எதிரிகள் கூட நெருங்கமுடியாத வல்லரசுகளை தோற்கடிக்கவும் அக்குடிமக்களின் வாழ்வியலில் குடிப்பழக்கம் ஊடுருவச்செய்து ஆட்சியை நிலைகுலையச் செய்த சரித்திரங்களை இன்றளவும் சற்றும் பிசகாமல் கடைப்பிடித்து வருகின்றது சில வல்லரசு நாடுகள்....
அந்தவகையில் குறிப்பாக வளர்முக நாடுகள் மீதான வல்லரசு நாடுகளின் மேலாதிக்கத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவும் வளர்முக நாடுகளின் மானிடவியல் வளத்தை வளர்சிப்பாங்கில் இருந்து வீழ்த்தவும் சமகால உலகில் ஒருவகை பனிப்போர் வகையை சார்த்து உயிரியல் யுத்தம் அரங்கேற்றப்படுகின்றது. அதில் குறிப்பாக சிந்தனா ரீதியான மாற்றத்தையும், புரட்சியையும் மழுங்கடிக்கும் காரணியாக போதைப்பொருள் பாவனை நிலைகொண்டுள்ளது.
குறிப்பாக இளைஞர் சமூகத்தை கொண்டு காய்நகர்த்தப்படும் போதைப்பொருள் பாவனையின் விபரீதம் இன்னும் ஒருசில ஆண்டுகளில் நாங்கள் அனுபவிக்க இருக்கிறோம். நாம் எதிர்நோக்க இருக்கும் முக்கிய சவால்களில் ஒன்றே சித்தனை மிக்க மானிடவியல் பற்றாக்குறை....
அதாவது போதைக்கு அடிமையான ஒருவனால் தன்னை, குடும்பத்தை, சமூகத்தை பற்றிய எந்த பொதுநல சிந்தனையும் காணப்படாது. அத்தோடு மற்றவர்களுக்கு பயன்படும் விதத்தில் அவன் வாழவேண்டிய எந்த தேவையும் அவனிடம் இராது. இதனால் கல்வி, தொழில்வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் புத்தாக்க சிந்தனையில் அவன் ஈடுபாடு மந்தமாகமே இருக்கும். குறுக்கு வழியில் செல்வம் தேடும் குறுநிலை மனோநிலை காரணமாக கொள்ளை, திருட்டு மற்றும் இன்னோரென்ன வழிகளை தேடுவதானால் சமூகவியல் ரீதியான பாரிய பின்னடைவை குறித்த சமூகம் முகம்கொடுக்கும்.
இவ்வாறு ஒவ்வொரு சமூகத்திலும் எழும் பிரச்சினை ஒட்டுமொத்த நாட்டின் தேறிய விளைவாக உருவெடுப்பதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தொடக்கம் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் உள்ளக வளங்களில் பாரிய வறட்சியை உண்டு பண்ணும்.
எனவே இளைஞர் கொண்டு நடாத்தப்படும் போதை யுத்தம் என்பது வெறுமெனே வியாபர நோக்கம் தாண்டி ஒரு நாட்டின் உள்ளக வெளியாக வளர்ச்சி முதல் அடுத்த தலைமுறையின் தலைமைத்துவம் வரை செல்வாக்குச்செலுத்தும் என்பதை கவனத்தில்கொண்டு எமது மாற்றுத்தீர்வுகளையும் இன்னும் மறைக்கும் தீர்வுகளையும் உளவியல் ரீதியாக முன்னெடுக்கவேண்டும். அவ்வாறில்லை....
அடுத்த தலைமுறைக்கான தலைமைத்துவ வெற்றிடம் மற்றும் ஆலனித்துவமற்ற பிச்சைக்கார சமூகமாக நாங்கள் தோற்றம் பெறுவோம்.....
No comments:
Post a Comment