தமிழ் சினிமா பிரபலமான நாவல்களை படமாக்குவதில் எடுத்துக் கொண்ட ஆர்வம் அந்த நாவல்களை சிதைவுறாமல் படமாக்குவதில் பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்திருக்கின்றது. இதனை எழுத்து நவீனன் மாஸ்டர் சுஜாதா கொஞ்சம் ப்ளக் கொமடி கலந்து சொல்லுவார்…
சுஜாதாவின் காயத்ரி (இதே பெயரில் படமாக்கப்பட்டது-ரஜனி நடித்தது, ப்ரியா (இதே பெயரில் படமாக வந்தது-ரஜனி நடித்தது..படம் அவ்வளவு பிரம்மாதம் என்று சொல்லாவிட்டாலும் இளையராஜாவின் பாடல்களுக்காக ஓடியது), விக்ரம் (அதே பெயரில் வெளிவந்த படம்-கமல் நடித்தது), அப்புறம் கரையெல்லாம் ஷெண்பகப்பூ (அதே பெயரில் படமாக வந்தது-பிரதாப் போத்தன் நடித்தது), அனிதா இளம் மனைவி (ஜெய்சங்கர் நடித்த படம்), ஆ (தமிழில் ஷைத்தான்—விஜய் ஆண்டனி நடித்தது), பிரிவோம் சந்திப்போம் (ஆனந்த தாண்டவம் திரைப்படம்) பொய் முகங்கள் (அதே பெயரில் படமாக வந்தது), என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜுனோ (எந்திரன் படம்…கிட்டத்தட்ட இந்தப்படத்தில் மேற் சொன்ன இரண்டு நாவல்களின் தாக்கமும் நிறைய இருக்கும்.)…..இப்படி நீண்டு சென்று கொண்டிருக்கின்ற பட்டியலில் ஒரு சில படங்கள் தவிர பெரும்பாலான படங்களில் தமிழ் இயக்குனர்கள் சுஜாதாவின் நாவல்களின் அடிப்படை அம்சங்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பார்கள்….நாவலின் பல இடங்களில் கத்தரி வைத்து வெட்டி அளவு பார்த்து சாரியை சல்வாராக்கி அப்புறம் அதனை ட்டூ பீசாக்கி…பிகினி செய்திருப்பார்கள்.
சுஜாதாவுக்கு அவரது நாவல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்களில் திருப்தியே இருந்தது கிடையாது என்று அவரே பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கின்றார். அவரது சில நாவல்களை படமாக்கிய பஞ்சு அருணாச்சலத்திடம் இனிமேல் இந்த விஷப்பரீட்சை வேண்டாமே என்றாராம். அதே போல நீல பத்மநாதனின் “தலைமுறைகள்” நாவலை அடிப்படையாக வைத்து அண்மையில் வெளிவந்த “மகிழ்ச்சி” திரைப்படமும் இந்த சிதைவு சின்ட்ரோம்கள் நிறைந்த்துதான்.

ஆனால் ஆங்கிலப்படங்கள் இதற்க நேரெதிர். ஒரு நாவலின் அடிப்படை மாறாமல் அந்த நாவலில் இருக்கின்ற அதே ஆதார சுருதியை அப்படியே கொஞ்சமும் சிதைக்காமல் அந்த நாவலை அப்படியே திரைக்கதையாக மாற்றுவதில் ஆங்கிலப்பட நரைத்த தாடிகள் அல்டிமேட் அரசர்கள். 2003ம் ஆண்டில் வெளியாகி அந்த வருடத்தின் அதிரிபுதிரி விற்பனையில் ஆசம்மாகி ஓவர் நைட்டில் ஓர்கச ஹிட்டடித்து பெஸ்ட் செல்லிங் நாவலென்ற ராஜகிரீடத்தை சூடிக் கொண்ட டேன் பிரவுன்ஸின் “டா வின்ஸி கோட் (Da Vincie Code”)” நாவல் அதே பெயரில் 2006ம் ஆண்டு ரொன் ஹோவார்டின் இயக்கத்தில் வெளியாகி பொக்ஸ் ஒஃபிஸில் தாறுமாறாக ஹிட்டடித்து கல்லாப்பெட்டியை வயிறு வீங்க வைத்தது.
டா வின்ஸி கோட் எனக்கு என்றைக்குமே மறக்க முடியாத திரைப்படம்….ஏற்கெனவே நான் சொன்னது போல டேன் பிரவுன்ஸின் “டா வின்ஸி கோட்” நாவலை கொஞ்சம் கூட சிதைக்காமல், திரைக்கதைக்கு மாற்றுகின்றோம் என்ற போர்வையில் முழுச் சுதந்திரம் எடுத்துக் காண்டு அதன் ஆதார சுருதியில் கை வைத்து அதன் மூலத்தின் முள்ளந்தண்டில் கத்தி வைத்து அப்புறம் மேஜர் சேர்ஜரி செய்து அந்த நாவலையே கவர்ன்மென்ட் ஹொஸ்பிட்டல் மோர்ச்சுவரிக்கு அனுப்பி முற்றிலும் இன்னுமோர் படம் எடுக்காமல் அந்த நாவலை படத்துக்கு ஏற்ற திரைக்கதை அமைத்து நாவலின் அதே சுவாரஸ்யத்துடன் டாவின்ஸி படத்தை தந்திருப்பார்கள்.
2006ம் ஆண்டில் எக்கச்சக்க சரச்சைகளை சந்தித்த சென்சார் தேசத்து திரைச்சத்திரம்…இந்தப்படத்தின் அளவுக்கு திரைப்பட வரலாற்றில் பல்பக்க எதிர்ப்புகளை சந்தித்தித்த படங்கள் சொற்பமே. அந்தளவுக்கு இந்தப்படம் பல நாடுகளிலிருந்து எதிர்ப்புகளை பின்னிணைப்பாக பெற்றுக் கொண்டது. அதிலும் குறிப்பாக கத்தோலிக்க திருச்சபைகள் படத்துக்கெதிராக கிளர்ந்தெழுந்து படத்தை எந்தத்திரையிலும் வெளியிடவே கூடாதென்று செய்த ஆர்ப்பாட்டங்களால் ஆஸிட் அதகளம்.
வத்திக்கான் தொடங்கி படத்துக்கான எதிர்ப்புகள் சர்வதேச ரிதியாக ஹை டெஸிபலில் சைரனடித்தன. எங்கும் எதிர்ப்பு எல்லாத் தேசத்திலும் எதிர்ப்பு…..பல நாடுகள் படத்தை திரையிடுவதிலிருந்து டா வின்ஸி கோடை சென்சோர்ஷிப் செய்திருந்தன. இலங்கை கூட அன்றைய நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் திரையிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருந்த்து. அத்தேர்டு படத்தை எந்த சேனலிலும் உளிபரப்ப்க் கூடாதென்று தடையும் விதிக்கப்பட்டிருந்த்து. இலங்கையில் நடந்த கத்தோலிக் பிசப்புகளின் மாநாட்டில் படத்தை தடை செய்கின்ற தீர்மானம் எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் டாவின்ஸி கோட் திரையிடுவது தடை செய்ய்ப்பட்டது.
டாவின்ஸிகோட் செய்த ஒரே தப்பு என்னவென்றால் கிறஸ்தவ மத்த்தையும் அதன் உண்மைத்தன்மையையும் அது கேள்விக்குட்படுத்தியதுதான். கிறிஸ்தவத்தை பற்றியும் ஏசு கிறிஸ்து பற்றியும் அவரது கடவுள்த்தன்மை பற்றியும் அதன் இரண்டாயிரம் வயது கொண்ட வரலாற்றுத் துரோகம் பற்றியும் கேள்விகளுக்கு மேல் கேள்விகள் எழுப்பியதுதான். ஏசு கிறிஸ்து கடவுளல்ல மாற்றமாக அவரும் ஒரு சக மனிதர்…அவர் நல்லவர்…அவருக்கும் ஒரு குடும்பம் இருந்தது. அவரது மனைவி பெயர் மேரி மெக்டலின். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப்பரம்பரையில் பிறந்தவர்கள் இன்னும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று டா வின்ஸி கோட் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி சப்ளை செய்கின்றது. அதனை படம் படம் நிரூபிக்கின்றது.
உலகப் பகழ் பெற்ற டாவின்ஸி வரைந்த “ஏசுவின் இறுதி இராப்போசனம்” என்கின்ற அந்த ஓவியத்திலிருந்து ஆரம்பமாகின்ற ஏசுவின் குடும்ப ரகசியம் அதற்கப்புறம் அவிழ்ந்து செல்லுகின்ற ஒவ்வொரு மர்ம முடிச்சுகளுடனும் வரலாற்று சுவாரஸ்யத்தையும் நிஜத்தையும்; கொண்டு வருகின்ற போது ஆராயச்சியின் உச்சக்கட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்றது. ஏசு கிறிஸ்து ஒரு மனிதன்தான் என்றும் அவருக்கும் ஒரு குடும்பம் இருந்த்து அவரது பரம்பரைகள் இன்னும் இந்த பூமியில் வாழுகின்றன………….
அவர் ஒரு கடவுளல்ல………
பிதாவின் மகனுமல்ல என்கின்ற உண்மை தெரிந்தும் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளுவதற்காக அனைத்தும் கடவுள் செயல்….கடவுளுக்கே சித்தம் என்ற நம்பிக்கையை உருவாக்கி ஏசு கிறிஸ்து வணக்கத்துக்குரிய கடவுள் என்று மக்களை நம்பவைத்து அதனை இரண்டாயிரம் வருடங்களாக காப்பாற்றி வருகின்ற கத்தோலிக்க திருச்சபைகள், எஞ்சியிருக்கின்ற ஏசு கிறிஸ்துவின் பரம்பரையை கண்டறிந்து அதனை பூண்டோடு அழிக்கின்ற மிஷனில் வெறியோடு திரிகின்ற திருச்சபை சார் இயக்கம் ஒரு புறம், எஞ்சியுள்ள ஏசு கிறிஸ்துவின் பரம்பரையை காப்பதே தமது தலையாய கடமை என்று அந்தப் பரம்பரையினை பாதுகாத்து அதற்காகவே வாழுகின்ற ஒரு இயக்கம் மறுபுறமென்று படத்தின் துல்லியமான திரைக்கதை கதிரை நுனிக்கு நம்மைக் கொண்டு செல்லுகின்றது.
