Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, January 24, 2019

ஏன் இன்னும் புகைத்தல் கம்பனிகளை அரசாங்கத்தினால் மூடமுடியவில்லை

Related imageஇலங்கை பங்குச்சந்தை முதலிடத்தில் சிகரட் கம்பெனியே...
இலங்கையில் மட்டுமல்ல.... பெரும்பாலான வளர்முக நாடுகளில் இதுவே நிலைமையாகி இருக்கின்றது. காரணம் சிகரெட் கம்பனிகள் வளர்ச்சியுற்ற நாடுகளின் கைகூலிகள் தானே....
இருந்தும் ஏன் கம்பெனியை தடைசெய்யாமல் புகைத்தல் விழிப்புணர்வு செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது என்ற கேள்வி உங்களிற்கு உடனே தோன்றலாம்..... கட்டாயம் தோன்றி இருக்கணும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிப்பங்கில் பெரும் வருமானமீட்டும் ஒரு காரணியாக இருந்தபோதும் மேற்படி துறையில் செலவீனம் இதைவிட அதிகம் என்று எத்தனை பேருக்கு எம்மில் அறிந்துள்ளோம்.

பொதுவாக இலங்கையில் உள்ள பெரிய நிறுவனங்கள் கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது வழக்கம். பட்டியலிப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனத்தின் (Market Capitalization) பெறுமதியின் அடிப்படையில் முதலில் இருந்து கடைசி வரை பட்டியலிடப்படும்.
Image result for share market images
அந்த வகையில் கொழும்பு பங்குச் சந்தையின் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் முதலாவது இடத்தைப் பிடிக்கும் நிறுவனம் எதுவாக இருக்கும் என உங்களால் ஊகிக்க முடியுமா? இலங்கையின் பாரிய வியாபார கூட்டுக்குழுமத்தைக் கொண்ட முன்னனி நிறுவனமான ஜான் கீல்ஸ் ஹோல்டிங்காக இருக்குமா? அல்லது இலங்கைக்கு ஏற்றுமதி மூலம் அதிகமான இலாபத்தைப் பெற்றுத்தரும் ஹேலீஸ் நிறுவனமாக இருக்குமா? அப்படியும் இல்லையென்றால் நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள முன்னனி தனியார் வங்கியான கமர்ஷியல் வங்கியாக இருக்குமா? சோப்பு, பவுடர் முதல் பால்மா வரை அனைத்து விதமான FMCG பொருட்களையும் நாடெங்கிலும் விநியோகிக்கும் பாரிய வலையமைப்பைக் கொண்ட நெஸ்லே நிறுவனமாக இருக்குமா? மலேசியா இந்தோனேசியா நாடுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பார்ம் ஆயில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை செய்து உலகெங்கும் பார்ம் ஆயில் ஏற்றுமதி செய்யும் இலங்கை நிறுவனமான கார்சன் கம்பர்பர்ச் ஆக இருக்குமா? அமெரிக்காவுக்கு வால்மார்ட் என்றால் இலங்கைக்கு கார்கில்ஸ். அந்த வகையில் இலங்கையின் சுப்பர்மார்க்கட் துறையில் புரட்சியை உண்டுபண்ணி பாரிய சந்தை வலையமைப்பைக் கொண்ட கார்கில்ஸ் நிறுவனமாக இருக்குமா?
Image result for cigarette smokingநான் மேற்கூறிய நிறுவனங்கள் ஒன்றும் முதலாவது இடத்தில் இல்லை. சுப்பர் மார்க்கட் முதல் பெட்டிக்கடை வரை வெறுமனே சிகரெட் விற்கும் நிறுவனமான சிலோன் டுபேக்கோ நிறுவனமே சந்தை மூலதனத்தின் அடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையில் முதலிடத்தில் உள்ளது. இதன் சந்தை மூலதனப் பெறுமதி 262 பில்லியன்கள் ரூபாய்கள். இது கிட்டத்தட்ட கமர்ஷியல் வங்கியின் சந்தைமூலதனத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாகும்.

போதைப்பொருள் ஒழிப்பு என்பது இன்றைய காலகட்டத்தின் ஒரு முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. இதனையொட்டி பாடசாலைகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் பாவனையினால் ஏற்படக்கூடிய தீங்குகளைப் பற்றி கருத்தரங்குகள் மூலம் அரசாங்கம் விளக்கமளித்து வருகின்றது. உங்களிடம் நீங்களே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ளலாம். உடலுக்கு தீங்கு இழைக்கும் இந்த புகையிலைப் பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்தும் நிறுவனமான சிலோன் டொபேக்கோ கம்பனியை ஏன் அரசாங்கம் தடை செய்யக்கூடாது? கடந்த வருடம் மட்டும் சிலோன் டொபேக்கோ கம்பனி அரசாங்கத்திற்குச் செலுத்திய வரி 107 பில்லியன்கள், அதாவது 10,700 கோடி ரூபாய். இது என்ன சின்ன தொகையா? இந்த வருமானம் கிடைக்காவிட்டால் அரசாங்கத்தின் கஜானாவே காலியாகிவிடும். கடந்த வருடம் மட்டும் நமது புகைத்தல் ஆசாமிகள் மூலம் சிலோன் டொபேக்கோ கம்பனிக்குக் கிடைத்த மொத்த இலாபம் 14.5 பில்லியன் ரூபாய்கள். அத்தனையும் புகை மூலம் உழைத்த பணம்.

அதாவது எமது செலவீன முறையை பாருங்கள்....
👉 மருத்துவ செலவீனம் - புகைத்தல் மூலம் பாதிப்படையும் நபர்களுக்கான மருத்துவ செலவீனம் வருவாயை விட அதிகம்.
Image result for cigarette smoking👉 மானிடவியல் வள இழப்பு - ஒரு நாட்டின் பிரஜை என்பது அந்த நாட்டின் விலைமதிப்பற்ற ஒரு வளம்/ சொத்து. இலங்கையை பொறுத்தவரையில் வருடம் ஒன்றிற்கு 20,000 உம் நாள் ஒன்றுக்கு 57 நபர்களும் மரணிக்கின்றார்கள். இதே கணக்கீடு உலகளாவிய ரீதியாக நாளொருக்கு 1310 மரணம் இடம்பெறுகின்றது.
👉 வீண் விரயம் - உள்நாட்டில் தனிமனித சொத்து கையிருப்பு அந் நாட்டின் தலாவருமானத்திலும் மானிடவியல் பொருளாதார உயர்சியிலும் செல்வாக்கு செலுத்தும்.
👉 வெளிநாட்டு கம்பெனி வளர்ச்சி - எமது நாட்டில் இருந்து பலகோடி ரூபாய்களை அந்நிய கம்பெனி வருமானமாய் ஈட்டுகின்றது.

ஆகவே மேற்படி காரணங்களை ஒழிக்க பல்வேறு நடைமுறை உத்திகளை கையாண்டு வருகின்றது.
அதில் குறிப்பாக அடுத்த தலைமுறையின் மனோநிலை மாற்றம், பெற்றோர் பிள்ளைகள் மீதான விழிப்புணர்வு திட்டம், புகைத்தல் பற்றிய விளம்பரம் போன்றவற்றை நாடுப்பூராகவும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages