொதி செய்தல் என்பது அந்த உணவின் நாளந்த கையாளல் மற்றும் காட்சிப்படுத்தல் என்பவற்றுக்கு தடங்கலாக இருக்கும். அவ்வகையில் குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகள் (Fruits and Vegetable) மீது நவீன பாதுகாப்பு முறை அறிமுகம் செய்கின்றது. அதில் ஒரு முறையே மெழுகு (Wax) பூசுதல்.
மெழுகு (Wax) பூசுதல் (Coating)
உணவு நற்காப்பு முறையில் நவீனத்துவ நடைமுறையே கோட்டிங் (Coating) முறைமை. குறிப்பாக மெழுகு, புரதம், மற்றும் காபோவைதரேற்று போன்றவற்றை கொண்டு ஒரு உணவின் மேற்புறம் பூசப்படும் அமைப்பே கோட்டின். கோட்டினை பொறுத்தவரையில் உடலுக்கு ஆரோக்கியமானது. அவ்வகையில் அப்பிள் பழத்தின் மேலே பூசப்பட்ட மெழுகு அமைப்பும் அதுவே. குறித்த மெழுகு எமது உடலுக்கு தேவையான ஒரு இழிப்பிட் வகையாகும். மெழுகு பூசுவதன் மூலம் பல அனுகூலங்கள் கிடைக்கிறது.

கோட்டின் அனுகூலம்
1. நீர் காப்பு (Glazing agent) - உணவின் நீர் இழப்பு தடுக்கப்படும். இதனால் உணவு நீண்டகாலம் விறைப்பு தன்மையோடு பழுதடையாமல் காணப்படும்.
2. கவர்ச்சி தன்மை - மெழுகு காரணமாக ஒளித்தெறிப்பு அடைவதன் காரணமாக பளபளப்பு தன்மை.
3. நுண்ணங்கி தடுப்பு - மெழுகில் நுண்ணங்கி தாக்கம் குறைவு. இதனால் பழம் பழுதடையாமல் நீண்ட நாள் பாதுகாக்கப்படும்.
4. நீர் தடுப்பு - நீரில் நனையாமல் மெழுகு பாதுகாப்பதன் மூலமாக பழத்தின் இயல்பு மாற்றம் அடையாது.
மேற்படி காரணங்கள் மூலமாக உணவு சாதாரணமாக பழுதடையாமல் இருக்கும் கால எல்லையைவிட நீண்ட கால எல்லை பேணப்படும் (Increase Shelf Life)
உலகளாவிய உணவின் தர நிர்ணயம் மற்றும் உணவுப் பாதுக்காப்பு வரையறை எல்லைகளின் உற்பட்டவாறே மேற்படி மெழுகு மொளுவுதல் நடைபெறுகின்றது. இவற்றுக்கு அப்பால் அப்பிள் பழங்கள் மேலே ஒட்டப்படும் அடையாள முத்திரை (ஸ்டிக்கர்) கூட உண்பதற்கு உகந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பவா போறீங்க. ஆமாம் அதை கூட உண்ண முடியும். அதுவும் கூட நான் கூறிய கோட்டிங் மூலமாக தயாரிக்கப்பட்டதே....

கோட்டிங் இடும் முறை பல்வேறு வகைப்படும். சில சொக்லேட், கேக், மற்றும் மாஸ்மேலோ, ஜுஜூப்ஸ் போன்ற இனிப்பு உணவுகளிற்கு பயன்படும். அத்தோடு தற்காலங்களில் இதன் பயன்பாடு உணவு உற்பத்தி மற்றும் உணவை பாதுகாத்தல் துறைகளில் பாரிய செல்வாக்கை செலுத்து வருகின்றது. சில உணவுகளிற்கு கோட்டிங் ஆக பயன்படும் பொருட்கள் நுண்ணங்கி, பூச்சி, சில விலங்கு எதிர்ப்பு காட்டும் மணம், சுவை போன்றவற்றை உள்ளடக்கி இருப்பதொடு உடலிற்கு ஆரோக்கியமான இயற்கை ஊட்டச்சத்துக்களை (உள்ளி, இஞ்சி, கராம்பு, மிளகு, கருவேப்பிலை) போன்ற சாறுகளை கொண்டும் தயாரிக்கப்பட்டு பிரயோகம் செய்யப்படுகின்றது.
தேடல் வலைதளங்கள்
https://en.wikipedia.org/wiki/Fruit_waxing
https://www.bestfoodfacts.org/wax-on-apples/
https://apal.org.au/apples-wax/
https://www.who.int/foodsafety/areas_work/food-hygiene/en/
https://en.wikipedia.org/wiki/Fungicide
https://www.mcgill.ca/oss/article/you-asked/why-do-they-spray-wax-apples-0
No comments:
Post a Comment