#சம்பவங்கள்
👉 சம்பவம் 1 - அண்மையில் வெளிநாட்டில் இருந்து கர்ப்பம் தரித்த நிலையில் ஊருக்கு வந்தமை.
👉 சம்பவம் 2 - வெளிநாட்டில் குறித்த பெண் ஒரு அடிமையாக சித்திரவதை செய்யப்பட்டு 12 வருடங்கள் பிற்பாடு ஊருக்கு வந்தமை.
👉 சம்பவம் 3 - தாய் வெளிநாட்டில் தந்தை உள்நாட்டில் வேறு ஒரு பெண்ணோடு தகாத உறவு.
👉 சம்பவம் 4 - தாய் வெளிநாட்டில் நீண்டகாலம் இருந்தமையும் தந்தை தான் பெற்ற பெண் குழந்தையோடு பாலியல் துஸ்பிரயோகம்.
👉சம்பவம் 5 - வெளிநாட்டில் வேலையும் செய்யும் எத்தனையோ பெண்கள் போன், ஒன்லைன் தொடர்பு மூலம் சீரலிகின்றார்கள்.
இவ்வாறு சம்பவங்களை அடிக்கொண்டே செல்ல முடியும்......
இவை இடம்பெற யார் காரணம் என்றால் நம் சமூகம்தான் காரணம் என்று கூறுவேன். காரணம் நாம் பலவிடயங்களை பேசுகிறோம். சம்மந்தமே இல்லாத பல சில்லறை பிரச்சினையை தூக்கிவைத்து பேசுகிறோம் ஆனால் எமது சமூகத்தை அழிக்கும் சில புற்றுநோய் செயற்பாடுகளை பற்றி யோசிப்பதோ அல்லது அதுபற்றி தெளிவூட்டவோ மறந்துவிடுகின்றோம். இதன் தாக்கம் எமது வீட்டையும் கடந்து செல்லும் போதே தலையில் கை வைத்து தலைகுனிகின்றோம்.
#பெண்கள்_வெளிநாடு செல்வதற்கான அடிப்படை #காரணம் என்ன?
👉 குடும்ப நிலை பொருளாதார பலஹீனம்.
👉 சீதனம், வரதர்சனை மற்றும் இன்னோர் என்ன திருமண சடங்கு சம்ரதாய செலவீனம்.
👉 குழந்தை அல்லது கணவன் அல்லது தன்னை சார்ந்த இரத்த உறவுமுறையில் நோய் மற்றும் மருத்துவ தேவைப்பாட்டு.
👉 குழந்தை கல்வி, வாழ்க்கைச்செலவு.
👉 உள்நாட்டு தொழில் வாய்ப்பு போட்டி
👉 உள்நாட்டு தொழில் வருவாய் பற்றாக்குறை
மற்றும் நடைமுறை செலவீனம்.
👉 பேராசை, ஆடம்பர வாழ்க்கை கோலத்தின் மோகம்.
👉 கடன், பொருளாதார நஷ்டம் போன்றவற்றை நிவர்த்தி செய்ய.
👉 உள்நாட்டு அரசியல் தளம்பல் நிலை.
👉 நிரந்த வருமான முதலீடு அல்லது குடியிருப்பு வீடு போன்றவற்றின் கட்டுமான குறைபாடு.
👉 பொழுதுபோக்கு
மேற்படி காரணங்களில் சில சமூகத்தின் பொடுபோக்கு காரணமாக இடம்பெறுவது. இதனை குறிப்பாக முஸ்லிம் சமூகம் #நிவர்த்திக்கும்_வழிமுறைகள் இருந்தபோதும் அவற்றை பிரயோகிக்க முடியாத மந்தகதி செயற்பாடு...
👉 முறையான சகாத், சதகா பங்கீடு இல்லாமை.
👉 முறையற்ற வேலை வாய்ப்பு சந்தை பகிர்வு.
👉 சமூகமட்டத்தில் வீண் செலவீனம் (Ex -பள்ளிவாயல் அலங்கரிப்பு, அரசியல், களியாட்டம்)
👉 முதலீடு செய்யும் தொழில்வாய்ப்பு முறைகளை சமூகத்தில் அறிமுகம் செய்தல் மற்றும் அது பற்றிய தெளிவூட்டலை வழங்காமை.
👉 புதிய முறை தொழில் ரீதியான முயற்சியின்மை.
👉 மார்க்கம் பற்றிய அடிப்படை தெளிவு இன்மை.
அன்றைய காலத்தில் இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் ஒன்றிணைத்த வாழ்க்கை முறைமை நிலவியது. இதன் தாக்கத்தினால் பல புதுமையான விடயங்கள் புனித இஸ்லாத்திலும் ஊடுரவ வாய்பாகியது. அவ்வாறனவற்றில் மிக முக்கிய வகிபாகத்தை பெறுகின்றது சீதனம் / வரதட்சனை.
ஆனாலும் இந்நடைமுறை இன்றும் பின்பற்றக்கூடிய வாழ்வியல் அம்சமாக மாறியதற்கு எமது சமூகமே காரணம்.

2. #இஸ்லாம்_காட்டிய_மாற்றுவழிகள்_நடைமுறைப்படுத்தப்படாமை. (பலதார திருமணம், வயதெல்லை வேறுபட்ட திருமணம், மறுமண முறைமை)
3. #பெண்ணிற்கான_உரிமை_மீறப்பட்டமை. (ஆண்கள் மஹர் கொடுப்பது பேரளவில் நடைபெறுகின்றமை, சுய நிர்ணயம் தீர்மானிக்கபாடமை)
4. #ஆண், #பெண்_சமத்துவம்_பேணப்படாமை. (சொத்துப்பங்கீடு, ஆண்களின் வயதை தாண்டிய திருமணம்)
5. #தலைமுறை_மாயை_தோற்றம்_காணல். (பெண்ணின் வயதெல்லை, ஆடம்பர வாழ்க்கைக் கோலமும் சமூக கட்டமைப்பும், பதவி, பட்டம், அந்தஸ்து, குடும்ப பின்னணி)
6. #இறை_படைப்பின்_தோற்றம_குறித்த_சித்தாந்தம். (பெண்ணின் அழகு, கலாகதிர் நம்பிக்கை குறைப்பாடு)
7. #இஸ்லாமிய_சிந்தனை_எழுட்சி_நடைமுறைப்படுத்தப்படாமை. (எழுட்சி காரர்களை ஒதுக்குதல், இஸ்லாமிய கொள்கை வாயளவில் நடைமுறைப்படுத்தப்படல், பொறுப்பானவர்களின் பொறுப்பற்ற தன்மை)
8. #ஸதகா, #ஸகாத்தின்_முறையற்ற_பங்கீடு (மேலதிக ஹஜ் கிரிகை, ஊரை தாண்டிய சேவை)
மேற்குறித்த காரணங்கள் விரிவான பார்வையில் பேசப்படவேண்டிய தலைப்புக்கள்.

1. ஆண் வர்க்கத்தின் நிலைபேற்ற பொருளாதார வாழ்க்கைக் கோலம்.
2. தொடர்ந்தும் உழைக்கும் சமூக கட்டமைப்பு.
3. தன்மானம் இழக்கும் சூழ்நிலை. (பெண்வீட்டார் முன், சமூகத்தின் முன்)
4. பெண்மையின் புனிதம் பறிக்கப்படுகின்றது.
5. பெண்குழந்தை பற்றிய ஜாகிலிய (அறியாமைக்கால) தோற்றப்பாடு.
6. தன்னம்பிக்கை அற்ற ஆண்மை சமூகம் உருவாக்கப்படல்.
7. முறைகேடற்ற முறையில் பெண்கள் உழைக்கவும், ஊதியம் தேடவும் வழிகோலுதல்.
8. சமூகத்தில் விபச்சாரம், கொள்ளை, பொய் தோற்றம் பெறல்.
9. மதமாற்றம் / கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக வெளிப்பாடு.
10. குடும்ப கட்டமைப்பு சீர்குலைத்தல் (ஆணின் உழைப்பு, சந்தோசம், உறவுமுறை, குடும்ப பொறுப்பு)
“பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்” (அல்குர்ஆன் 2:236, 4:4, 4:24)
No comments:
Post a Comment