Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 15, 2018

தேடலின் எச்சங்கள்....

Image may contain: textஒவ்வொரு தலைமுறையும் அதன் சொந்த வரலாற்று பூர்வீகத்தை அறிந்திருத்தல் என்பது அந்த சமூகத்தின் ஒரு கடமைப்பாடாகும். ஆனாலும் நவீன உலகின் இயந்திரங்களுடன் பிண்ணிப்பிசகிய வாழ்க்கை முறைமை சார்ந்து மானிடப்பயணங்கள் காரணமாக பல பாரம்பரிய மரபுகள் சார்ந்த சுவடுகள் மற்றும் ஆதாரங்களை அடையாளம் காண்பதையும் அவற்றை பற்றி நினைவூட்டுவதையும் மறந்துவிட்டோம் எனலாம். இவற்றுக்கு அப்பால் தலைமுறை இடைவெளி பாரிய செல்வாக்கை மேற்படி சான்றுகள் சார்ந்த தேடல் மற்றும் சேகரிப்பில் செல்வாக்கு செலுத்து வருகின்றதனை சமகாலத்தில் நன்கு உணரமுடிகின்றது. 
Image may contain: 1 person, text and outdoorகடந்தகால எம்மவர் மூதாதையர் பயன்பாட்டில் இருந்த பல வரலாற்று சுவடுகள் பல பராமரிப்பு அற்று மங்கி அழிந்தே போய் விட்டது. ஆனாலும்  ஒருசிலவற்றின் எச்சங்கள் மட்டும் இன்றளவும் காணமுடிகிறது. அவற்றினை ஆவணப்படுத்தில் இன்றுள்ள தலைமுறைக்கு கையளித்த ஒரு வரலாற்று ஆய்வாளன் ஓய்வுநிலை நூலகர் முபாறக் அவர்களின் தேடல் மற்றும் ஆவணப்படுத்தல் முயற்சிகள் என்பன பாராட்டத்தக்கவை. 
நவீனத்துவ தொடர்பாடல் முறை மற்றும் இயந்திர உலகத்தின் அறிமுகத்திற்கு முன்பாக ஒருசில இயந்திரங்கள் மற்றும் செயற்பாட்டு தளங்கள் என்பன அன்றுள்ள சந்திகளிற்கு ஆச்சரியமூட்டும் வியப்பான காரணியாக மக்கள் மத்தியில் பிரசித்திபெற்று திகழ்ந்தது. ஆனாலும் பிற்பட்ட காலத்தில் இவற்றின் செல்வாக்கு மழுங்கி போனதோடு மட்டுமன்றி அவை நவீனத்துவ மயமாக்கம் பெற்றதனால் மானிடர்கள் மத்தியில் அவ்வளவாக கண்ணியம் பெற வாய்பளிக்கப்படவில்லை.  
Image may contain: 2 people, textNo automatic alt text available.பல்வேறு இடர்பாடுகள் மத்தியல் இவ்வாறான தகவல்களை ஆவணப்படுத்த அன்றுள்ள தலைமுறையில் சிலர் முன்வந்துள்ளமை காரணமாக இன்றுள்ள எமக்கு ஒருசில சுவடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனாலும் இன்றைய தலைமுறையில் வரலாற்று ஆவணப்படுத்தலில் பாரிய வறட்சி நிலவுகின்றது. இம்மனநிலை மாற்றியமைக்கப்படவேண்டிய ஒரு முக்கிய மானிடவியல் சவாலாக எழுந்துள்ளது. அத்தோடு மார்கத்தில் பிணைக்கப்பட்ட சில வரம்பு வரையறைகள் எல்லை மீறுதலும் ஆகாதவாறு எமது ஆவணத்தொகுப்பு மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு என்பன முன்னெடுக்கப்படவேண்டும். இவற்றுக்கு இன்றுள்ள தலைமுறையின் ஒருசிலர் முன்வரவேண்டியது காலத்தின் அடிப்படை வேண்டப்பாடாக எழுந்துள்ளது. 
Image may contain: text and outdoorImage may contain: textகலாசார பாரம்பரிய பண்பாட்டு சான்றுகள் என்பன எமது இருப்புக்கான அடுத்த தலைமுறைக்கு விட்டுசெல்லும் ஒரு புதையல். ஆனால் நாம் அவற்றை அழிப்பதிலும் சேதமாக்குவதிலும் முனைப்போடு இயங்கி வருவது என்பது எமது வறட்டு சிந்தினையின் வெளிப்பாட்டையும், வரலாற்று சார்ந்த எமது சிந்தனை ஊனத்தையும் பறைசாற்றி திகழ்கின்றது.  

அந்தவகையில் சில சுவடுகள் முற்றாக அழிக்கப்பட முன்னர் ஆவணப் புகைப்படமாக சிலவற்றை இங்கே காணமுடியும். இவற்றுக்கு மேலாக நீங்கள் அறிந்தவை ஏதும் தவறவிடப்பட்டு இருப்பின் அவற்றையும் அறியத்தந்து உதவிடுங்கள் எம்மூரின் ஆவணத் தொகுப்பிற்கு.... 
Image may contain: outdoor and textImage may contain: textImage may contain: textImage may contain: text, outdoor and waterImage may contain: text and outdoorImage may contain: text and outdoorImage may contain: ocean and textImage may contain: text, outdoor and natureNo automatic alt text available.Image may contain: textImage may contain: text and outdoorImage may contain: text

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages