
👉மற்று சகோதரன் மரண ஊர்வலத்திற்கு நபி அவருக்காக எழுந்து மரியாதை கொடுத்தார்கள்.
👉ஸலாம் கூறினால் மறுபதில் அவர்கள் கூறுவது போன்று கூறுவார்கள்.
👉ஷதகா, மற்றும் இன்னும் சில உதவிகளை மாற்றுமத்தினருக்கு வழங்குங்கள்.
👉மாற்று மதத்தினர் கடவுளுக்கு காணிகையாக்காத உணவை புசியுங்கள்.
மேற்படி நிகழ்வுகளில் இருந்து....
ஒரு மனிதனுக்கு கொடுக்கும் கண்ணியம் என்பது புலனாகிறது. ஒருவர் எமக்கு வாழ்த்து தெரிவிக்கின்றார். நாம் அவருக்கு நன்றி கூறுகிறோம். ஒருவர் எமக்கு நற்செய்தி கூறுகிறார் அவருக்கு நாமும் காணிக்கை செய்கிறோம். இவை மானித வாழ்வின் ஒரு அங்கம்.
மனிதன் பெசுவதான் காரணமாக இவ்வாறான நிகழ்வுகள் நடக்கின்றது. இவைகளை மார்க்கத்தோடு தொடர்பூட்டி பல மானிடவியல் இடைத்தொடர்புகளை மாற்று சிந்தனையோடு கண்டதன் காரணமாக பல மதங்களை கொண்ட மக்கள் இடத்தில் இஸ்லாம் என்றால் என்ன என்ற அடிப்பை தத்துவத்தை கூட எத்திவைக்கும் வாயல்களை அடைத்துவிட்டோம் நாம்.
பல்லின மதம், மொழி, இனம் வாழும் சூழலில் எவ்வாறு நாம் எமது ஆளிடைத்தொடர்பை பேணவேண்டும்?
உங்களின் செயற்பாடுகள் உங்களை சார்ந்த மதத்திற்கு அல்லது மதத்தின் பின்பற்றுதலுக்கு தடையாக இருப்பின் அவை தடுக்கப்படவேண்டும் என்பதே வழிகாட்டல். மார்க்கம் என்பதையும் மானிட வாழ்வியல் என்பதையும் நாம் வெவ்வேறாக நோக்கவேண்டிய இடங்களில் ஒன்றாக நோக்கியதும் ஒன்றாக நோக்கவேண்டிய இடங்களில் வெவ்வேறாக நோக்கியதுமே எம்முள் உள்ள பல சில்லறை பிரச்சினைகள் பெரும் பிரச்சினைகளாக தலைதூக்கி நிற்கின்றது.
அவ்வகையில் மேற்படி பிரச்சினையில் இருந்து....
பதில் அளிப்பதனாலோ அல்லது வாழ்த்து கூருவதனாலோ நன்மை, தீமை பதியப்படுமா? என்றால் இல்லை....
காரணம் உங்கள் நோக்கம் அவருக்கு பதில் அளிப்பதே....
அந்தவகையில் இன்றுள்ள பலர் Good Morning என்று கூறுகிறார்கள். அதற்கு பதில் நீங்களும் அவ்வாறே கூறுகிறீர்கள். Hi, Hello, Good Job, Good Work என்றெல்லாம் பல வாழ்த்துக்கள் கூறுகிறீர்கள். இவைகளை இந்த சமூகத்தின் காவலர்கள் எவ்வாறு நோக்கு கின்றார்களோ அவ்வாறு இதனையும் நோக்கினால் பிரச்சினைக்கு "."
பெரிதாக மார்க்கம் கதைக்கும் இஸ்லாமியர்களை எடுத்துக்கொள்வோம் எத்தனை நபர்கள் முறையாக சலாம் கூறுகிறாகள். அல்லது உற்றார் உறவர்கள் இடத்தில் முறையாக உறவு பேணுகிறார்கள், அல்லது ஜீவகாருண்யம் தான் செய்கிறார்கள்....சீ பேசினால் வாய் கூசும்.
ஸலாத்தை கூட தங்களை சார்ந்தோருக்கு கூறும் சார்பு மனிதர்கள் தங்களின் பண்பாடுகளால் வளர்க்கப்பட்ட இஸ்லாத்தினை குழிதோண்டி புதைத்து விட்டார்கள் தங்களின் ஒருதலைப்பட்சமான பத்வாக்கள் மூலம்.....
ஆக எண்ணங்களை கொண்டே கூலி.... என்பதில் நீங்கள் தெளிவாக இருப்பின் பல பிரச்சினைகளுக்கு நீங்களே தீர்வு காணமுடியும் உங்களிடம் உள்ள பல்துறை அறிவினையும் ஆலோசனைகளையும் கொண்டு.....
அல்லாஹாவே_அறிந்தவன்.
No comments:
Post a Comment