வாந்தியை பொறுத்தவரை இரைப்பையில் சாமிபாட்டிற்காக சேமிக்கப்பட்டு இருக்கும் வேளையில் இரைப்பை களம் இடையில் காணப்படும் கள-இரைப்பை இறுக்கி தளர்வடைவதன் மூலமாக வெளியேறும் நிகழ்வே வாந்தி என்று அழைப்போம்.
சாதாரணமாக வாந்தி வருவதற்கான காரணம்
👉 இறுக்கி தசை நலிவுறுத்தல்.
👉 இரைப்பை அழற்சி, இரைப்பை புன்
👉 ஒவ்வாமை உணவுகள்
👉 சமிபாட்டில் உள்ள கோளாறுகள்.
👉 நோய் நிலைமை (டெங்கு, மஞ்சள் காய்ச்சல், வாந்திபேதி)
👉 நரம்பு தொழிற்பாட்டின் குறைபாடு.
👉 சில பெண்களிற்கு குழந்தை உருவாக்கம் காரணமாக உண்டாகும் ஓமோனின் தூண்டல்.
👉 உணவு நஞ்சாக்கம்
👉 குமட்டல், அருவெறுப்பு

👉 பயண அழற்சி - பலருக்கு இந்நிலைமை உண்டு. அதாவது பிரயாண வாகனத்தின் வாசனை, பிரயாண தூரம் (நீண்ட தூரம்), பிரயாண நேரம் (பகல் வேளை), பிரயாண இடம் (மலைநாட்டு, வெப்பம் கூடிய பகுதி), போன்றவை உடலிற்கு ஒவ்வாமையாக இருத்தல். இதனால் மூளை செயற்பாடு காரணமாக வாந்தி தூண்டப்படும்.
👉 உடல் சமநிலை குழம்புதல் - அநேகமாக எமது நாட்டை பொறுத்தவரையில் பாதை ஒழுங்கற்று இருப்பதனால் அதிர்வு, மெதுவான வாகன நகர்வு போன்றன உடலின் இசைவான் சமநிலையை குழப்பி உடலிற்கு சோர்வையும் மூளைக்கு ஒரு மந்த தூண்டலையும் உண்டாக்கும். இதனால் வாந்தி தூண்டப்படும்.
👉 மனநிலை - வாகணப்பயணம் என்றால் எனக்கு வாந்திவரும் என்ற மனோநிலை இயல்பில் இருப்பதால் வாந்தி தூண்டப்படும். அத்தோடு வாந்தி பற்றிய அச்சம், சிந்தனை.
👉 அடைக்கப்பட்ட புறச்சூழல் - பயணத்தில் நெரிசல் காரணமாக சுவாச சீராக்கும் தடைப்படுதல். அத்தோடு ஒக்சிஜன் சதவீதம் குறித்த சூழலில் பற்றாக்குறையாக இருத்தல்.
👉 உணவு முறை - கண்டதையும் உண்டு வயிறு முழுமை அடைவதால் இரைப்பை அசைவு மந்தமாக கணப்படுவதனால் மூளை வாந்தியை தூண்டி உணவின் ஒருபகுதி வெளியேற்றுதல்.
👉 குறுந்தூரப் பார்வை - வாசிப்பு, செல்போன் பாவனை மற்றும் பயணத்தில் உள்ளகத்தில் எமது பார்வை ஒருக்கப்படுவதால் மூளை சோர்வடைத்தல். இதனால் தலைவலி, வாந்தி உண்டாதல்.
இவை எல்லாவற்றையும் தாண்டி #மிகமுக்கிய_காரணம் ஒன்று எமது நாட்டி பொறுத்தவரையில் உள்ளது. அதுதான்
👉 வாகனத்தின் தரம் - வாகனத்தின் தரம் என்றதும் பழைய வாகனம் என்று எண்ணவேண்டாம். அவ்வாறில்லை. அதாவது என்ஜின் தகணத்தில் உண்டாகும் #குறைதகணம் காரணமாக வெளிவரும் காபன் மொனோ ஒக்சைட் {CO gas} வாய்வு.
மேற்படி வாய்வின் இயல்பு வாந்தியை தூண்டுவதாகும். பொதுவாக வாகன நெரிசல் உள்ள சூழலில் இந்த வாய்வின் சதவீதம் அதிகமாக இருக்கும். அத்தோடு நாம் செல்லும் வாகனத்தில் இருந்தும் இது விடுவிக்கப்பட்டால் வாந்தி தூண்டப்படும்.
ஏன் #மூளை_வாந்தி_எடுத்தலை_தூண்டவேண்டும் என்று சந்தேகம் வரலாம்.
மூளை வாந்தி எடுத்தலை மட்டும் தூண்டாது. சிறுநீர் வெளியேற்றம், மலம் கழித்தல் போன்றவற்றை தூண்டும். காரணம் எமது குறித்த சூழல் எமது உடலிற்கு பொருத்தமில்லை என்று மூளை உணர்வதனால் எம்மை இவ்விடத்தில் இயல்பு நிலையில் இருந்து வெளியேற்றவே இவ்வாறு செய்கின்றது....

என்னவொரு வடிவமைப்பு என்று பாருங்கள். இறைவன் எவ்வாறு புரோகிராம் செய்துள்ளான் என்று. ஒடோவாக ரீசெட் ஆகும் முறை.
சரி வாந்தி எடுத்தலை எவ்வாறு தடுக்கலாம்.
👉 பயணத்திட்டமிடல் - முன்கூட்டிய இருப்பிட வசதி, சொகுசு, மற்றும் காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்தி பயணம் மேற்கொள்ளல். (ஜன்னல் ஓரம் விருப்ப இதுவே காரணம்)
👉 மூளையின் சிந்தனையை மாற்ற இசை, ஒருவரோடு பேசுதல் மற்றும் மகிழ்வான பயணத்தை ஒழுங்கு செய்தல்.
👉 இரவு நேர பயணத்தில் அதிக ஆர்வம் காட்டுதல் - இதனால் நேர மீதம், பயண சோர்வு, உடலின் வெப்ப சமநிலை, பசி நிலைமை போன்றன சீராக்கப்படும்.
👉 அடிக்கடி பயணம் மேற்கொண்டு உடல் பழக்கம் உண்டாக்குதல். அத்தோடு பயணத்தின் போது அருகில் வேகமாக அசையும் மரங்கள் கட்டிடங்களை பார்ப்பதை தவிர்த்து தூரவுள்ள மலைகள் மற்றும் வேறு இடங்களை அவதானித்தல்.
No comments:
Post a Comment