Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, December 11, 2018

முருங்கைக்காயும் உடலியல் நன்மைகளும்

Image result for murungakkaiநமது மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒரு எண்ணம் முருங்கைக்காய் ஒரு ஆரோக்கியமான உணவு என்பது. இது உண்மைதான் ஆனால் இதில் நன்மைகள் மட்டுமே இல்லை என்பதுதான் உண்மை. இந்த பதிவில் முருங்கைக்காயால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.
வீக்கத்தை குறைக்கும்
இதில் உள்ள பீட்டோ கரனைடு, வைட்டமின் சி மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்றவை வீக்கத்தை கட்டுப்படுத்தும் பண்பு கொண்டவையாகும். குளோரோஜெனிக் அமிலம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஏற்ற, இறக்கங்களை சமநிலை செய்து வீக்கங்களை குறைக்கும்.
எலும்புகளை வலுவாக்கும்
முருங்கைக்காயில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. முருங்கைக்காய் சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் மூட்டுகளில் ஏற்படும் முறிவுகளையும் விரைவில் குணமாக்குகிறது.
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்
முருங்கைக்காயில் உள்ள பினோலிக் மூலக்கூறுகளான குவாட்டசின் மற்றும் காம்பெஃபெரால் புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கக்கூடியது. நியாமிஸின் என்னும் இதில் உள்ள ஒரு பொருள் உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் வளருவதை தடுக்கிறது. குறிப்பாக முருங்கைக்காய் சாப்பிடுவது தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படமால் உங்களை பாதுகாக்கிறது.
Image result for brain
மூளை ஆரோக்கியம்
முருங்கையில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி உங்கள் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க உதவுகிறது. உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமான செரோடோனின், டோபமைன் மற்றும் நோரர்டேன்லைன் போன்ற அத்தியாவசிய பொருட்களை முருங்கைக்காய் வழங்குகிறது. இது உங்கள் நினைவாற்றல், மனநிலை மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

கல்லீரலை பாதுகாக்குகிறது
நமது உடலின் மிகமுக்கியமான ஒரு உறுப்பு என்றால் அது கல்லீரல்தான். ஏனெனில் இதுதான் நம் வளர்ச்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்துவதோடு இரத்த சுத்திகரிப்பையும் செய்கிறது. மேலும் இது பிப்ரோசிஸ் பாதிப்பை குறைப்பதுடன் கல்லீரலில் புரோட்டினின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இத்தனை நன்மைகள் இருந்தாலும் முருங்கைக்காயில் பல பக்கவிளைவுகளும் உள்ளது.
அதிக நார்ச்சத்து ஆபத்தானது
முருங்கைக்காயில் நார்ச்சத்து அளவு அதிகம் உள்ளது. நார்ச்சத்து உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அது அதிகளவில் உடலில் சேர்வது ஆபத்தானதுதான். அதிகளவு நார்ச்சத்து உடலில் சேரும்போது வயிற்றுப்போக்கு, மலசிக்கல், குடல் பிரச்சினைகள், வாயுக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதல்ல
அதிகளவு முருங்கைக்காய் சாப்பிடும்போது அது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கிறது. இதனால் ஹைப்போக்ஸிசிமியா என்னும் நோய் கூட ஏற்படலாம். சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் முருங்கைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
Image result for கர்ப்பிணிஅலர்ஜிகள்
முருங்கைக்காய் என்னதான் ஆரோக்கியமான காயாக இருந்தாலும் அது சிலருக்கு ஏற்றதாக இருக்காது. ஏனெனில் இதில்உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களுக்கு முருங்கைக்காயால் அலர்ஜிகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகஅதிகம்.

ஹைப்போடென்ஷன்
ஹைப்போடென்ஷன் என்பது இரத்த அழுத்தத்தை மிக அதிகளவில் உயர்த்தும் ஒரு குறைபாடு ஆகும். இதனால் உலகம் முழுவதும் பலரும் பாதிக்கப்ட்டுள்ளனர். ஹைப்போடென்ஷன் இதய ஆரோக்கியத்தை பாதித்து மாரடைப்பு வரை கூட ஏற்படுத்தும். முருங்கைக்காய் ஹைப்போடென்ஷன் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். ஆனால் இதில் உள்ள பாதிப்பு என்னவென்றால் மிக அதிக அளவில் குறைக்கும். அதனால் மயக்கம், தலைசுற்றல், குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் அவை கர்ப்பிணிகளுக்கு சிலசமயம் அலர்ஜிகளை ஏற்படுத்தும். மேலும் கருவில் உள்ள குழந்தையும் இதனால் பாதிக்கப்படலாம்.

Reference
https://www.facebook.com/healthcare.mutur/posts/147072839570753

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages