மனித மூளையானது உடல் எடையில் சுமார் ஐம்பதில் ஒரு பங்கு நிறையை அண்ணளவாக 1400g கொண்டதாக இருந்தாலும் இதன் மூலமாக மனித உடல் அடையும் பயன்பாடுகள் எண்ணிலடங்காது. மனித மூளையானது குழந்தை உருவாக்கத்தில் தோன்றும் முதன்மை அங்கங்களில் ஒன்றாகும். இது மனிதனின் சிந்தனை, உடலியல் கட்டுப்பாடு, உடலியல் சீராக்கம், உடல் உணர்வுகள், நினைவுபடுத்தல் போன்ற முக்கிய செயற்பாடுகளை ஒழுங்கமைக்கின்றது.
மூளையானது இரு அரை கோளங்களையும் மேலும் நான்கு பெரும் தொழிற்பாட்டு பகுதிகளையும் கொண்டதாக காணப்படுகின்றது.

வலது, இடது மூளைகள் தனக்கென சில சிறப்பு தொழில்களை செய்யும் அதேவேளை மூளையின் முக்கிய பாகங்களான நுதற் சோணை (Frontal labe), பிடர் சோணை (Occipital labe) சுவர் சோணை (Parietal labe), கடைணுதல் சோணை (Temporal lobe) என்னும் நான்கு பாகங்களும் அவற்றுக்கென சிறப்பு வாய்ந்த செயற்பாட்டையும் மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் பொய் பேசும் ஆற்றலும் இங்கே தான் தீர்மானிக்கப்படுகின்றது என்றும் கூறுகின்றனர். மேலும் இதுபற்றி “அத்தியவசிய உடலியல் மற்றும் உடற்கூறியல்” - Essentials of Anatomy and Physiology என்ற நூல் மிகவும் தெளிவாக விபரிக்கின்றது.
புனித அல்-குர்ஆன் இதுபற்றி சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
“மேலும் அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் அவனுடைய முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் அவனது முன்னெற்றி ரோமத்தை” (அல்-குர்ஆன் 96:14~15)
மேல் எடுத்துக்காட்டிய வசனத்தில் “நாஸியா” என்ற அரபு வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் தமிழ் மொழியாக்கம் முன்நெற்றி என்பதாகும். இங்கே முன்நெற்றி என்பது மூளையின் முன்பகுதி ஆகும்.

இங்கு கூறப்பட்ட புனித குர்ஆனிய வசனம் இறக்கப்பட்ட பின்னணிக் காரணம் கொடுமைபுரியும் ஒரு நபரைக் குறித்து பேசுகின்றது என்று குர்ஆனிய விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இங்கே குறிப்பிட்ட நபரின் செயல்கள் உண்மைக்கு புறம்பாக காணப்பட்டதனால் இவ்வசனம் அவரை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மிக அண்மைய இக்கண்டுபிடிப்பான இதனை பதினான்காம் நூற்றாண்டில் எவரால் கூறியிருக்க வாய்ப்புண்டு எனும் கேள்வி நிச்சயமாக உங்களுக்கு தோன்றுமாயின் இவ்வினாவிற்கான விடை “அவனே மெய்யான இறைவன் அல்லாஹ்” என்பதாகும்.
No comments:
Post a Comment