
1. அதிக மரங்கள் இருப்பதனால் சூரிய ஒளிக்கான தேவையை நாடி சூரிய ஒளியை தேடி வளர்வதற்கான போட்டி.
2. காற்றின் தடையை எதிர்கொள்ள அவ்வாறு வளர்த்தல்.
3. கடல் அரிப்பின் காரணமாக வேர்தொகுதி மண் இலக்கபடுவதனால் ஒருபக்கமாக சாய்தல்.
மேற்படி காரணங்கள் எமது சொந்தனைக்கு பொருத்தமான காரணங்களாக தென்படலாம். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. உண்மையான பிரதான காரணம் வித்து பரம்பலை மேற்கொள்ளவே....
என்ன வித்துப்பரம்பல் மேற்கொள்ளவா???
ஆமாம். சரி அது எவ்வாறு என்று பாப்போம்.
வித்து பரம்பல்
தாவரங்கள் தனது இனத்தை பரப்புவதற்கு என்று வித்துக்களை தோற்றுவிக்கும். அவ்வித்துகள் தாய்தாவரம் வாழும் சூழலில் இருந்து வேறு சூழலில் முளைக்கவே தாவரங்கள் விரும்பும். இதற்காக பல்வேறு இசைவாக்கங்களைக் கொண்டு காணப்படும்.

வித்துக்கள் பரம்பலடைய பிரதான காரணம் சூழலியல் போட்டியை குறைக்கவே. அதாவது இருப்பிடம், நீர், சூரிய ஒளி, போசனை போன்ற அடிப்படை தேவைகளில் உண்டாகும் போட்டியை குறைக்கவே... உதாரணத்திற்கு ஒரு மாமரம் உண்டாக்கும் அனைத்து வித்துக்களும் மாமரத்தின் கீழ் வளர்வது என்று வைத்துக்கொள்வோம். உருவாகும் அனைத்தும் ஆரோக்கியமாக வளராது. இவ்வாறு அடுத்த சந்ததியும் குறித்த பகுதியில் முலைக்குமாக இருந்தால் சற்று கற்பனை செய்து பாருங்கள்.... காரணம் ஒரு அங்கிக்கு கிடைக்கும் பெறுமானம் பலத்திற்கு பகிரப்படும். அதாவது ஒரு வீட்டில் இரு குழந்தை உள்ளது. மற்றைய வீட்டில் ஐந்து குழந்தை உள்ளது. இரு வீட்டிற்கும் உணவு ஒரே அளவில் கொடுக்கப்பட்டால் யார் வீட்டு குழந்தை நன்றாக வளரும் என்று உங்களுக்கே தெரியும். அதுபோலவே....
மற்றைய காரணம் உலகில் பல்வேறு சூழலில் தங்களின் நிலைத்திருப்பை வியாபித்து வளர்த்தல். இதனால் ஒரு சூழலில் அந்த அங்கி அழிக்கப்பட்டாலும் மற்றைய சூழலில் நிலையாக வாழ வாய்ப்பாகும்.

பரம்பல் முறையும் இசைவாக்கமும்.
இது எல்லோருமே அறிந்த விடயம்தான். வித்துக்கள் பரம்பலடையும் முறை விலங்குகள், நீர், காற்று, பொறிமுறை அதிர்வு (வெடித்து) என்பனவாகும். இவற்றுக்கு வித்துக்கள் தனித்தனி இசைவாக்கம் கொண்டுள்ளது.
விலங்கு மூலம் - சுற்றுக்கணியம் (சதை), வாசனை, அழகிய நிறங்கள், போலித் தோற்றம் (வண்டு, பூச்சி அமைப்பு), ஓட்டும் தன்மையான , கொழுவும் தன்மையான வித்துக்கள் காணப்படும். உதாரணம் - மா, பலா, புலிநகம், ஆமணக்கு, குருவிச்சை
நீரின் மூலம் - நீரில் நனையாத மேலுறை, நீரில் மிதக்கும் விதமான அமைப்பு, காற்றிடைவெளி, நீரிலும் அடர்த்தி குறைவாக இருத்தல். உதாரணம் - தென்னை, கமுகு, கடல் மாங்காய், தாமரை, கிண்ணம்
காற்றின் மூலம் - அதிக வித்துக்கள், பாரம் குறைவாக இருத்தல், காற்றில் பறக்கும் அமைப்பான சிறகு, விசிறி, பஞ்சு அமைப்பு. உதாரணம் - எண்ணெய், தேக்கு, எருக்களை
வெடித்தல் மூலம் - வித்துக்கள் வெடிப்பதன் மூலமாக வித்துக்கள் தூக்கி வீசப்படுதல். உதாரணம் - இறப்பர், காசித்தும்பை, கனகாம்பரம்
தென்னை
தென்னை ஒரு நீரினால் பரம்பலடையும் வித்து. அவை கடல், ஆற்று சூழலை நோக்கி வளர்வதன் மூலமாக அவற்றின் வித்துக்கள் இலகுவாக நீரில் மூலமாக வேறு இடங்களிற்கு எடுத்துச்செல்ல இலகுவாக அமையும்.
No comments:
Post a Comment