
அவ்வகையிலே சகோதரன் Dinojan Vigna உடன் விரல்விட்டும் என்னும் சில மாதங்கள் தான் பழகி இருப்பேன். இருந்தும் எங்கள் இருவருக்குள்ளும் ஏதோவொரு இனம்புரியாத புரிதல். ஒருவேளை முட்டுக்கட்டையற்ற மதங்களின் தலையீடை தாண்டிய விமர்சன நோக்கு பின்னணியாக இருந்து இருக்குமோ?
விடுதியில் வெட்டியாக வேலை பார்க்கும் வேளையில்தான் எங்களின் உரையாடல் உதயாமாகும். மனிதன் தொடக்கம் மனிதக் கடவுள்கள்வரை வியாபித்து விரிவாகும் எம் சிற்றறிவு சில்மிஷம் கலந்த உரையாடல். அவ்வப்போது திரைப்படங்கள் உள்ளோயும் ஊடறுத்து ஊசலாடச்செய்துவிடும் லொஜிகள் திங்கிங்....
ஒருமுறை இவ்வாறுதான் பேசும்வேளை வில்லன் இராவணன் தலைப்பில் இடை சருகப்பட்டான். என்னவோ தெரியவில்லை இராவணன் என்று சொன்னதும் இந்துக்கள் வில்லனாக நோக்கும் பலர் மத்தியல் இவன் மட்டும் கதாநாயகனாக காட்சிப்படுத்த முயற்சித்தான். எனக்கு ஆச்சரியம்தான். இருந்தும் அவனது சிந்தனையில் தெளிவு இருந்தது எனக்கு தெளிவை வழங்கியது.
விடயத்திற்கு உள்நுழைவு முன்.....
(மதத்தை மதிப்பவன் நான். இங்கே ஏதும் தவறாக சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துங்கள். - இந்து சகோதர்களுக்கு எந்தன் வேண்டுகோள்)
இராமாயணம் தொடக்கம் கம்பராமாயணம் ஆகட்டும், யாரை வில்லனாக காட்சிப்படுத்துகின்றதோ அவனை மறைமுகமாக தலைவனாக பேசுகின்றது கீழத்தேய இலக்கிய வாடையில். கடவுள் பக்தன் எவ்வாறு கடவுளின் பெயரில் அட்டூழியம் செய்கையில் கடவுள் எதிரி சாத்தான்கள் சத்திய புண்ணியங்கள் செய்வதை தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசுவதை மானிட உள்ளங்கள் மறுப்பதை காணமுடிகிறது. இது கதாநாயகன் மேல் கொண்ட மிலேச்சத்தனமான அவா எனலாம்.
உதாரணமாக இராமயணத்தை எடுத்துக்கொண்டால் கடவுள் இராமன் சீதையை மீட்க இராவணன் மீது போர் தொடுக்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறான் என்பதை தான் நாம் பார்கிறோமோ தவிர ஒருசில நாழிகையில் சீதையை இலங்கை கொண்டு வந்துவிடுகிறான் வில்லான் ஆனால் பல்லாண்டுகள் கழிகின்றது இலங்கை வந்தடைய கதாநாயகனுக்கு, தனி ஒருவனை எதிர்க்க ஓராயிரம் வானர படைகள் தேவைப்பட்டது தலைவனுக்கு, கடத்தி வந்த அடிமையை (சீதை) அரசியாக மதிக்கிறான் வில்லன் ஆனால் கடவுளோ ஒழுக்கம் தவறியவள் என்று சந்தேகம் கொள்கிறான்.... இவ்வாறு பல....
பத்து தலை இராவணன் என்று அவனை கொடுமைக்காரனாக நோக்கும் பலர் மத்தியல் நானும் அவனும் மட்டும் தலைவனாக நோக்கினோம். நிஜம், கற்பனைகளுக்கு அப்பால் ஒன்றை மட்டும் அவன் தெளிவாக முன்வைத்தான். அதாவது #ஊரோடி ஒருவனும் சிறந்த கற்பனை திறன் மிக்கவனும் ஆனா ஒருவனால் தான் தான் உலகின் பல பாகங்களில் கண்ட காட்சி சுவடுகள், காதுவழி கற்பனைகளை ஒன்றித்து ஒரு கண்ணியமிக்க கதையாக திரிபூட்ட முடியும்.
எது எவ்வாறு உண்மை பொய்களுக்கு அப்பால் மானிட சமூகத்திற்கு மனதில் கூறிட முற்படும் சத்திய அசத்தியத்தை கற்போம் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். ஆதலால் அவனுக்கு மதங்களும் சரி மனிதர்கள் குணங்களும் சரி ஒரு தடையாக இருந்ததில்லை Vasi Susi போன்று #Dino இவனுக்கும்.
பத்து தலை என்று இராவணனை வர்ணிக்கும் இராமயாணம் அவனது பத்து வேறுபட்ட குணங்களை உவமானமாக கூறுகிறது. அவற்றில் நுண்ணறிவு, அன்பு, சத்தியம், மரியாதை போன்ற முகங்கள் எமது சிந்தனை முகத்திற்கு மறைக்கப்பட்டே பதியப்பட்டுள்ளது வரலாற்றில். ஆனால் மாற்றுக்கண் கொண்டு நோக்கினால் வரலாறுகள் உண்மையில் தலைவனுக்கானது அல்ல. மாறாக வில்லனுக்கானது என்று புரிவது சற்று தாமதம் தான்.
அவ்வாறுதான் ஒவ்வொரு தனி மனித வாழ்விலும் இராமன், இராவணன் என்ற இருவகை பண்புநிலை மனங்கள் உயிரோட்டத்தோடு உலாவுகின்றது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை தான் மக்களுக்கு ஒரு செயலை அல்லது சிந்தனையை இராமனதா அல்லது இராவணனதா என்று பிரதிபலிப்பது.
எது எவ்வாறோ சாத்தான்கள் புதிசாளிகளோடு இறைவனுக்கு ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்தவர்கள் என்று நாங்கள் நம்புவதை மறுக்கின்றோம் விரும்பியோ விரும்பாமலோ.....
No comments:
Post a Comment