
தொடர்ந்து குருடனையும் செவிடனையும் ஊமையனாகுவும் காலம் கடத்தும் எம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் ஒருபுறம் நாக்குவளிக்க கோம்பை திண்ட திருடன் போல ஆகப்போகும் அரசியல் அதிகார இழப்பு.... சிறுபான்மை சமூகத்திற்கு
"முஸ்லிம் சமூகமே உன் தூக்கத்தில் வட கிழக்கினை இணைத்து உனக்கு 1987 இல் இழைக்கப்பட்ட துரோகத்தினை நினைவில் கொள்"
இன்று ஆங்காங்கே ஓர் கலவர நிலைமையை உருவாக்கி நம் கவனத்தை திசை திருப்பி "புதிய யாப்பு" வரைபினை இலகுவாக அடைய ஒரு சில கயவர்கள் திட்டமிட்டிருக்கலாம்;
எனவே நாம் கயவர்களிகளின் சதிகளை முறியடிக்க "யாப்பு வரைபு" பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு நாம், நம் அரசியல்வாதிகளை மட்டும் நம்பி இருக்க முடியாது என்பதை 18 நமக்கு சொல்லித் தந்துவிட்டது.
எனவே சிவில் அமைப்ப்புகள்,சட்ட மேதைகள் மற்றும் சமூக ஆரவலர்கள்
உடனடியாக
1.சமஸ்டி என்றால் என்ன?
2.அதனால் உள்ள சாதக பாதகங்கள் ?
3.புதிய யாப்பில் அடங்கியுள்ளவை யாவை?
4.அதன் சாதக பாதகம் ?
என்பன பற்றி தெளிவுபடுத்துங்கள்.
அத்தோடு முஸ்லிம்களின் வகிப்பவம் என்ன ? ???
என்ற கேள்விற்கு விடைதேடவேண்டிய தார்மீக பொறுப்பில் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை எப்போது உணரப்போகின்றோமோ தெரியவில்லை....
புதிய அரசியல் யாப்பின் நிபுனார் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது சபையில் 56 உறுப்பினர்களே சமுகமளித்திருந்தனர். அதில் சமர்ப்பிக்கப்பட்ட சில முக்கிய விடயங்கள் கவணிக்ப்பட வேண்டியது.
👉இலங்கை ஏக்கிய ராஜிய அல்லது ஒருமித்த நாடு.
👉புத்த மதத்திற்கு முன்னுரிமை.
👉இரண்டாவது சபை நிறுவப்படும்.
👉நிறைவேற்றதிகார ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் இரண்டாவது சபையினாலும் கூட்டாக தெரிவுசெய்ப்படுவார்.
👉நிறைவேற்றதிகார ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையுடனும் இரண்டாவது சபையில் 2/3 பெரும்பான்மையுடனும் நிறைவேற்றப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் நீக்கப்படலாம்.
👉ஒரு குழுவில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் வகித்தால், அவர்கள், ஜனாதிபதியில் நம்பிக்கையில்லை என்று ஏகமானதாக கருதும் பட்சத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதியை நீக்கலாம்.
👉பாராளுமன்றத்திற்கு 233 உறுப்பினர்கள் கலப்பு முறையில் தெரிவுசெய்யப்படுவர். இதில் 140 தொகுதிகள் அடங்கும்.
👉இரண்டாவது சபைக்கு 55 உறுப்பினர்கள். ஒரு மாகாணத்துக்கு 5 பேர் வீதம் 45 பேரும் பாராளுமன்ற சிபாரிசில் 10 பேரும் என தெரிவுசெய்யப்படுவர்.
பிரதமரின் உரை இப்புதிய யாப்பு நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகத்ததையே ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒருமித்த நாடு என்ற கருத்தின்கீழ் 9 மாகாணங்களே இருப்பது உறுதியாகின்றபடியால்; முஸ்லிம்களுக்கான சம அந்தஸ்துள்ள மாகாண அலகு எது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் 140 தொகுதிகளின் எல்லை நிர்னயம் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், மூதுர், கின்னியா, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, மன்னார், முஸலி பிரதேசங்களை தனி தேர்தல் வலயங்களாக உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில், முஸ்லிம்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவது இந்த அம்சங்களே.
அன்று தலைவர் அஷ்ரப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தினார். துரதிஷ்டவசமாக அது தீயிட்டு கொளுத்தப்பட்டது. இன்று அரசில் அங்கம் வகிக்கும் 18 முஸ்லிம் உறுப்பினார்களின் கையில் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் இருப்பு. வாக்கெடுப்பொன்று நடந்தால்? நீங்கள் நம்பும் உங்கள் தலைவர்களிடமே கேளுங்கள் முஸ்லிம் தேசியத்தின் வகிப்பகத்தை.
No comments:
Post a Comment