
இருண்டகால ஐரோப்பிய மக்களைச் சிந்திக்க விடாமல் செய்தது கிறிஸ்தவ மதம்.
இந்தியாவிலே பார்ப்பன மதபோதகர்களால் விநியோகம் செய்யப்பட ஹிந்துத்துவம் என்ற அபின்தான் அங்குள்ள சாதிக்கொடுமைகள் இன்னும் நிலைத்திருப்பதற்கான அடிப்படைக்காரணம். சாதிக்கொடுமைகளுக்கு எதிராகச் சிந்திப்பதே தெய்வகுற்றம் என்ற நம்பிக்கையில் இருக்கின்ற ஒரு சமூகம் அப்படி சுதந்திரம் பெறும்?
இலங்கையிலே பெளத்த மதத்தை அபினாக்கம் செய்கின்ற முயற்சியில் பொதுபலசேனா களமிறங்கியிருக்கின்றது.
இன்றைய எமது ஆலிமுக்களும் மார்க்க போதகர்களும் போதிக்கின்ற அத்தனையையும் எதுவித கேள்விகளுக்கும் உட்படுத்தாமல், அப்படியே உள்வாங்குவது அபின் விழுங்குவதற்குச் சமன்.
"வாசிப்பீராக!" என்ற வசனத்துடன் ஆரம்பித்த, நூற்றுக்கணக்கான தடவைகள் "நீங்கள் சிதிக்கமாட்டீர்களா?" என்று கேள்வி தொடுக்கின்ற குர்ஆனைக் கைவசம் வைத்திருக்கின்ற முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் அபின் விநியோகம் செய்கின்ற மதகுருக்களும், சுவைக்கின்ற பக்தர்களும் நிறையவே இருக்கத்தான் செய்கின்றார்கள்.
மக்களைச் சிந்திக்காமல் வைத்திருப்பதன் மூலம் நன்மை அடைபவர்கள் இரு வர்க்கத்தினர்: ஒருவர் அரசியல்வாதிகள்; மற்றவர் மதகுருக்கள். வரலாற்று ரீதியாக நோக்கின் இந்த இரு வர்க்கத்தினரும் மக்களை ஏய்த்துப் பிழைத்திருப்பதை நாம் அவதானிக்கலாம்.
அபின் போன்ற போதைப்பொருட்கள் மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடிக்கின்றன. சிந்தனையை மழுங்க வைப்பது சிலருக்குப் பேரின்பம். அதனால்தான் சிலர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்றார்கள்.
இயற்கையிலேயே சிந்திக்கின்ற ஆற்ற குறைந்தவர்கள் மீது போதைப்பொருட்களின் ஆதிக்கம் மிக அதிகமாகவிருக்கும். இதனால்தான் ஆத்மீக போதை விநியோகம் செய்கின்ற வியாபாரிகளிடத்தில் அறிவீனர்கள் நிறைந்திருப்பதைக் காணலாம். இதற்கு எந்த மதத்தினரும் விதிவிலக்கல்ல.
இஸ்லாத்தின் பார்வையில் சிந்திப்பது ஒரு வணக்க வழிபாடு. சிந்திப்போம்! சொல்லப்படுவது எதுவானாலும் கேள்விக்குட்படுத்துவோம்!
அபலா எத தக்கரூன்? அபலா யத தப்பரூன்? அபலா யஅ'கிலூன்? அபலா யன்ழுரூன்? என்கின்ற, குர்ஆனில் நிறைந்து கிடக்கின்ற, சிந்திக்கமாட்டீர்களா? என்ற இறைவனின் கேள்விக்கு பதிலளிப்போம்!
No comments:
Post a Comment