
ஒரு சமூகத்தில் பல்வேறுபட்ட கலைஞர்கள் காலாகாலம் உதயமாகிக்கொண்டே இருக்கின்றார்கள். அவ்வகையில் மிலேனிய நூற்றாண்டில் கலைவடிவம் நவீனத்துவ பரிணாமம் பெற்று உயிர்வாழ்ந்து வருகின்றது தொழிநுட்ப வளர்ச்சியினால்.
ஒரு கலைஞனின் திறன் மற்றும் அவனது வெளியீடுகள் அந்த கலைஞனை சார்ந்த சமூகத்தின் பின்னணியில் மருவி நிற்கின்றது. கலைஞர்களின் பொதுவான இயல்பே கைதட்டல்களையும் பாராட்டுக்களையும் எதிர்பார்ப்பது. அவை மக்கள் மன்றத்தில் இருந்து எவ்வளவுதூரம் கிடைக்கப்பெருமோ அந்த அளவிற்கு தரமிக்க வெளியீடுகள் அல்லது படைப்புக்கள் குறித்த கலைஞன் இடத்தில் இருந்து பிறக்கும்.

காலத்தால் அழிந்துவரும் ஒரு பாரம்பரிய கலாசார அம்சமே மண்வாசனை நகைச்சுவைகள். அவை இயந்திர நாகரீகத்தில் இன்றைய தலைமுறை ஒன்றடக்கலந்து பயணிக்க முன்னுள்ள தலைமுறையோடு உலாவிவந்த பண்பாட்டு அம்சம். ஆனால் தலைமுறை இடைவெளி மற்றும் நாகரிக உலகின் மோகங்கள் என்பன பல மானிடவியல் இடைத்தொடர்புகள் கொண்ட மண்வாசனை கலாசாரங்களை களையெடுத்துவிட்டது எனலாம்.
அவ்வகையில் அன்றைய பாரம்பரிய அம்சங்களை இன்றுள்ள தலைமுறையில் ஒருசிலர் புதுபிக்க முயன்று அதில் பாரிய வரவேற்ப்பையும் பெற்றுவருகின்றார்கள். அப்படியான ஒரு நபரே அப்துல் ஜப்பார் சாகீர்.

மண்வாசனை_முகநூல்_எழுத்தாளன்
எவ்வளவு பெரிய இலக்கிய எழுத்தாளர்களாக இருந்தபோதும் மண்வாசனை சார்ந்து அவர்களின் மொழிநடை மற்றும் ஆக்கங்கள் வெளியீடு செய்யப்படுவது அரிதே. காரணம் #மண்வாசனை_சார்ந்த_படைப்பில்_உள்ள_தனித்துவ_குணாதிசயம் மற்றும் #செழுமைப்பாங்குடன்_கூடிய_செயலூக்கம் சற்று சளைச்சலை வாசகர்களுக்கு உண்டாக்கும் என்ற மனோநிலைமை. இதன் காரணமாக மண்வாசனை சார்ந்த புத்தாக்கம் புத்தியிர்ப்பது புதினமாகவே இருக்கும் இலக்கிய உலகில்....

மிக அண்மையில் அறிமுகமான எனது ஊரை பிறப்பிடமாக கொண்ட முகநூல் சகோதரர் மற்றும் மூத்த மாமனிதன் #ஷாஹிர்_அப்துல்_ஜப்பார் (Zahir Abdul Jabar) என்ற மண்வாசனை முகநூல் எழுத்தாளன். Facebook வாசகர்கள் இவரை செல்லமாக அழைக்கும் பெயர் சா.நா.

அவ்வாறான அன்றைய (2000 ஆண்டுக்கு முற்பட்ட) #நகைச்சுவையை_ஊரின்_பேச்சு_மொழி_வழக்கில் படைக்கும் தனித்துவ பாங்கு இவரின் (சா.நா) ஒரு விசேட இயல்பு என்று கூறமுடியும். இவரின் #தொடர்_நகைச்சுவை பதிவு பல பொழுதுகள் #ஊரின்_அன்றைய_கால_மக்களின்_வாழ்க்கை_முறை மற்றும் #மானிடவியல்_இடைத்தொடர்பு என்பவற்றை பறைசாற்றி நிற்பது மாத்திரமன்றி அவற்றை பிரதிபலிக்கும் காட்சி ரூபம் அலாதியானதாக பலபொழுதுகள் உணர்ந்துள்ளேன்.

தனது எழுத்துப்பணியின் மூலம் மண்வாசனை நக்சுவைகளை உலகறியச் செய்யும் பாரிய முயற்சியில் முயற்சித்து வருகின்றார். அவரின் முயற்சிகளிற்குசமூக வலைதள ஆர்வலர்கள் பாரிய வரவேற்பையும் ஆதரவையும் வழங்கி வருகின்றார்கள். உண்மையில் இவ்வாறான முயற்சிகள் மதிக்கத்தகவையோடு அவை பாதுகாத்து ஆவணமாக்கல் செய்யப்படவேண்டிய முக்கிய கருப்பொருளாகும்.
எனவே எவ்வாறானவர்களை வாழ்த்தி ஊக்குவிக்கும் நல்ல உள்ளங்கள் எமது சமூகத்தில் மலிந்து காணப்படுகின்றது என்பதற்கு இந்நூல் சாட்சி.
இவற்றுக்கு மேலேக ஒரு மண்வாசனை இலக்கியம் சமகாலத்தில் புத்தியிர்ப்பு பெறுவது என்பது இந்த நாகரிக உலகத்தில் எழுவது ஒருவகை முன்னேற்றமான விடயமே... என்று கூறி நகைச்சுவைக்குள் நுழைவோம் வாருங்கள்.
ரசிகர்கள் வாழ்த்துமடல்கள்















No comments:
Post a Comment