
இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பாதிப்பை சந்திக்கிறது. அந்த வகையில் நமது உடலின் மிக பெரிய உறுப்பாக இருக்க கூடிய கல்லீரலும் அடங்கும். இதனை பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை. ஒரு சில சாதாரண அறிகுறிகள் கூட உங்களின் கல்லீரலை பாதித்து உயிருக்கே ஆபத்தை தரும். அவை என்னென்ன என்பதை இனி அறிந்து கொள்வோம்.
கல்லீரல் என்ன செய்யும்..?

தோல் எரிச்சல்
நீண்ட நாட்களாக உங்களின் தோலில் அரிப்பு ஏற்பட்டால் அதனை சாதரணமாக விட்டு விடாதீர்கள். இவை மிக பெரிய ஆபத்தை கூட உங்களுக்கு தரும். குறிப்பாக கல்லீரல் மோசமான நிலையில் இருந்தால் உடலில் நீண்ட நாட்கள் அரிப்பு ஏற்படும். அத்துடன் சருமமும் வறண்டு போகும்.
மூளை அவ்வளவுதான்..!
கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு மூளையின் நரம்புகள் செயலிழக்க கூடும். குறிப்பாக நமது ஞாபக சக்தி மெல்ல மெல்ல குறைய தொடக்கி விடும். ஏனெனில், ரத்தத்தில் உள்ள நச்சு தன்மையை கல்லீரல் நீக்க விட்டால் இந்த நிலை கட்டாயம் ஏற்பட கூடும்.

நீங்கள் ஆணாக இருந்தால் உங்களின் கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். அதாவது, ஆண்களின் மார்பகங்கள் பெரியதாகினால் கல்லீரல் கோளாறாக உள்ளது என்று அர்த்தமாம். அத்துடன் ஹார்மோன்கள் பிரச்சினையும் இதனால் ஏற்படுமாம்.
கையிலும், கால்களிலும்...
உங்கள் கல்லீரல் அபாயகரத்தை தொட்டுள்ளது என்பதை இந்த அறிகுறிதான் உறுதி செய்கிறது. கை மற்றும் கால்களின் பாதங்களில் சிவப்பாக இருந்தால் கல்லீரலில் ஏதேனும் நோய் வந்துள்ளது என்று அர்த்தம். எனவே, கைகளும், பாதங்களும் சிவப்பாக இருந்தால் கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்.
மஞ்சள் காமாலை
கல்லீரல் பாதிப்புகளை உங்களின் நிறமே காட்டி கொடுத்து விடும். கண்களோ அல்லது தோலோ மஞ்சளாக இருந்தால் அது கல்லீரல் பிரச்சினைக்கான அறிகுறியாகும். இதே நிலை நீடித்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்.

எந்த ஒரு வேலையும் செய்யாமல் நீங்கள் சோர்வடைந்தால் அதற்கு பல வித காரணிகள் இருக்கலாம். ஆனால், இது கல்லீரல் கோளாறாக உள்ளது என்பதையும் உணர்த்துகிறதாம். மூளைக்கு அனுப்ப கூடிய ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால் இத்தகைய நிலை ஏற்படுகிறது.
அடர்ந்த சிறுநீர்
சிறுநீரக பிரச்சினை இருந்தாலே நமது உடல் மோசமான நிலையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். சிறுநீர் அடர்ந்து காணப்பட்டால் அவை கல்லீரல் நோயிற்கான அறிகுறியாக இருக்கும். எனவே, இவ்வாறு இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.
No comments:
Post a Comment