
சமூகத்தில் குறித்த ஒருசில மேட்டுக்குடிகள் தொடர்ந்தும் நீண்டகாலங்கள் குறித்த பொறுப்பு நிலை மட்டத்தை தனத்தாக்கி இயங்குவதும், இன்னும் சில இடங்களின் குறித்த தரப்பாரே தொடர்ந்தும் மற்றவர்கள் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படுவதும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை கீழ்மட்டக்குடிகளுக்கு ஏற்படுத்தி வருகின்றது. அவ்வகையில்
தொடரும் தலைமைத்துவ வகிபாகம் காரணமாக எந்தவித அனுகூலங்களும் சமூகத்திற்கு இல்லையென்று முழுமையாக சாடிவிடமுடியாது. அவற்றிலும் பல நன்மைகள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் இருக்கின்றது. உதாரணமாக அனுகூலங்கள்....

2. மானிடவியல் இடைத்தொடர்பு - பல்வேறுமட்ட மானிடவியல் தொடர்புடமை மற்றும் அரசியல், இனம், மதம் மற்றும் பிரதேசம் சார்ந்த பிணைப்புகள்
3. மக்கள் மயமாக்கம் - பரீட்சையமான பிரச்சினைகளுக்கு தெரிவான வழிகாட்டல் மற்றும் புது அறிமுகம் தேவையற்ற மக்கள் மயமாக்கப்பட்ட சமூகம் சார்ந்த ஊடுருவல் நிலைப்பாடு.
4. அதிகார பரவலாக்கம் - உயர்பீட அதிகார தன்னிறைவு மற்றும் சொல்லியல், செயலியல் ரீதியான வலுவான உடன்பாடும் ஒத்துழைப்பும்.
5. நிர்வாக கட்டமைப்பு மற்றும் வலுவான பின்னணி - நீண்ட தலைமைத்துவ அனுபவ வாயலாக கட்டுக்கோர்பான நிர்வாக கட்டமைப்பு ஒழுங்குபடுத்தல், சக்திவாய்ந்த மானிட ஒன்றிப்பு மற்றும் செயற்பாடுகளில் உடன்பாட்டு மற்றும் முரண்பாட்டு பின்னணி கட்டமைப்பு

இவற்றை தாண்டிய முக்கிய பிரதிகூலங்கள்....
1. செயற்பாட்டு மந்தநிலை - ஒருவர் அல்லது ஒரு தரப்பார் பல்வேறு சமூக அமைப்புக்கள் மற்றும் பொறுப்புக்களின் தலைமைபீடம் சார்ந்து இருக்கின்றதனால் ஒரு துறை சார்ந்து முழுமையான அர்பணிப்பு மற்றும் செயல்திறனை வெளிப்படுத்த முடியாமல் செயற்பாட்டு மந்தம் அசமந்த போக்கை சந்தித்தல்.
2. தொடர்பாடல் - மேல் தரப்பார் சமூகத்தில் அந்தஸ்து வாய்ந்தவர்கள் என்பதனால் அவர்களை சாதாரண குடிமகன் தொடர்புகொள்வதில் மற்றும் தொடர்பை பேணுவதில் பாரிய வறட்சி நிலை மற்றும் இடைவெளி காணப்படல்.
3. செயற்பாட்டு விரியலாக்கம் - பொறுப்புவாய்ந்த தலைமைகள் தாங்கள் என்பதனால் புதுமுக அங்கத்தவர்களின் செயற்பாட்டில் முரண்பாட்டு அணுகுமுறையை தாண்டி முடக்கும் அணுகுமுறை மேலாதிக்கம் செலுத்தல். இதனால் வைக்கோல் மேல் நாய் ஒப்பான நிலைமை....
4. அதிகார துஸ்பிரயோகம் - அதிகாரம் தன்னிடம் இருப்பதன் காரணமாக சுயநல முடிவுகள் மற்றும் அங்கிகாரங்கள் வழங்குதல். இதற்கு அப்பால் தன்னிலை பாதுக்காக்க நற்சிந்தனை புறக்கணிக்கப்பட்டு உதாசீனம் செய்யப்படல்.
5. பாகுபாடு - தன்னினம், தன்னிடம், தன்சமூகம் சார்ந்த ஒருநிலைபட்ச பாகுபாடுகள்.
6. முன்னுரிமை மழுங்கடிப்பு - சுயவிருப்பு வெறுப்பு சார்ந்து பல்வேறு கீழ்மட்டக் குடிகளின் செயற்பாடு, ஆலோசனை முன்னுரிமை படுத்தப்படாமல் மழுங்கடிப்பு மற்றும் புறக்கணிப்பு செயற்பாடு.

8. ஏட்டுக்கல்வி தகமை - ஆளுமை என்பது அனுபவம் சார்ந்த ஒன்று என்று எண்ணாமல் ஏட்டுக்கல்வி சார்ந்து தலைமைத்துவ அதிகார பகிர்வு என்பது பாரிய பின்னடைவை உண்டாக்கியுள்ளது.
9. மன அழுத்தம் - பல்வேறு பொறுப்புக்களின் இருப்பவர்கள் பல பிரச்சினைகளை முகம்கொடுப்பதன் காரணமாகவும் சமூகத்தில் தனக்கான அங்கீகாரம் வலுவிழக்கும் போது மனசோர்வு மற்றும் சமூகம் மீதான அவநம்பிக்கை நிலைமை தோற்றம் பெறல். இதனால் தனது இயல்பு வாழ்வில் பாரிய இடைவெளி மற்றும் இடைஞ்சல்களை சந்திக்க நேரிடல்
மேற்படி காரணங்கள் அனைத்துக்கும் இந்த சமூகத்தின் ஒவ்வொரு தனியனும் காரணம். இதனை தொடர்ந்து தலைமைத்துவ அதிகார பகிர்வுநிலை படுமோசமான குருட்டுநிலை சிந்தனையை பின்தங்கி நிற்பது அதைவிட கேவலமானது. எனவே நவீன உலகத்தில் புதிய ஆளுமை மிக்க பல இளம் தலைமுறைகளை நாம் இந்த சமூகத்திற்கு அறிமுகம் செய்வதோடு அவர்களை வழிக்காட்டி வழிநடத்த வளர்த்தெடுப்பது பாரிய தேவைப்படாக உலகளாவிய ரீதியாக இந்த முஸ்லிம் சமூகத்திற்கு எழுந்துள்ளது. எனவே ஆளுமைமிக்க இளம் தலைமுறைகளை அடையலாம் காண்பதில் இன்றுள்ள சமூகத் தலைமகள் மீதான பாரிய பொறுப்பாக வியாபித்துள்ளது.
பழைமைத்துவ சித்தாந்த சிந்தனைகளை தாண்டி நவீன உலகின் நவீன சவால்களுக்கு முகம்கொடுக்கும் அடுத்த தலைமுறைக்கான தலைமையை உண்டாக்குவதே இன்றுள்ள பாரிய சமூகவியல் தேவைப்பாடு என்பதனை நாம் சிந்தித்து செயற்படும் தருணம் எப்போது என்றுதான் தெரியவில்லை எமக்குள் இருக்கும் மார்க்கம்சார் சில்லறை பிரச்சினைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு விமர்சனத்தில் காலம் கழிப்பதில்.....
எனவே பொறுப்பு கொடுக்கும் நாமும், பொறுப்பு கொடுக்கப்படும் அவர்களும் எவ்வளவு அந்த பொறுப்புக்கு தகுதியானவர்கள் என்பதை நாம் மிகநுணுக்கமான மீளாய்விற்கு உற்படுத்தவேண்டும். என்பதனை நபி அவர்களின் வழிகாட்டல் தெளிவு படுத்துகின்றது.
மூத்தா போர் தலைமை சிறந்த எடுத்துக்காட்டு.....
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் இறுதிக் காலத்தில்) உசாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பிவைத்தார்கள். அப்போது உசாமாவின் தலைமை குறித்து (அவர் வயதில் சிறியவர் என்று) குறை கூறப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவரின் தலைமை குறித்து இப்போது நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், (இது என்றும் புதிதல்ல.) இதற்கு முன்பு (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் தலைமையையும் தான். நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள் (புஹாரி - 7187, 6627, 4469, 4261, 4250, 3730, 2798 முஸ்லிம் - 3607, 4809)
No comments:
Post a Comment