
முதலில் மண்புழுவின் இதயம் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக நாம் இதயம் என்றால் மன்மதன் அம்பு பாயும் ஒரு இதய இலட்சினையை நினைவில் வைத்திருப்போம். அதுபோக மனித இதயம் பற்றி சமகாலத்தில் உள்ள அனைவரும் அறிந்து இருக்க வாய்ப்புண்டு. அவ்வாறான அமைப்பாகவா மண்புழுவின் இதயம் என்று எண்ணினால் உண்மையில் தவறான சிந்தனை. அதனை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள்.
இதய விருத்தி
இதயத்தின் பிரதான தொழில் குருதியை பம்புதல். ஆகவே அவ்வாறான வேலையை செய்ய அங்கிகளின் உடல் பருமன் முக்கியமான செல்வாக்கை செலுத்தும். பொதுவாக முள்ளந்தண்டிளிகள் கணத்தில் உள்ள அங்கிகள் யாவும் சிறியவை. எனவே அவற்றுக்கு குருதியை விநியோகிக்க விசேட இதயம் என்ற அமைப்பு உண்மையில் தேவையில்லை.
மண்புழுவின் இதயம் எவ்வாறு?
முதலில் இதயம் என்ற அமைப்பு உருவாகிய கூட்டம் என்றால் மண்புழுக்கள் தான். அதாவது தலையை அண்மித்த பகுதியில் ஐந்து குழாய் வடிவ அமைப்பு காணப்படும். இதனையே இதயம் என்று அழைக்கிறோம். ஆனால் இதன் தொடர்ச்சி உடலில் ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும். அதாவது மண்புழுக்களின் உடல் துண்டுபட்டு பல உடல் அறைகள் காணப்படும். ஒவ்வொரு அறைக்கும் சிறிய சிறிய குருதியை பாம்பும் கலன்கள் காணப்படும். இவ்வாறான அறைகள் பல நூறு காணப்படுகின்றது. இதனாலேயே மண்புழுக்கள் 1000 இதயங்கள் கொண்டவை என்று வர்ணிக்கப்படுகின்றது.
மண்புழு உடலில் உள்ள முடிச்சி என்ன?

எனவே மண்புழுக்களுக்கு 1000 இதயம் என்று கூறுவதிலும் பார்க்க 5 இதயம் என்று கூறினால் சற்று பொருத்தமாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
மேலதிக தகவல்
மண்புழுக்கள் சிறந்த மண் வளமாக்கி. அதாவது இவை வாழும் சூழலில் அதிக சேதன வளமாக்கிகள் உயிர்பிக்கப்படும். அத்தோடு மண்ணில் காற்று இடைவெளி அதிகரிப்பதனால் தாவர வளர்ச்சிக்கு உதவும். இரசாயன வளமாக்கிகள் பயன்பாடு காரணமாக மண்புழுக்கள் அழிவுற்று வருகின்றது. இவற்றில் மேல் தோள்களினால் சுவாசிக்கும். மண்புழுக்களின் உடல் அசைவு அவை உடலினுள் கொண்டுள்ள நீர்நிலையியல் வண்கூடு (Coelomic fluid) மூலமாக நடைபெறும்.
தேடல் வலைதளங்கள்
https://www.quora.com/How-many-hearts-does-a-earthworm-have
https://en.wikipedia.org/wiki/Earthworm
https://www.naturewatch.ca/wormwatch/how-to-guide/anatomy/
https://sciencing.com/many-hearts-earthworm-have-4597386.html
No comments:
Post a Comment