
“ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் அதற்கு வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” (அல்-குர்ஆன் 20:50)
மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள வசனங்களின் பொதுப்படை வெளிப்பாடு; நட்சத்திரங்கள் வழியை கண்டறிய மனிதன் மட்டுமன்றி ஏனையவற்றுக்கும் உதவுகின்றது. அவை சுருக்கமாக கீழ்தரப்பட்டுள்ளன.
மனிதன் தன் பயணப்பாதையை அறிய உதவுதல்.
சில உயிரினங்கள் வழி அறிய பயன்படுத்தல். உதாரணமாக சில கடல் மீன்கள், நீண்டதூரப் பயணப் பறவைகளை கூறலாம்.
ஏவுகணைகள், நீர்மூகிக் கப்பல்கள், செய்மதி, கப்பல்கள், விண்வெளி ஓடம் மற்றும் சிலவகை விமானங்கள் இன்றும் கூட நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கின்றது.
விமானிகள் மற்றும் மாலுமிகள் GPS என்ற நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தினாலும் அவர்கள் நட்சத்திர அமைவை கற்றுள்ளனர்.
சில பூச்சி இனங்கள் வழியறிய உதவுகிறது.
உயிரியல் ஆய்வாளர் எரிக் வாரன்ட் என்பவர் பூச்சிகளின் சிறப்புத் தன்மைகள் குறித்து ஆய்வுகள் நடாத்திய உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார். ஆஸ்திரேலியா ஸ்வீடன் லேன்ட் பல்கலைக்கழகத்தில் இவர் சிறப்பு ஆராய்ச்சியாளராக தற்போதும் கடமை புரிந்து வருகின்றார்.
“பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம்முடைய பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை” (அல்-குர்ஆன் 6:38)
https://www.bbc.com/news/science-environment-21150721
No comments:
Post a Comment