Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, January 27, 2019

ஜலசமாதி

Image may contain: sky, ocean, cloud, outdoor, water and nature26 ஆண்டு கடந்து
மூதூர் கடல்பயண விபத்து நினைவுதினம்
================== 1993.01.25~2019.01.25
மூதூர் என்றால் அன்றைய காலங்களில் முடிவிடம் என்றும் கூட கூறலாம். காரணம் பாதைகளில் முடிவிடம் இங்கேதான் நிறைவு பெறும்.
நெய்தல், குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம் போன்ற ஐ நிலங்களையும் தன்னகத்தே தனதாக்கிய ஒரு பற்று. இதனாலோ இலங்கை வரலாற்றில் கொட்டியாபுரப்பற்று ஒர் தனித்துவ அடையாளத்தை பெற்றுள்ளது.

ஒரு தசாப்தங்கள் முன்னர் மூதூர் என்றால் கடல் பயணம்தான் நினைவுக்கு வரும். காரணம் மூதூருக்கான பயணத்தின் அடிப்படையாக இருந்தது கடல் பயணம் மட்டுமே.
அதுவொரு சுவாரசியமான பயணமாக இருந்தபோதும் பயமான பயணம் தான். அவ்வகையில் மூதூரின் கடல் பயணம் ஒரு வரலாற்று சுவட்டை இப்ம்ண்ணில் உள்ள அனைவருக்கும் விதைத்து விட்டது. அதுவே மூதூர் லோஞ்சி கடலில் மூழ்கிய தினம் இன்று.....

திருகோணமலை மாவட்டம் மூதூர் வரலாற்றில் என்றுமே நெஞ்சங்களை விட்டு அகலாத சோகமும், கண்ணீரும், அவலக் குரல்களும் எதிரொலித்த நாள்தான் 1993 ஜனவரி 25ஆம் திகதியாகும்.

25ஆம் திகதி அன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருகோணமலை ஜெட்டியிலிருந்து மூதூரை நோக்கி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 130 பயணிகளுடன் பயணித்த தனியார் இயந்திரப் படகு திருகோணமலைக்கு அண்மையில் உள்ள பாதாள மலையை நெருங்கியதும் சீறி எழுந்த பாரிய கடல் அலைகளால் மூர்க்கத்தனமாக மோதப்பட்டு கடலுடன் சங்கமமானது.
Image may contain: ocean, sky, outdoor and waterபடகில் பயணம் செய்தவர்களில் 30 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டதுடன் 13 பேரின் சடலங்கள் மட்டுமே மக்களால் மீட்கப்பட்டது.

இக்கோரச் சம்பவம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் அந்தக் கொடூரச் சம்பவத்தை மூதூர் மக்களின் மனத் திரையில் இருந்து மறைக்க முடியாதுதான்.
அப்போதைய காலங்களில் திருமலையிலிருந்து மூதூருக்கு கடல் வழிப் பயணம் மேற்கொள்வதானால் கடல் வழியாகப் 12 கிலோ மீற்றர் தூரம்தான். ஆனால் அந்த தூரத்தை ஒன்றரை மணி நேரமாக இயந்திரப் படகுகளில் பயணிக்க வேண்டும்.

ஒரு படகில் சுமார் 150 பிரயாணிகள் மாத்திரமே பிரயாணம் செய்ய முடியும். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும்தான் இரண்டு படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. நாளாந்தம் இப்படியாகத்தான் மூதூர் பயணச் சேவை இருந்து வந்தது. மாலை 5.00 மணிப் படகைத் தவறவிடும் அரசாங்க ஊழியர்களும் ஏனைய பொது மக்களும் திருமலையில அன்றைய இரவைக் கழிக்க வேண்டிய நிலையும் நாளாந்தம் ஏற்பட்டு வந்தது.
Image may contain: one or more people, outdoor and waterமூதூர் மக்களின் சகல தேவைகளும் திருமலையில் அமைந்துள்ளதால் நாளாந்தம் மூதூர் மக்கள் திருமலைக்குப் பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவையுள்ளது. அப்போதைய காலங்களில் மூதூர் தமிழ் மக்கள் மட்டுமல்லாது முஸ்லிம் மக்களும் இராணுவக் கெடுபிடிக்குள் சிக்கித் தவித்த வரலாறும் உள்ளது.
எது எவ்வாறோ
மரணித்தவர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்கள் என்பதற்கு அப்பால்.... அவர்களின் ஆவணப்ப்பாதுகாப்பு தேவையான ஒன்றாக உணரப்பட்டுள்ளது. இவற்றை தாண்டி ஒரு நினைவு தினங்கள் வெறும் முகநூலில் மட்டுமே நினைவூட்டப்படுவது கசப்பான மனோபாவமாகும்.

மேற்படி கப்பல் விபத்தை அடிப்படையாகக்கொண்ட மூதூர் எழுத்தாளர்கள் மூலம் பல்வேறு சிறுகதை எழுதப்பட்டு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஜலசமாதி என்ற நூலின் ஆசிரியர்உபைத்துல்லா மூதூர் அவர்களின் கதை அலாதியானது...

குறிப்பு - மேற்படி நினைவு தினத்தில் குறிப்பாக மூதூர் மண் இழந்த ஒரு முக்கிய ஆளுமை #மாமனிதன்_ரெஸீம் sir நினைவூட்டப்படுவார்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages