
முதலில் கனிகள் மற்றும் பூக்கள் பற்றி தெளிவாக கூறவேண்டும் மேற்படி வினாவிற்கு.
மனித வரலாற்றில் மிக முக்கியமான தானிய வகையை சார்ந்ததாகும். அத்தோடு பலருக்கு பரிச்சியமான ஒரு தாவர வர்க்கமாகும். சோளத் தாவரத்தை பொருத்தமட்டில் ஆண்டுக்குரிய (ஒரு வருடத்திற்கு உற்பட்ட) தாவரமாகும். அத்தோடு சோளம் கதிர் ஒரு கூட்டுக் கனியாகும். கனி என்று நான் கூறுவது ஒவ்வொரு தனியப் பருக்கையைத் தான். உண்மையும் அதுவே. அதாவது ஒரு கதிரில் காணப்படும் ஒவ்வொரு தனிய மணியும் சோளத்தின் ஒவ்வொரு பழம் ஆகும். இவை கூட்டாக இருப்பதனால் கூட்டுக்கனி என்று அழைக்கப்படுகின்றது.

சோளம் கதிர்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். கதிரின் வெளிப்புறம் இலை வடிவான உரைகள் உள்ளக கூட்டுக்கனியை பாதுகாக்கும். அதன் வெளிப்புறம் மயிர் போன்ற நீண்ட மீசைகள் வெளியே காணப்படும். இவை என்னவென்றால் பூவில் காணப்படும் குறி (Stigma), தம்பம் (Style) என்பதுவே....
ஒன்றும் குழம்ப வேண்டாம்....

வித்துக்கள் உண்டாகவேண்டுமாயின் பூக்கள் கருக்கட்ட வேண்டும். கருக்கட்ட வேண்டுமாயின் மகரந்த சேர்கை நடைபெறவேண்டும். ஆனால் சோளத்தில் பெண்ணாகம் (Pistil), ஆணகம் (Stamen) வெவ்வேறாகவே பிரிந்து காணப்படும். சோளத்தாவரத்தின் மேல் பகுதில் பூக்கும் பூக்கள் ஆண் பகுதியாகவும் கீழ் பகுதியில் வெளியாகும் கதிர்கள் பெண் பகுதியாகவும் காணப்படும். உதாரணமாக செவ்வரத்தை பூவை எடுத்துக்கொண்டால் ஆண், பெண் பகுதிகள் ஒன்றாகவே ஒரே பூவில் காணப்படும். அவ்வாறு எல்லாத்தாவரங்களிலும் அமையாது.
தென்னை மரத்தின் பாளை பகுதியில் காணப்படும் குரும்பை (பெண்), பூ (ஆண்) என்பனவாகும். இவ்வாறே பூசணியும் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்.
சோளத்தின் மீசையின் தொழிற்பாடு
சோளம் கதிரின் மீசை ஒவ்வொரு சோளம் தனியத்திற்கும் சொந்தமான நீட்சி அடைந்த தம்பம், குறி பகுதியாகும். இவை போர்த்தப்பட்ட சுற்று உரையை விட்டு வெளியே தனித்து காணப்படுவது மகரந்த சேர்க்கையை நிகழ்த்துவதற்கே. அதுபோல இவை காற்றில் மகரந்தச் சேர்கை மேற்கொள்ளும் பூக்களுக்கு உதாரணமாகும்.
மேற்படி மீசை கருக ஆரம்பிக்கும் தருணம் அல்லது நிறமாற்றம் உண்டாகும் தருணத்தில் சோளம் கதிர் முதிர்ச்சி (Maturity) அடைந்துள்ளது என்று அறுவடை மேற்கொள்வார்கள்.
சோளம் பற்றி மேலதிக தகவல்

காபோவைதரேற்று செரிமானத்தையும் இன்னும் சில அத்திய அவசிய கனியுப்புக்களையும் சோளம் கொண்டு அமைந்துள்ளதனால் பல உணவு உற்பத்தியில் அதிக செல்வாக்கை பெற்றுள்ளது. இவற்றை தாண்டி சோளம் பொறி (Popcorn) உலகளாவிய பிரசித்த பெற்ற நொறுக்குத்தீனி உணவாகும்.
தேடல் வலைத்தளம்
https://en.wikipedia.org/wiki/Maize
https://oregonstate.edu/instruct/css/330/six/index.htm
https://simple.wikipedia.org/wiki/Maize
No comments:
Post a Comment