Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 7, 2018

மாற்றம் குறுந்திரைப்படம்

தோப்பூர் மண்ணின் வலிகள் பேசும் குறும்படம்
அரசியலும் ஆண்டாண்டுகால தோப்பூர் மண்ணினும் என்ற தொனிப்பொருளின் கீழ் செவ்வையாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆவணத்திரைப்படம் (Documentary Short Film) என்று நோக்கப்படவேண்டிய ஒரு படைப்பு.
பலால்தீன் இஹ்ஷான் (Ihshan Mohamed) அவர்களின் படைப்பில் இக்குறும் திரைப்படம் இரண்டாவது நவீனத்துவம் இலக்கியம் சார் படைப்பாகும். இதற்கு முன்னர் வெளியான #The_Great_Farmer () படைப்பில் தவறவிடப்பட்ட முக்கிய குறைப்பாடுகள் இக்குறும்படத்தில் நிவர்த்தி செய்யப்பட்டமை உண்மையில் வரவேற்கத்தக்கது.
#படைப்பில்_வரவேற்ப்பு_அம்சங்கள்
👉 ஒலி, ஒளி பதிப்பில் தெளிவான ஊட்டல்.
👉 காணொளிப்பதிவிற்கு (Video Recording) நவீனத்துவ சாதனமான ட்ரோன் (Drone Camera) பயன்படுத்தப்பட்டுள்ளது.
👉 திரைகதை நகர்வு ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்திய கோர்ப்பாக இணைக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு அரசியல் வாக்கு மோசடிகளை முன்வைக்கும் விதம் அலாதியானது.
👉 சமகால இளைஞர்களின் அரசியல் மீதான தாக்கம் அதனூடான வேலைவாய்ப்பு போன்றவை மிகவும் எளியவடிவில் விபரனப்படுத்தப்படுகின்றது.
👉 நகைச்சுவை பாங்குடன் கூடியதாக எடுத்துரைக்க முயலும் காதல் காட்சியும் சகோதரிகள் கொண்ட ஆண்மகன்களின் உளவியல் நிலைபாடுகளும்.
👉 நவீனத்துவ தேவைப்பாடுகள் சமூக மட்டத்தில் எவ்வாறான தாக்கம் செலுத்துகின்றது என்பதையும் பாரம்பரிய கலாசாரம் அழிவுற்று போகும் நிலையம் மறைமுகமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
👉 அண்மைக்கால அரசியல் போக்கும் சமூக வலைத்தள செல்வாக்கும்.
#சுட்டிக்காட்ட_முயலும்_முக்கிய_கரு
👉 அடிப்படை தேவைகளான எரிபொருள் நிரப்பு நிலையம், தானியங்கி பணவங்கி அமைப்பு, பிரதேச செயலகம் இன்மை
👉 உள்நுழைவு பாலத்தின் சிரமம், பிரதான பாதைகளின் நிலைப்பாடும்.
👉 அரசியல் கட்சிகளிற்கு சோரம்போகும் சொந்த மண் மானிடர்கள்.
👉 தகுதியற்ற அரசியல் வாதிகளும் அவர்களின் வாக்குவங்கி பேணப்படும் வாக்குறிதிகளும். (முற்சந்தி அமைப்பு, இராணுவ தள நீக்கம்)
#படைப்பில்_விடப்பட்ட_குறைபாடுகள்
👉 மண்வாசனை மொழி ரீதியான பிரதிபலிப்பு இன்மை.
👉 பின்னணி இசையமைப்பு சற்று புதியதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம். (மேற்படி குறும்படத்தில் கையாளப்பட்ட அனைத்து பின்னணி இசையும் அனைவருக்கும் பரிட்சையமான ஒன்று என்பதனால்)
👉 குறிப்பிட்ட சில இடங்களில் பின்னணியாக தேர்வு செய்யப்பட பிரதேசங்கள் பொருத்தமின்மை.
👉 அரசியல் வாதிக்கு தேர்வு செய்யப்பட நபர். சற்று வயோதிபர் ஒருவரை தேர்வு செய்து இருந்தால் சிறப்பாக அமைந்து இருக்கும் (தனிப்பட்ட கருத்தே)
👉 முழுக்க முழுக்க இளைஞர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. (கலை, இலக்கியம் தொடர்பான மூத்த கலைஞ்சர்களை உள்வாங்கி இருக்கலாம்)
😩 மிகவும் முக்கிய குறைப்பாடு - திரைப்படத்தில் சுட்டிக்காட்டிய விடயங்களை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று விழிப்புணர்வு வழங்கப்படவில்லை.....
Production- Cesda welfare society
Producers- Satheek
Actors- #Ihshan#Rifkhan#Sajath#Infas#Hisham#Usama#Nifras#Ihjas
Story writer - Ihjas
Production cost- 1500
Main concept - Political Disillusionment
Direction period - 2 months
Music & Editing - Ihjas Mohamed
Direction - Ihshan
Camera - Infas
     
எது எவ்வாறோ உண்மையில் பாராட்டப்படவேண்டிய ஒரு நவீனத்துவ இலக்கிய படைப்பு. இவ்வாறான படைப்புக்கள் மேலும் வெளியாக வாழ்த்துக்கள்.
மாற்றம் குறும்பட Youtube Link
👉 https://youtu.be/eMLuYgPxPus
முன்னைய குறும்பட விமர்சனம்
https://m.facebook.com/story.php?story_fbid=2138488673049557&id=100006653354283

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages