
முதல் மனைவி மரணிக்க வேண்டும் என எந்த நிபந்தனையும் இஸ்லாத்தில் இல்லை.அதே போல் முதல் மனைவி அல்லது முந்தின மனைவி அனுமதி கொடுத்தால் தான் கணவர் அடுத்து திருமணம் முடிக்கலாம் எனக் குர்ஆன் கட்டளையிடவுமில்லை. நபியவர்களும் வழிகாட்ட வில்லை. கணவர் அவ்வாறே தன் முந்திய மனைவியிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமுமில்லை.
கணவருக்கு அழ்ழாஹ் இட்ட நிபந்தனை யாதெனில் *எல்லா மனைவியோடும் நீதமாக, நியாயமாக நடக்கவேண்டும். தனது மனைவிகளை ஒரே மாதிரியாக வழிநடாத்த வேண்டும்.அவ்வாறு முடியாவிட்டால் ஒரு மனைவியோடு மாத்திரமே வாழ வேண்டும்*.ஒன்றோடே சமாலிப்பது பெரும் பாடு எனக் கணவர் கருதினால் ஒரு மனைவியே போதும்.
இதை இந்த வசனம் தெளிவு படுத்துகின்றது........:-
"அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் *ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்),* அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்" (அல்குர்ஆன் : 4:3)
ஒரு கணவர் இன்னொரு திருமணம் முடிக்க விரும்பினால் அல்லது முடித்து விட்டால் முந்திய மனைவிமாரும் சமூகத்தில் *உள்ளவர்களும் அதைக் கேவலமான, இழிவான செயலாகக் கருதி அவரைக் கீழ்தரமான ஒரு மனிதராகப் பார்ப்பது, அழ்ழாஹ் ஹலாலாக்கிய ஒன்றை நாம் ஹராமான செயலாகக் கருதுவதாகவே அமையும்*.மற்றவரின் திருப்திக்காக அழ்ழாஹ்வின் கட்டளைகளில் *உள்ளவற்றை எமக்கு ஹராமாக்க முடியாது.* அதை இந்த வசனம் எமக்கு உணர்த்துகின்றது......:-
"உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்" (அல்குர்ஆன் : 66:1)
பலதாரமணத்தின் நோக்கம்
💓பிள்ளைகள் வேண்டுமெனபதற்காக,
💓உடல் தேவைக்காக
💓இன்னொரு பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்க
💓இரக்க மனதிற்காக
💓தனது மித மிஞ்சிய வசதிக்காக
எனப் பல திருமணங்களை அவர் முடிக்கலாம்.காரணங்களே *இல்லையென்றாலும் கணவர் நீதமாக நடக்கத் தயார்* என்றால் அவருக்கு மறுமணம் செய்து கொள்ளலாம்.நபியவர்கள், ஸஹாபாக்கள் பலர் பல திருமணங்கள் முடித்துள்ளதை நாம் ஹதீஸ்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
இதை மனைவிமார்கள் *அழ்ழாஹ்வின் மேல் அன்பு கொண்டு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.மனதளவில் துவண்டு போனாலும் அதை ஏற்றுக் கொள்ளும் போது அழ்ழாஹ் மறுமையில் அதற்கான நன்மைகளை அள்ளித் தருவான்.* அழ்ழாஹ்வின் கட்டளைகள் அனைத்திலும் நன்மையும் நீதமும் நிச்சயமாக இருக்கும். *ஈமானுறுதிமிக்க பெண் அதை சிறந்த நன்மை என நல்லெண்ணம் கொண்டு தன் கணவருக்கு உற்ற துணையாக இருப்பாள்* .பெண்களின் நீதத்தை அழ்ழாஹ் இவ்விடத்தில் கூறவில்லை. ஏற்றுக் கொள்ளாவிடில் அப்பெண்களைத் *திருப்திப்பட வைக்க முடியாது* என்றும் அழ்ழாஹ் கூறுகின்றான். இவ்வசனம் அதைத் தெளிவு படுத்துகின்றது.......:-
"(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், *மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது;* ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) *முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள்* போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்" (அல்குர்ஆன் : 4:129)
ஆகவே எந்தக் கணவர் நீதமாக இருக்க முடியும் என்ற நல்லெண்ணத்தோடு அழ்ழாஹ்வுக்குப் பயந்து இன்னொரு திருமணம் முடிக்கின்றாரோ அதைத் தடுப்பதற்கு எவராலும் முடியாது.முந்திய மனைவி அறிந்தோ அறியாமலோ முடித்துக் கொள்ளலாம். இது அழ்ழாஹ்வின் கட்டளைக்குற்பட்ட ஓர் விடயமாகும். *நீதமாகக் கணவர் நடந்து கொள்ளாவிட்டால் அவரது பாவத்துக்குரிய தண்டனையை அழ்ழாஹ் அவருக்கு வழங்குவான்* .உணவு , உடை , உறையுள் என எல்லா வசதிகளையும் ஒரே மாதிரி எல்லா மனைவிகளுக்கும் வழங்க வேண்டியது கணவரின் பொறுப்பாகும்.எனவே *இரண்டாம் திருமணத்திலும் கூடக் கட்டளைகளும் உரிமைகளும் கணவருக்கே வழங்கப்பட்டுள்ளது* என்பது குறிப்பிடத்தக்கது.
அழ்ழாஹ் மிக அறிந்தவன் , அவனே நீதம் செலுத்துவதில் சிறப்புமிக்கவன்.
No comments:
Post a Comment