
சில தாவரங்களை நீங்களே சூழலில் அவதானித்து இருப்பீர்கள். உதாரணமாக புளிய மரம், வாகை மரம், அகத்தி மற்றும் சில பூண்டுத் தாவரங்கள் மாலை வேளை ஆனதும் தங்களின் இலைகளை மூடிக்கொள்ளும். இதனை சிலர் தாவரம் தூக்குகின்றது என்று கூறுவார்கள். அவ்வாறான தாவரங்கள் தங்கள் இலைகளை மெதுவாகவே மூடும் செயற்பாட்டை காண்பிக்கும். ஆனால் தொட்டால்ச் சுருங்கி தாவரங்கள் ஏதாவது சூழலில் உண்டாகும் அதிர்விற்கு சடுதியாக இலைகளை மடிக்கும் திறன் பெற்றுள்ளது. அது எவ்வாறு அவ்வளவு வேகமாக மடிக்கின்றது என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா???
வேகமாக மடிக்கும் பொறிமுறை
தொட்டால்ச் சுருங்கி இலைகளை ஒரு பிரிக்கப்பட்ட கூட்டு இல்லை என்று கூறலாம். அவற்றின் இலைகளை நன்கு நோக்கினால் இலைகளின் இலைக்காம்பு சற்று தடிப்படைத்து புடைத்து காணப்படும். இலைகள் சுருங்கும் போது குறித்த புடைத்த பகுதிகளின் நடைபெறுவதை காணலாம். இலைகளை மடிக்கும் பொறிமுறை அந்த புடைத்த பகுதியில் தான் நடைபெறுகின்றது.


இதற்கு அதிர்வின் பெறுமானம் செல்வாக்குச் செலுத்தும். பின்னர் மடிப்படைந்த இலைகள் மீண்டும் இயல்புநிலை அடைய மெதுவாக அயன் கரைசல் பரிமாற்றம் கீழ்பகுதி கலங்களிற்குல் நடைபெற தொடங்கும். இலைகள் விரிவடையும்.
வேறு தாவரங்கள்
தொட்டால்ச் சுருங்கி தாவரத்தை போன்று பூச்சி உண்ணும் தாவரங்கள் (Carnivorous Plant) என்று அழைக்கப்படும் நைதரசன் தேவைக்காக சிறிய பூச்சிகளை சிறைப்பிடித்து அலுகலடையச் செய்யும் தாவரங்களான நெப்பந்திசு, சாரசீனியா, டார்லிங்டோனியா, திரோசிரா போன்றவை பூச்சிகளை சிறைப்பிடிக்க இவ்வறானதொரு மிகை அசைவு மற்றும் உணர்திறன் காட்டும் தாவரப் பாகங்களை கொண்டுள்ளது.

உயிரினக் கூர்ப்பில் நரம்புத்தொகுதிகள் என்பதே கணத்தாக்க கடத்தல் செய்தியை பரிமாற்றம் செய்யும் என்று நாங்கள் கற்றுக்கொண்டு இருப்போம். இந்த நரம்பு தொகுதி அமைப்பு விலங்குகளில் விசேடம் அடைந்துள்ளது. ஆனாலும் தாவரங்களின் இவை சற்று வித்தியாசமாக தொழிற்படுகின்றது.
தேடல் வலைதளங்கள்
https://backyardbrains.com/experiments/Plants_SensitiveMimosaPudica
https://en.wikipedia.org/wiki/Carnivorous_plant
https://slideplayer.com/slide/13377563/
https://www.shutterstock.com/video/search/shameplant
No comments:
Post a Comment