மதத்தின் பெயரால் மக்களை நம்ப வைத்து அதன் மீது அதிகாரம் செலுத்துகின்ற திருச்சபையின் போலிமையையும் பொய்க் கட்டமைப்பினையும் படம் பல இடங்களில் வரலாற்று ஆதாரங்களோடு தோலுறித்துக்காட்டுக் கொண்டேயிருக்கின்றது. ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட ஆண்டுகளாக மக்களை ஒரு பொய்யை நம்ப வைத்த எப்படி கிறிஸ்தவ திருச்சபை ஆட்சி நடாத்தியிருக்கின்றது என்பதனை திரையில் விவிரிக்கின்றது டாவின்ஸி கோட். ஏசு கிறிஸ்து ஒரு கடவுளல்ல என்று படம் ஆதாரங்களோடு அடித்துக் கூறுகின்றது. பைபிள் பலர் சேர்ந்து உருவாக்கிய நூல் என்கின்றது.
படத்தில் ஒரு காட்சி…………புகழ் பூத்த விஞ்ஞானி சேர் ஐசக் நியூட்டனின் லண்டனில் அமைந்துள்ள கல்ல்றை…..அந்த கல்லறையை பார்த்துக் கொண்டே “இந்த உலகின் புகழ் பூத்த விஞ்ஞானி இங்கே உறங்கிக் கொண்டிருக்கின்றார். அவர் புவியீர்ப்பு சக்தியை கண்டு பிடித்து அறிவித்த போது அதனை திருச்சபை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த புவியீர்ப்பு சக்தி என்கின்ற விஞ்ஞானத்தை மத்த்துக்கெதிரானதாக அவர்கள் பார்த்தார்கள்…..நியூட்டனின் இறுதிச்சடங்கில் எல்லோரும் நினைப்பது போல போப் யாரும் கலந்த கொள்ளவில்லை. மாறாக அவரது நெருங்கிய நண்பரான அலெக்சான்டர் போப்தான் அவரது இறுதிச்சடங்கை முன்னின்று நடாத்தினார்” என்று உரையாடல்கள் தொடரும். விஞ்ஞானம் எதிர் திருச்சபை என்றிருந்த வரலாறு என் கண் முன்னே ஓடிக் கொண்டிருந்த்து.
திருச்சபையின் அதிகாரத்தின் மீது தன் போக்கில் கை வைத்து கேள்விகளை சாரமாரியாக வீசி விடுகின்ற இடங்களில் கத்தோலிக்க திருச்சபை படத்துக்கெதிராக ஆவேசத்தோடு குரலெழுப்புவது தவிர்க்க முடியாதுதான். நிச்சயம் பாரம்பரிய கிறஸ்தவ சிந்தனைகளுக்குள்ளே கட்டுண்டிருக்கின்றவர்களை படம் புண்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.
கட்டமைத்து வைக்கப்பட்டிருக்கின்ற மதத்தின் மீதான வரலாற்று நம்பிக்கையை அப்படியே உடைத்து நொறுக்குகின்ற டா வின்ஸி கோட் திரைப்படமானது ஒரு நேர்த்தியான திரைக்கதை எப்படி இருக்க வேண்டுமென்று நமக்கு கற்றுத் தருகின்றது. ஒரு மதம் சார் திரைப்படத்தை எப்படி ஒரு திரில்லிங்கான படமாக கொடுக்க முடியும் எனடபதற்கு இந்தப்படம் ஒரு சான்று.
2006ல் முதன் முதலாக இந்தப்படத்தை பார்த்து படம் முடிந்த பின்னரும் அமர்ந்து கதிரையிலிருந்து எழும்ப முடியாமல் ஏராளமான கேள்விகளோடு அப்படியே யோசனையில் கிடந்தேன். வரலாற்று ஆய்வுகளோடு கலப்பின்றி உருவாக்கப்பட்ட படம். கவனமாகச் செதுக்கியிருக்கின்றார்கள். இப்படியான ஒரு படத்தை அமெரிக்க போன்ற ஒரு நாட்டில் இயக்குவதற்கே தனி வேறான தைரியம் வேண்டும். மதம் சார்ந்த மேட்டர்களை அடிப்படையாக்க் கொண்டு ஒரு கிரைம் திரில்லரை உருவாக்கியதில்தான் நமக்கு கண் முன்னே விரிகின்றது டா வின்ஸி கோட்.. அந்த திரைக்கதையில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்.
டா வின்ஸி கோட் பற்றி சுருக்கமாக ஒரு வார்த்தை சொல்லப் போனால் கூரான கத்தி மீது குதி வைத்து நடந்திருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment