
கலண்டர் தொடக்கம் கல்யாண பத்திரிகை வரை புனித வேத வசனங்களை கொண்டு உள்ளடக்கம் தயாரிப்பது உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாக இருந்தபோதும் அவற்றின் பாவனை நிறைவு பெற்றதும் எவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதனை பலர் அறிந்தோ அறியாமலோ எமது சிந்தனைக்கு எடுக்க தவறிவிடுகின்றோம்.
புனித அல்குர்ஆன் வசனங்கள் பிரதி சிதைவுற்றாலோ அல்லது அழிக்கப்படவேண்டிய தேவைப்பாட்டை உணர்ந்தாலோ பலர் அதனை எரித்தோ, மண்ணில் புதைத்தோ, கடலில் கறைத்தோ அழிக்கும் நடைமுறை கலாசாரம் பாரம்பரியமாக எமது சமூக வழக்கில் இருந்து வருகின்றது. ஆனால் வேறு இடங்களில் பொறிக்கப்படும் புனித வேதத்தின் வசனங்கள் குறித்து நாம் எந்தஅளவில் அவதானமாக இருக்கிறோம்?
"தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்" (அல்குர்ஆன் 56:79)
மேற்படி வசனத்தில் இருந்து பலர் தவறான புரிந்துணர்வை கொண்டுள்ளார்கள். அதாவது அல்குர்ஆனை தொடுவது என்பது தூய்மையான நிலையிலே மட்டுமே என்று. மாறாக இது கூறும் கருத்து வேறு.
ஏன் மேற்படி வசனத்தை இங்கே சுட்டிக்காட்டினேன் என்றால் பலர் இந்த வசனத்தை கொண்டு எனது கருத்தை முறியடிக்க முற்படலாம் என்பதனலையே....
சரி விடயத்திற்கு உள்நுளைவோம்.
அதாவது புனித வேத வசனங்களை யாரும் கற்கலாம், கையாளலாம், கடைபடிக்கலாம். அதுவே வேதத்தின் நோக்கமும் ஆகும். இருந்தபோதும் சில இடங்களில் நாங்கள் பயன்படுத்துவதை சமகால சூழலில் தவிர்ப்பது ஒரு பொருத்தமாக இருக்கலாம் என்பதே எனது கருத்து. அதாவது நாம் நாட்காட்டி, திருமண அழைப்பிதழ், மற்றும் துண்டுப்பிரசுரங்களில் மேற்கோள் காட்டும் புனித வேத வசனங்கள் அலற்சியமாக அசிங்கப்படுத்தும் நிலையை காணமுடிகிறது. அதாவது தேவை முடிந்ததும் குப்பையிலோ அல்லது கழிவுக் கூடையிலோ போடப்படும் அற்ப பொருட்களில் ஏன் புனித வசனங்களை பயன்படுத்தவேண்டும். மாறாக இதற்கு மாற்றீடு ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம் அல்லவா?
வேதத்தின் கருவை எத்திவைக்க முன்னெடுக்கும் சீரிய சிந்தனை வரவேற்புக்குரியதாக இருந்தபோதும் நவீனத்துவ சூழலில் அவை எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதே எனது வினா?
உதாரணமாக கலண்டர் பாவனை பற்றி எடுத்துக்கொண்டால் எத்தனை நபர்கள் அதனை பயன்படுத்துகின்றோம் என்றால்..... உங்களுக்கே பதில் தெரிந்து இருக்கும். சிலர் பெயரளவில் வீட்டுக்கு கலண்டர் என்ற நிலையில் சுவற்றில் மாட்டி வைத்துள்ளார்கள். இன்னும் சிலர்கள் ஏதோ இலவசமாக கிடைத்தது வீணாகிவிடும் என்றும் இன்னும் சிலர் ................. இவ்வாறு காரணம் கூறிக்கொண்டே செல்லமுடியும்.
எது எவ்வாறோ நவீனத்துவ உலகினில் பல்வேறு அறியாமை தவறுகளை செய்யவேண்டும் என்று முஸ்லிம்களை இலக்காகக்கொண்டு காய் நகர்த்தப்படும் மேற்கத்தேய சிந்தனை குறித்தும் எமது இஸ்லாமிய வரையறை குறித்தும் நிதானமான காலடி வைப்புக்களை முன்னெடுக்கவேண்டிய தேவைப்பாட்டில் இன்றுள்ள தலைமுறை பணிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment