
"மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்" (அல்குர்ஆன் 2:213)
சமகாலத்தில் அதிக பரவலாக்கம் பெற்றுள்ளது காரணியே இஸ்லாமிய சிந்தனை எழுச்சி. கருத்தியல் ரீதியான இஸ்லாமிய சிந்தனை முன்வைப்பு உலகளாவியரீதியான பாரிய மாற்றத்தை உண்டாக்கிவரும் நிலையில் கீழத்தேய தெற்காசிய நாடுகளில் மாத்திரம் ஒருவகை புறம்போக்கு சிந்தனை வறட்சி நிலவிவருகிறது.
ஆய்வு, தேடல், கிடைக்கபெற்ற ஆதாரங்கள் மற்றும் சிந்தனை விரிவாக்கம் என்பன பொதுவாகவே ஒவ்வொரு தனியனின் கருத்து ரீதியான பல்வகைமைக்கு வழிகோலும். ஆனாலும் பாரம்பரிய சிந்தனை கலாசாரத்தோடு இவற்றை ஒப்புதல் செய்து முரண்பாட்டு அணுகுமுறையில் எடுகோள்கள் கொள்ளப்படுவது அவ்வளவாக ஆரோக்கியமான சிந்தனை பரிணாமம் இல்லை என்று கூறலாம்.
குறிப்பாக தனிமனித ஆய்வின் தனிமனித சிந்தனை மொழிவு என்பதை எவ்வாறு நோக்கவேண்டும் என்பதை இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது. மாறாக தனிமனித கருத்துக்களை கருத்தியல் ரீதியான மோதல்களிற்கே வழிகோலவேண்டுமே தவிர தனிமனித நடத்தை ரீதியான அணுகுமுறை மோதல்களிற்கு இட்டுச்செல்லல் கூடாது.
ஆகக்குறைந்தது என்ன கூறப்படுகின்றது என்பதையாவது சற்று அமைதியாகவும் நிதானமாகவும் நின்று சிந்தித்து பார்க்கலாம். ஆனால் இங்குள்ள பலர் குறித்த நபரின் சிந்தனையை நோக்குவதே இல்லை. இதற்கு மாறாக நபர் எந்த பின்னணியை சார்ந்தவர் என்ற சிந்தாந்த புதுமை எடுகோளைக்கொண்டு நோக்குவது முதல் தரம்பிரித்தல் ஆகின்றதனால் பல நடைமுறை சாத்தியாமான நல்யோசனைகள் சமூக அரங்கில் பரவலாக்கம் செய்வதில் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கின்றதனை அவதானிக்க முடிகிறது.
அண்மைக்கால இஸ்லாமிய இயக்கங்களும் சரி கொள்கை வகுப்பாரும் சரி ஒரு மனிதனை கருத்தை கருத்தாக நோக்கி அவற்றை பரிசீலனை மேற்கொள்ளது குறித்த கருத்தை முன்வைத்த நபரை பரிசீலனை செய்து சிந்தனை முறையடிப்பையும் செயற்பாட்டு முடக்கத்தை அமிழாக்க எத்தனிக்கின்றமை.
No comments:
Post a Comment